"யேகோவாவின் ஏழு கூட்டு நாமங்கள்" THE SEVEN COMPOUND NAMES OF JEHOVAH 55-0120 விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், யாவும் கைகூடிடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள் விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள் யாவும் கைகூடிடும், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள். இப்போது, ஜெபத்திற்காக, சற்றுநேரம் நின்ற வண்ண மாகவே இருப்போம். பிதாவே, இங்கே சிகாகோவில் (Chicago), கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக அதிசயம் நிறைந்த இந்த கூடுகைக்காக இந்த இரவில் எங்கள் இருதயத்தின் ஆழங்களிலிருந்து உமக்கு நன்றி கூறு கிறோம். இந்த ஜனங்களுக்கு முன்பாக உம்மை பிரதி நிதித்துவப்படுத்த நாங்கள் எடுத்துக்கொண்ட பிரயாசங் களை ஆசீர்வதியும் என்று ஜெபிக்கிறோம். இந்தக் குளிரையும், வெளியே வீசுகின்ற பனிப்புயலையும் பார்க்கையில், வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறதான ஜனங்கள், சுகமாக்கப்படுவதற்காக இங்கே இந்த இரவில் ஒன்று கூடியுள்ள ஜனங்களை... பகல் வேளை முழுவதும் அவர்களுடைய கடிதங்களை படித்ததும், இவர்கள் உதவிக்காக முறையிடுவதைக் கேட்பதும், பிதாவே, எங்கள் உள்ளத்தை கலக்கமடையச் செய்கிறது. அவர்கள் அந்தக் கடிதங்களை எழுதும் போதே, நீர் அதை காண்கிறீர் என்பதில் நிச்சயமுடையவனாக இருக்கிறேன். அவைகள் இங்கு வந்து சேர்ந்த போது, அவைகள் எனக்கு ஏற்படுத்தின உணர்வுகளையும், அதற்கான பதில்களையும், அதற்கு உதவும்படி நாங்கள் எடுத்துக் கொண்ட எல்லா முயற்சிகளையும் நீர் காண்கிறீர். பிதாவே, இந்த இரவில் எங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதியும். உம்முடைய ஆவி இங்கிருப்பதாக, நாங்கள் செய்கிற எல்லாவற்றையும் உம்முடைய ஆவியானது அங்கீகரிப்பதாக.. ஒவ்வொரு காரியத்தின் மீதும் தெய்வீக வழிநடத்துதலுக்காக நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். அமருங்கள், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 2. இந்த இரவில் இந்த அரங்கத்தில் இருப்பதற்காக இரண்டு மடங்கு மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறேன். இங்கே நமக்கு சில கடிதங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். சிலர் அவைகளை பில்லிபாலிடத்தில் (Billy Paul) கொடுக்கிறீர்கள். அவைகளை அவன் எப்போதும் என்னிடத்தில் கொடுக்கிறான். நாங்கள் அதைப் பாராட்டு கிறோம். பின்பு இங்கிருக்கிற சிலர்... இந்த இரவில், தொடங்குவதற்கு முன்பாக... நான் இறுதி ஜெபத்தை ஏறெடுக்கும் போது, சில வேளைகளில், இந்தக் கடிதங் களை, நான் அவைகள் மீது கைகளை வைக்க வேண்டு மென்று, இந்தக் கடிதங்களை அவர்கள் இங்கே வைத்து செல்வதை நான் கண்டிருக்கிறேன். அவைகளை உங்களுக்கு கொடுப்பதற்கு முன்பதாக, அவைகளுக்கு நான் தனித்தனியாக ஜெபிக்க விரும்புகிறேன். ஏதாவது நாங்கள் உங்களுக்கு உதவி செய்யக் கூடுமானால், அதற்காகத்தான் நாங்கள் இங்கிருக்கிறோம். அது உங்கள் முழு இருதயத்தோடும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நேசிப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்யும் முயற்சியாகும். சற்று நேரத்திற்கு முன், கீழே அமர்ந்திருக்கும் ஒலிநாடாவில் பதிவு செய்யும் தொழில் நுட்பவியலாளரை கவனித்து கொண்டிருந்தேன். இந்த ஒலிப்பதிவுகளை செய்வதற்கு ஏதுவாக இன்றிரவு அவைகளின் முழு அமைப்பும் அங்கே உள்ளது. நல்லது, அது மிகவும் சிறந்தது. நாம் – நாம்... சிகாகோவில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டியது இருந்தால், நாம் நீண்ட, நீண்ட, நீண்ட நாட்களுக்குத் தங்க விரும்புகிறோம். உண்மையாகவே இந்த... இந்த முறை நாம் நெடுநாள் தங்கமுடியாது.. நாங்கள் திரும்பவும் சபைக்குச் செல்ல வேண்டும். இந்த அரங்... குறிப்பிட்ட கால அவகாசத்திற்கென இந்த அரங் கத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. (pre-rented) இதைப் பெற்றுக் கொள்வதில் கடினமாக இருந்தது, ஆனால் நாம்... 3. சகோதரன் ஜோசப்பும் (Bro. Joseph) நானும் இன்று அதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இப்பொழுது நாம் துவங்குகிற இந்த கூட்டங்கள் முடிவடைந்து வெளியேறின உடனே, அங்கே வேறு ஒரு கூட்டதிற்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருக் கிறார். நாங்கள் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் (Hot Springs), லிட்டில் ராக் (Little Rock), போகிறோம், பின் அங்கிருந்து ஷ்ரெவ் போர்ட் (Shreveport), லப்போக் (Lubbock), டெக்சாஸ் (Texas), ஃபீனிக்ஸ் (Phoenix), அரிசோனா (Arizona), லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles), டாகோமா (Tacoma), வாஷிங்டன் (Washington) செல்கிறோம். பின்னர் அங்கிருந்து கால்கரி (Calgary), எட்மண்ட்ன் (Edmonton), கிரேண்டே பிரய்ரி (Grande Prairie), டாஸன் கிரீக் (Dawson Creek), செல்கிறோம், பிறகு அங்கிருந்து- அயல்நாடுகளில் நடக்கும் கலந்துரையாடல் கூட்டங்களுக்குச் செல்கிறோம். அந்தச் சமயத்தில் நாங்கள் திரும்பி வரநேர்ந்தால்... உண்மையாகவே, வெகு சீக்கிரத்தில் எங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை ஒவ்வொரு வரும் அறிந்திருக்கிறீர்கள் என்று அனுமானிக்கிறேன். அது மார்ச் அல்லது மே மாதத்தில் நடக்க வேண்டும். மேலும் நாங்கள்... அந்த சமயத்தில் நான் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது அது முடிந்தவுடன், தேவனுக்கு சித்தமானால், நான்–நான் மறுபடியும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். நான்... ஏதோ ஒன்று என் இருதயத்தில் இருக்கிறது, அதைத் தவிர்க்க முடியாதவனாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் "பில்லி பிரன்ஹாம் இங்கே கவனி, நீ வீட்டிலே தரித்திருக்கவேண்டும்" என்று என்னை நானே தேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். (பாருங்கள்?) ஆனால் ஏதோ ஒன்று என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து கொண்டு "இல்லை" என்று கூறுகிறது. மேலும் நான்– நான் உதவிசெய்ய முடியாதவனாக இருக்கிறேன். உங்களால் அதை புரிந்துகொள்ள கூடுமானால், நண்பர்களே, உங்களுக்கு ஏதோ ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன்... நாம் சிகாகோவை எடுத்துக்கொள்வோம். இங்கிருப்பது போலவே அமெரிக்கா தேசம் முழுமையும் இருக்கிறது. மிகச்சிறந்த ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. எந்த இடத்தைக் குறித்தும் எதிரான கருத்து எனக்கில்லை. அவர்கள் அனைவரும் அன்புள்ளவர்கள். நான் எங்கே போனாலும் ஜனங்கள் என்னை நேசிக்கிறார்கள், சற்றுநேரத்திற்கு முன்புகூட, நீங்கள் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றீர்கள். நான் சற்றே... நான் உங்களோடு அமர்ந்து, என்றென்றும் இங்கேயே தங்கி விடலாம் போல, என்னுடைய உள்ளத்தின் ஆழத்தில் அப்படிப்பட்ட உணர்வை உண்டாக்குகிறது; ஆனால் என்னால் முடியாது. அது... நாம்... நான் சிறு பையன் அல்ல, அங்கே அநேக காரியங்களை செய்ய வேண்டி யதாயிருக்கிறது, எல்லாவற்றையும் என்னால் செய்து முடிக்க இயலாது, ஆனால் என்னுடைய பங்களிப்பை நான் செய்தாக வேண்டும். நான் சொல்கிற காரியம் புரிகிறதா? 4. நான் இதைக் கூறப்போகிறேன், மேலும் நான்... நான் தவறாக கூறினேன் என்றால் தேவன் என்னை மன்னிப்பாராக. ஏனென்றால், இதை என் முழு இருதயத் தோடும் கூறுகிறேன், அமெரிக்கா தேசம், தேசிய அள வில் சொல்வோமேயானால், அது ஒரு எழுப்புதலுக்கு ஆயத்தமாயில்லை. அந்த நாட்களை அவர்கள் கடந்து போகச் செய்துவிட்டார்கள். பாருங்கள்? இன்று காலை சகோ. ஜோசப் என்னிடம், "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் திரும்ப வரும்போது நாங்கள்..." என்று பேச முயற்சித்ததை கவனித்து கொண்டிருந்தேன். பாருங்கள்? அவ்வாறு அவர் சொல்லி யிருக்கலாம். என்னுடைய சிறிய ஸ்வீடிஷ் சகோதரன் மேடையில் அமர்ந்திருக்கிறார் என்பதற்காக இதை நான் கூறவில்லை. இல்லை ஐயா. ஆனால், நான் அவரை நேசிக்கிறேன். எங்களுடைய ஐக்கியத்தை தக்க வைப்பதற்கு நான் கடந்து வந்த பாதையை உங்களில் அநேகர் அறிந்திருக்கிறீர்கள். எங்கள் இருவருடைய ஐக்கியம் என்பதற்காக அல்ல, ஆனால் மற்ற அனை வருக்காகவும். ஆனால் ஜோசப் போஸ் (Joseph Boze) என்னுடைய நண்பர், கிறிஸ்துவுக்குள் என்னுடைய சகோதரன். அவரைக் குறித்ததான என்னுடைய கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு, இதுவரை செய்து வந்ததை விட மோசமாக அவர் செய்ய வேண்டியவராய் இருக் கிறார். நான் அவரை நேசிக்கிறேன். ஆகவே, நான்– நான் அவரை மெச்சுகிறேன். மேலும் அவரால்... அவர் வந்து, வீட்டிலே தங்கினார், ஒருவேளை வழிநெடுக வண்டி ஓட்டிக் கொண்டு வந்திருக்கலாம், அல்லது விமானம் அல்லது வேறேதாவது வழியில் வந்திருப்பார். மேலும் "சகோதரன் பிரன்ஹாமே..." என்றார். அவர் பேசும் சரளமில்லாத ஆங்கிலத்தை கேட்க, சிறு பிள்ளைகள் அந்த அறைக்கு வருவார்கள். உங்களுக்குத் தெரியுமே. மேலும், "எங்களுக்கு... சிகாகோவில் எங்களுக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். அங்கிருக்கிற ஜனங்கள் உங்களை நேசிக்கின்றார்கள். இப்போது, நீங்கள் எப்பொழுது வரப்போகிறீர்கள்? எப்பொழுது எங்களுக்கு மற்றுமொரு கூட்டத்தை அளிப்பீர்?" நீங்கள் பாருங்கள்? அவர் அதிலேயே உறுதியாக இருந்தார். அவரது அழைப்பை உங்களால் நிராகரிக்க முடியாது. உங்களால் முடியாது... 5. நீங்கள் வெறுமனே, "நல்லது சகோதரன் ஜோசப் அவர்களே, நீங்கள் முன்பாக செல்லுங்கள். நான் – நான் வந்துவிடுவேன்" என்று சொல்லலாம். ஆனால் அவரோ, கிட்டத்தட்ட உங்களை அழைத்துச் செல்லும் வரை அதிலேயே நிலைத்திருப்பார். எனவே... ஆனால் நான் – நான் உண்மையாகவே அவரை நேசிக்கிறேன். அப்படியாக, இன்று காலையில் நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். "சகோதரன் ஜோசப்..." என்று நான் கூறினேன். அவர், "ஆனால், சகோதரன் பிரன்ஹாமே, உணர்கிறேன்..." என்றார். மேலும் அவர், "சற்றே சிந்தியுங்கள். கடந்த இரவில் குறைந்தபட்சம் இருபது ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள்" என்றார், மேலும் அவர், "இப்பொழுது, அது சுவிசேஷத்தினால் அல்ல, அதைக்காட்டிலும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும், இருபது பேர் கிறிஸ்துவினிடம் வந்தார்கள்" என்றார். நான் கூறினேன்... அவர், "சகோதரன் பிரன்ஹாமே, ஜனங்கள் ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொண்டு, ஒருவர் ஒளிவுமறைவாக வந்தால்கூட, பாருங்கள், அதைக் குறித்து எவ்வளவாய் அவர்கள் பெருமையடித்துக் கொள்கிறார்கள்! இங்கோவெனில், கர்த்தருடைய கிரியையைப் பார்த்தபின், இருதயத்தில் ஆழமாகக் குத்தப்பட்டு மனந்திரும்பிய இருபது பேர்கள், கத்திக்கொண்டும், அழுது கொண்டும் வருகிறார்கள்" என்றார். (பாருங்கள்) அதற்கு நான், "ஆம் சகோதரன் ஜோசப், நான் எப்படியாக அதை மெச்சிக்கொள்கிறேன் என்பதை தேவன் அறிவார். ஆனால், பாருங்கள், ஒரு இரவு தொடங்கி கூட்டங்கள் முழுவதும் சரியாக இங்கே அவர்கள் பங்குபெற்ற கூட்டங்களை அப்படியே வேறு இடங்களில் வைத்துப் பார்த்தால்–தென் ஆப்பிரிக்காவில் வைத்து, இந்தியாவில் அதை வைத்து, தீவுகளில் அதை வைத்து, அல்லது தென் அமெரிக்கா போன்ற இடங்களில் வைத்துப் பார்த்தால், எத்தனை ஆத்து மாக்கள் வந்திருப்பார்கள் தெரியுமா? கிட்டத்தட்ட ஐயாயிரம், ஒருவேளை இருபதாயிரம், முப்பதாயிரமாக கூட இருக்கலாம்" என்றேன். பாருங்கள்? ஒரே காரியம் தான். அதே காரியம் தான். 6. நல்லது, அவைகளில் அநேக இடங்கள் கிறிஸ்துவைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டதே யில்லை. முகாம் கூட்டங்கள் (campaigns) மூலமாக அங்கே செல்லும் அநேகமான சகோதரர்கள், அவர்கள் கிறிஸ்துவைக் குறித்து ஏதோ ஒன்றை அறிந்திருக்கிற ஜனங்களிடத்தில் போகிறார்கள், ஒரு வேளை அவர்கள் கத்தோலிக்கர்களாகவோ, லுத்தரன் அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றாகவோ இருக்கலாம், அப்படிப் பட்டவர்களுக்கு போதனை செய்கிறார்கள். ஆனால் என்னுடைய கூட்டங்களோ, கிறிஸ்துவை ஒருபோதும் கேள்விப்படாத ஜனங்களுக்கு பிரசங்கிப்பதாகும். பாருங்கள்? அவர்கள் தேவனைக் குறித்து ஏதோவொரு புரிந்து கொள்ளுதலை (conception) அவர்கள் பெற வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். நல்லது, ஆச்சரி யமான காரியமானது... பாருங்கள்? கிறிஸ்துவை ஒருபோதும் கேள்விப்படாதவர்களாய் இருந்தாலும், அவர்கள் வேதாகமத்தைக் குறித்து ஒன்றும் அறியாதவர்களாய் இருந்தாலும், வரங்கள் ஒரு வித்தி யாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. அதற்கு எல்லாமே ஒன்றுதான் (பாருங்கள்?) ஏனென்றால் அது தேவனு டையது, மேலும் அது ஜனங்களை இவ்விதம் ஆக்குகிறது, வகையறுத்தல் நடைபெறும் அந்த நேரத்தில், (the phenomenal side – extraordinary/ இயற்கைக்கு மேலான) ஜனங்கள், "என்னே! என்னே! அவர் எதைக்குறித்துப் பேசுகிறார்? நான் யார் என்றும், நான் என்னவாக இருந்தேன் என்றும், என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது, நான் எங்கிருந்து வருகிறேன், என்னுடைய ஜனங்கள் யார், இந்தக் காரியங்கள் யாவும் இவருக்கு எப்படித் தெரியும்?" என்கின்றனர். நீங்கள் பாருங்கள். அப்பொழுது அவர்கள் காண்கிறார்கள். 7. இப்பொழுது, ஆரம்பக் கட்டமாக சுவிசேஷத்தை பிரசங்கிக்க மாத்திரம் செய்கிற சகோதரர்கள், அருமை யான விதத்தில் அதை செய்கிற அவர்கள், இப்பொழுது இந்த மற்றக் காரியங்களையும் அவர்களால் செய்ய இயலும், அந்த விதமாக. நீங்கள் பாருங்கள். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் பேசுகிறேன், நான் என் சொந்த தேசத்திற்கு வந்து, ஒவ்வொருவருடைய கரத்தையும் குலுக்குவதை நேசிக்கிறேன், அதினிமித்தமே இயற்கை யாகவே என்னால் கூடுமானவரை ஒவ்வொருவருடனும் கரம் குலுக்குவதை விரும்புகிறேன். ஆனால், பின்னர் இந்தக் கூட்டங்கள் மற்றும் அதிசயிக்கத்தக்க ஆவியானது... ஆனால் உங்களிடத்தில் ஏதோ ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்க தேசத்தில் நடத்தப்பட்ட பிரசங்கங்களானது முழு உலகத்தையும், திரும்பவும் மனந்திரும்ப செய்வதற்குப் போதுமானதாக அமைந் துள்ளது. நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். தேசம் முழுவதும் சுற்றி திரிந்த சுவிசேஷகர்களை நோக்கிப் பாருங்கள். பில்லி கிரகாம் (Billy Graham), ஜேக் ஷூலர் (Jack Shuler), ஜேக்கி பெர்ச் (Jackie Birch), ஓ, மற்ற அனைவரையும் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ் (Oral Roberts), மற்றும் அநேக மகத்தான சுவிசேஷகர்கள், இங்கும் அங்குமாக தேசம் முழுவதும் சென்று, வலைவீசி, முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக, வலைவீசின அவர்களை நோக்கிப் பாருங்கள். 8. பின்பு அவர்கள் என்னை அழைக்கும் போது இறுகிய மேற்பரப்பு உண்டானதை போல (crust has set), கிறிஸ்தவர்கள் வருவது அவ்வளவு கடினமாய் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இழுக்க நேரிடுகிறது. நீங்கள் பாருங்கள்? ஜனங்களை அவ்வளவு எளிதாக எப்படி யாவது கொண்டுவர முடியாத அளவிற்கு அது அப்படிப் பட்ட கடினமான இடத்தைப் போன்று காணப்படுகிறது. அவர்கள் முதல் இரண்டு அல்லது மூன்று இரவுக் கூட்டங்களுக்கு வருவார்கள். அது அருமையானது. அவர்கள் தேவனின் தனித்துவத்தை (phenomena– extraordinary/ இயற்கைக்கு மேலான) பார்க்கிறார்கள். ஒரு நல்ல பிரசங்கியான ஓரல் ராபர்ட்ஸ், பில்லி கிரஹாம் அல்லது உண்மையாகவே பிரசங்கிக்கக்கூடிய சில சகோதரர்கள், அப்படிப்பட்ட சுவிசேஷகனின் பிரசங் கத்தைக் கேட்கின்றனர். அதன் பிறகு சில இரவுகள் அதில் களிகூருகின்றனர், ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிடுகிறது. கிரியைகளின் தனித்துவங்கள் (phenomenal of the working –extraordinary/ இயற்கைக்கு மேலான கிரியை), கர்த்தர் கிரியை செய்வது, எல்லாம் சரியாகத்தான் அமைகிறது. அது அருமையானது. பின்னர் அவர்கள், நல்லது, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அவ்வளவு சீக்கிரத்தில் அது அவர்களை விட்டு அகன்று விடுகிறது. பாருங்கள்? 9. பாருங்கள், அது பார்ப்பதற்கு... நாம் நேசிக்கக் கூடிய நம்முடைய தேசத்தின் மேல் ஏதோ ஒன்று காணப் படுகிறது. நான் நினைக்கிறேன், நம்முடைய நாகரீகமானது ஓரிடத்திற்கு வந்திருக்கிறது... தேவன் முன்னும் பின்னு மாக வலையை வீசி இழுத்து, அந்த விதமாக கிறிஸ்த வர்களை ஒன்றிணைக்கிறார். ஆனால், ஒரு எழுப்புதல் உண்டாகுமானால், அந்த எழுப்புதல் புறஜாதி தேசத்தில் உண்டாகும் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? அதைக்குறித்து அவர்கள் ஒன்றுமே அறியா திருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய எந்தவொரு பிரமாணத்தை குறித்தோ, மேலும் தற்போதைய வேத சாஸ்திரத்தை குறித்தோ ஒன்றும் தெரியாது. ஜனங்கள் இதையும் அதையும் போதிக்கிறார்கள். ஒருவர், "இப்போது, நான் காணட்டும்" என்று கூறினார். பாருங்கள், அது அவநம்பிக்கையை உண்டாக்குகிறது. அவர் அதை பத்திரிக்கையில் போடுவார். நான் உங்களுக்கு விரோதமானவன் அல்ல. நீங்கள் என்னு டைய சகோதரரும் சகோதரிகளுமாய் இருக்கிறீர்கள். ஆனால் வெளிஉலகத்தில், சிகாகோ அந்தப் பத்திரி கையை கையில் எடுக்கிறது. "விசித்திரமான காரியங்கள், வகையறுத்தல் (phenomenals), இது போன்ற காரியங் கள் எல்லாம் நடக்கிறதா? ஆஆவ்வ்வ்..." "ஏன், டாக்டர்.ஜோன்ஸ் அது வேறொன்றுமில்லை, மனோதத்துவமே அன்றி வேறில்லை என்று கூறினாரே!" பாருங்கள்? "நல்லது, நம்முடைய மேய்ப்பர், அது பிசாசினால் உண்டானது என்றாரே. அதைக் குறித்து எனக்கு எந்த காரியமுமில்லை." மற்றவர்களுக்கோ, அந்த அளவிற்கு அதைப் பார்ப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை: "ஏதோ ஒருவித மார்க்க சம்பந்தமான சப்தம்..." என்கிறார்கள். பாருங்கள்? இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்... அப்படிப்பட்டதான மனோபாவம். 10. ஆனால், அதே காரியத்தை வெளிநாட்டுப் பத்திரிகைகளில் காண்பியுங்கள், அது என்ன என்று முழுமையாக அறிந்து கொள்வதற்கு முழுதேசமே அந்த பக்கமாகத் திரும்பிவிடும். பாருங்கள்? அது தான் காரியம். அது தான் வித்தியாசம். பாருங்கள், நாம் செய்வதைப் போல அவர்கள் வந்து அதின் நிபுணத் துவத்தை கண்டு கொள்ளும் நோக்கில் அவர்கள் வருவ தில்லை. நல்லது, இன்றிரவு உங்களை தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அழைக்கிறேன். அது சரியே. நீங்கள் மிகவும் அருமையானவர்கள், அற்புத மானவர்கள். மேலும் நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இந்திய பயணத்தை உணர்கிறீர்களா, அங்கே ஆயிரக்கணக்கானவர்கள், ஆயிரமாயிரம் பேர், ஆயிரக் கணக்கானவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டனர், ஒரே தடவையில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர், அவர்கள் அனைவருமே புறஜாதிகள், அந்நிய தெய்வங்களை வணங்குபவர்கள். இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கிற நீங்கள், அந்தக் கூட்டங்களுக் காகப் பெரிய அளவில் நிதி உதவி அளித்தீர்கள் என்பதை உணர்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்தீர்கள். நான் திரும்பி வந்து கூட்டங்கள் நடத்தினேன்... என்னால் மாத்திரம் அந்த எளிமையான, சிறிய, பட்டினியும் பசியுமாயுள்ள, உண்ண எதுவும் கிடைக்காத நிலையில், தெருக்களில் கிடக்கிற, அந்த விதமான நிலையில், வெறுமனே பிச்சை எடுக்கிற நிலையில் உள்ள அவர்களுக்கு கொடுக்கும்படி திரும்ப என்னால் செல்லக் கூடுமானால்...! இருப்பினும் ஒரு காரியம் என்னவெனில், கர்த்தருடைய கிருபையின் ஒரு விசேஷித்த காரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் தங்களுடைய சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து நடந்து சென்று, கக்கத் தண்டங்களை கீழே எறிந்து விடுகின்றனர். நீங்கள் தரை முழுவதும் சென்று அவைகள் எங்கெங்கு கிடக்கின்ற னவோ அவைகளை பொறுக்கி எடுக்க வேண்டியதுதான்... அவ்விதமாக... அவ்விதமாகக் கிடக்கின்றன. அவைகள் அவ்விதமாக குவியல் குவியலாக குவித்து வைக்கப் பட்டு, கக்கத்தண்டங்கள், சக்கர நாற்காலிகள், மற்றுமுள்ள பொருட்களை வெளியே எடுத்து செல்கின்றனர். அவைகள் இனி ஒருபோதும் அவர்களுக்கு தேவைப் படாது. ஏதோ ஒன்று அவர்களைத் தொடுகிறது, அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர், சரியாக அவர்கள் அதில் கடந்து செல்கிறார்கள். பாருங்கள்? 11. கிறிஸ்தவ நண்பர்களே, அதன் காரணமாகவே, மற்ற பகுதிகளுக்குச் சென்று என்னுடைய நண்பர்களைக் காண முயற்சி செய்கிறேன் – மேலும், மேலும்... அது பணம் சேகரிப்பதற்காக அல்ல, அதற்காக இல்லை. அது என்னுடைய நண்பர்களைக் காண்பதற்காகவே. இப்போது, நான் ஒருவேளை இந்த இரவில், இக்கட்டான தேவை உள்ளவனாக இருந்தால், இங்கு இந்த அரங்கத்தில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று மனிதர்களிடத்தில் செல்வேன், அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், நான் பணம் பெறுவதற்குரிய வழி அதுவல்ல. பாருங்கள்? இந்த ஒருவரிடத்திலிருந்து நிக்கல் (nickel) (அமெரிக்க டாலரில் பத்தில் ஒரு பாகம்), அந்த ஒருவரிடத்திலிருந்து ஒரு டைம் [dime – 10 cent coin], மற்றும் இன்னொருவரிடமிருந்து ஐம்பது சென்ட்ஸ் [cents] பெறவே நான் விரும்புகிறேன். பாருங்கள், அந்த விதமாகத்தானே? அப்படித்தான் முழு குழுவினரும் அதனுடன் ஏதாவது ஒரு பங்களிப்பை பெற்றிருப்பார்கள். மேலும் வெளிநாட்டு ஊழியங்களிலிருந்து சற்றே இளைப் பாறுதல் பெறுவேன், திரும்பி வருவேன், மறுபடியும் புறப்பட்டுச் செல்வேன். நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்பதை புரிந்து கொண்டீர்களா? பாருங்கள்? மேலும் நான் உங்களை நேசிக்கிறேன்... நான்... அதில் ஒன்றும் இரகசியம் இல்லை. எனக்கு முன்னால் ஒன்று மேயில்லை, அல்லது யாராவது அதில் எதையாவது அறிந்து கொள்ள விரும்பினால். ஆனால், இவையாவும் வெளிப்படையாக உள்ளது. நான் பெற்றிருக்கிற எல்லாவற்றையும் ஜனங்களிடம் சொல்லுவேன், நான் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பென்னியையும் (penny -பைசா), அவைகள் யாவும் எங்கெங்கே போகிறது என்றும் கூறுவேன். அங்கிள் சாம் (Uncle Sam) என்பவர் என்னைக்குறித்துக் கூறுகிற சாட்சி இதுதான். அங்கே தான் என்னுடைய வங்கி இருக்கிறது, என்னுடைய குடும்பம் மற்றும் வீடு. நான் பெறும் துணிமணிகள், ஆடைகள் எல்லாம் ஜனங்கள் எனக்குக் கொடுப்பவைகளாகும், அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஜனங்கள் எனக்கு கொடுக்கும் வரைக்கும் எனக்கு எந்த ஒரு பணமும் தேவைப்படாது. இந்த எல்லா பணத்தையும்விட அதிகமான ஜெபங்களைப் பெறுவதே தேவையானதாகும். ஆகவே அதன் பொருள் என்னவென்றால், எனக்குண்டான எல்லா பணமும், நான் அதைப் பெற்றுக் கொண்டால்... சில நண்பர்கள் வாயிலாக. நீங்கள் பாருங்கள்? மேலும் கிறிஸ்துவின் நண்பர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள். கிறிஸ்துவின் நண்பர்களுக்கு நான் நண்பனாக இருக்கிறேன். என் ஜீவிய காலமுழுவதும் அதையே கடைப்பிடித்து வருகிறேன். 12. மிகவும் அருமை. பத்து பில்லியன் டாலரானாலும் அது மாறாது. கிடைத்தால் நல்லது தான். (சபையார் சிரிக்கின்றனர் – மொழிபெயர்ப்பாளர்.) ஆம் ஐயா! அது சற்று கூடுதல் நல்லது. என்னுடைய மொத்த செலவீனங் களைப் பார்க்கும்போது... ஒரு வாரத்திற்கு ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறேன், ஜெபத்துணிகள் (prayer cloths) மற்றும் தபால் தலைகள் வாங்க–வாங்க வேண்டியுள்ளது. நூற்றுக்கணக்கான டாலர் கள் ஒரு வாரத்திற்கு செலவு செய்யப்படுகிறது. அவை களை வெளிநாடுகளுக்கு, முழு உலகத்திற்கும் அனுப்பு கிறோம் மற்றும் எல்லாம். அலுவலகத்தில் ஐந்து பேர் எல்லா நேரங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அவைகள் எல்லாம் என்ன என்பதை உணர்கிறீர்களா? நான் வெளியே ஊழியக் களத்திற்கு போகாமல் இருக்கும் போதே ஏற்படுகிற செலவுகள். அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். அது இந்த ஊழியத்தை தாங்குவதாகும், தாங்குவதாகும். வங்கியில் அவர்கள் என்னிடம், "சங்கை பிரன்ஹாம் அவர்களே, குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீங்கள் பணம் எடுத்திருந்தால்... அது அப்படியே செல்லட்டும். நீங்கள் அதை பொறுப்பேற்றுக் கொள்வீர்கள்" என்று கூறுவார் கள். அதுதான் என்னுடைய வாழ்க்கை...?... ஆகவே, அது காரியங்களை சிறந்ததாக செய்கிறது. அப்படியானால் நான் வெறுமனே விசுவாசத்தினால் ஜீவித்து கொண்டிருக் கிறேன், அவ்வளவுதான், விசுவாசத்தினால் மட்டுமே. 13. அவர் என்னை நேசிக்கிறார், என்னை ஆசீர்வதிக்கிறார் என்பதை அறிந்தவனாய் என் ஜீவியத்தில் நான் அறிந்து கொண்ட மகத்தான காரியம் என்னவென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (மீதுள்ள) விசுவாசத்தினால் ஜீவிப்பதே. பணத்தைப் பெறுவதை குறித்து? எனக்கு காணிக்கையாக கொடுக்கப் பட்ட, நான் கேட்டுக் கொண்டதன் பேரிலல்ல, ஆனால் எனக்கு அளிக்கப்பட்ட பணத்தில் இருந்து நூறில் ஒரு பாகத்தை எப்போதாவது நான் எடுத்தது உண்டானால்... ஒருபோதும் நான்... ஆனால் எனக்கு கொடுக்கப்பட்ட காணிக்கைகளினால், நான் பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரனாய் இருந்திருப்பேன். அது என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அது உங்களை தொல்லைக்குட்படுத்தும். மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாளும் எடுக்கிற காணிக்கைகளை வைத்தே கர்த்தருக்கென்று ஜீவிப்பேன். நாளைக்கு எனக்கு என்ன தேவையோ நாளைய தினம் அதை, அவர் எனக்கு அருளிச்செய்வார். அது சரி. அதன் பின்னர், நான்... பாருங்கள், நீங்கள் அதை பெற்றுக் கொண்டால்... பின்னர் நீங்கள் உங்கள் ஐசுவரி யத்தை நம்பிச் செல்வீர்கள். நீங்கள் கல்வி கற்றவராய் இருந்தால், பின்னர் நீங்கள் அதில் நம்பிக்கை வைத்து செல்வீர்கள். நீங்கள் அதிகப்படியான வேதாகம படிப்பை பெற்றிருந்தால், நீங்கள் அதில் நம்பிக்கை வைப்பீர்கள். எனக்கு வேதாகம படிப்போ, கல்வியோ, தனிச்சிறப்பு களோ (personality), பணமோ எதுவும் கிடையாது. நான் வெறுமனே கர்த்தரை நேசிக்கிறேன், ஒவ்வொன்றிற் காகவும் அவரையே நம்பி இருக்கிறேன். நான் பெற்றுள் ளவை அனைத்தும் அவ்வளவுதான். பாருங்கள்? அந்த விதமாகவே நான் ஜீவிக்க விரும்புகிறேன். அந்த விதமாக ஜீவிப்பதே என்னுடைய தெரிந்து கொள்ளு தலாகும். இப்பொழுது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நல்லது, இங்கே சிகாகோவில் இருக்கிற மக்களாகிய நீங்கள் மிகவும் அன்பானவர்கள். இப்பொழுது, இவைகளை பார்க்கின்ற போது, சில இரவுகள் மாத்திரமே, இங்கே நம்முடைய அரங்கத்தில் இருக்க வேண்டியதாய் இருந்திருக்கும். நாங்கள்... யாரோ ஒருவர் அதை குறித்து நமக்கு முன்னால் பேசினார். அது... அது அவர்கள் கருத்து. அவர்கள்... நாம் அதனுடன் ஒப்புரவாக விரும்ப வில்லை. 14. ஆனால் இப்பொழுது, நம்மால் கூடுமானால் சில இரவுகள் இங்கே இருந்து கொண்டு, பிரசங்கம் பண்ணுவதற்குப் பதிலாக வார்த்தையை குறித்ததான ஒரு சில விளக்கங்களைக் கொடுத்து, பின்னர், என்னால் நிற்க முடிகிற நேரம்வரை ஜெபவரிசையை நடத்த விரும்பு கிறேன். பாருங்கள்? ஏனென்றால் நான் அநேக கடிதங்களை பெற்றுக் கொண்டிருக்கிறேன். இங்குள்ள ஜனங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நாங்கள்– எங்களால் அதிக நேரம் தங்க முடியாது" என்று கூறுகின்றனர். இப்பொழுது, இந்த இரவில் யார் ஜெபிக்கப்படப் போகிறார்கள் என்று அறிந்து கொள்ள நமக்கு ஒரு வழியும் கிடையாது. இன்று இரவில் எனக்குத் தெரிந்த மட்டில் ஜீவிக்கிற ஒரு ஆத்துமாவைக்கூட நான் அறியா திருக்கும்போது, எத்தனை பேர் சுகத்தைப் பெற்றுக் கொள்ள போகிறார்கள் என்பதை நான் எங்கனம் அறிவேன்? இதற்கு முன்பாக எனக்கு தெரிந்தவர்கள் என்று சொல்லத்தக்க வகையில் இந்த கூட்டத்தில் ஒரு நபரைக்கூட பார்க்க முடியவில்லை. இங்கே அமர்ந் திருக்கிற சில பையன்களை நான் அறிந்திருக்கிறேன். பாருங்கள்? அங்கே, அவர்களில் சிலர், நல்லது, என்னுடைய சபையிலிருந்து, ஜெபர்சன்வில்லிலிருந்து வந்துள்ளனர், நான் – அவர்கள் என்னுடைய தனிப்பட்ட நண்பர்கள். மற்றபடி... வெளியே இருக்கிற ஒருவரைக்கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது, இன்றிரவில், அந்த கர்த்தருடைய தூதனானவர் எந்த இடத்தில் இறங்கப் போகிறார் என்றும், நான் எதைக் குறித்தும் அறியாதிருக்கிற ஒருவரைக் குறித்ததான தரிசனத்தை எப்படித் தருவார் என்றும் நான் எங்கனம் அறிவேன்? ஏன், அந்த... பில்லி பால், நான்... அவன் இன்று மதியம், அல்லது இன்றிரவு ஜெப அட்டைகளைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறான். அவன் அதை கொடுத்திருப்பான் என்று நம்புகிறேன். அவன் தோராயமாக நூறு ஜெப அட்டைகளை வழங்கி யிருக்கலாம். அவர்கள் அங்கே வெளியே இருக்கி றார்கள். அவனால் செய்ய முடிகிற ஒரே காரியம் என்னவென்றால் எல்லா ஜெப அட்டைகளையும் ஒன்றாக கலந்து அதை உங்களுக்கு கொடுப்பது மட்டுமே. மற்றபடி அந்த ஜெப அட்டைகள் யாரிடம் இருக்கிறது என்றோ அல்லது அழைக்கப்படும் எண் வரிசையை குறித்தோ அவனுக்கு ஒன்றும் தெரியாது. எனக்கும் கூட தெரியாது. நான் உங்களை அழைக்க வேண்டுமா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. பாருங்கள்? 15. மேலும்–மேலும் நீங்கள் ஜெப அட்டை வைத் துள்ளீர்களா இல்லையா என்பது எந்த ஒரு வித்தி யாசத்தையும் உண்டாக்காது. நான் முயற்சி செய்கிற ஒரே ஒரு காரியம் என்னவெனில், உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்ய வைப்பது மாத்திரமே, அப்போது அவர் உங்களை சுகப்படுத்துவார். நீங்கள் ஜெப அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்கள் கவனிப்பீர்களேயானால், மேடைக்கு வருபவர்களைக் காட்டிலும் அரங்கத்தில் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையிலானோர் சுகமடைந் துள்ளனர். ஆனால் நான்... அது என்னை பலவீன மடையச் செய்கிறது. இப்பொழுது, அன்றொரு நாள் என்னை மிகவும் நன்றாக அறிந்துள்ள ஒருவர், நான் பலவீனம் அடை வதை, என்னை பலவீனப்படுத்துகிற அந்த காரியமானது ஒரு போலியானது என்று கூறினார் என்பதை அறிந்து கொண்டேன். நல்லது, அவ்வாறு கூறின அந்த மனிதனை தேவன் மன்னிப்பாராக. பாருங்கள்? ஏனென்றால், தான் எதைக் குறித்து பேசுகிறார் என்பதை அவர் அறியா திருந்தார். அவ்வளவு தான் காரியம். அவர் அதை அறிந் திருக்கவில்லை. ஆனால் இது அவ்வாறில்லை என்னு டைய இனிமையான அன்புள்ள நண்பர்களே! 16. சரீரப் பிரகாரமாகச் சொன்னால், நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நல்ல பலத்திற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். நான் ஒரு வேட்டைக் காரன், மலைகளிலும், காடுகளிலும் ஜீவிக்கிறேன். தேவனுடைய கிருபையால், நான் அதில் நேர்த்தியுள்ள வனாயும் இருக்கிறேன். அவ்வாறாக என் ஜீவியம் முழுவதும் நான் குதிரைகள் போன்றவற்றை ஓட்டுபவ னாகவும், என் ஜீவியம் முழுதும் ஒரு கடின உழைப்பாளி யாகவும் இருந்து வந்துள்ளேன். மாம்சப் பிரகாரமாக பேசுகிற வரை, அவை எல்லாம் சரிதான். ஆனால் சற்றே... நான் இங்கே நின்று இரவு முழுவதும் பிரசங்கம் செய்யமுடியும், அப்படியே தொடர்ந்து பிரசங்கிக்க முடியும். ஆனால் அந்த தரிசனங்களில் ஒன்று ஏற்படும் போது, நீங்கள் பிரசங்க பீடத்திலிருந்து என்னை தூக்கிக் கொண்டு செல்ல கிட்டத்தட்ட ஆயத்தமாகி விடுகிறீர்கள். பாருங்கள்? அது சற்றே... என்னைப் பலவீனம் அடையச் செய்கிறது. ஏன்? எனக்குத் தெரியாது. ஆனால் அது அதைச் செய்யும் என்று வேதம் கூறுகிறது. மேலும் அது அதை செய்கிறது. அது மட்டும் எனக்குத் தெரியும். 17. ஆகவே, இப்பொழுது, நல்ல கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிந்தனைக்காக அல்லது பேசுவதற்காக வேதாகமத்தில் இரண்டு இடங்களை வாசிக்கப் போகி றேன், ஒருவேளை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது. பின் ஜெபவரிசை அழைப்பு இருக்கும், ஆகவே உங்களை அதிக நேரம் தாமதப்படுத்த மாட் டோம். இப்பொழுது அவைகளில் ஒன்று... இரண்டு இடங்களுமே யேகோவாவின் மீட்பின் நாமங்களைக் குறித்ததாகும். அவைகளில் ஒன்று ஆதியாகமம் 22-வது அதிகாரம் 7-ஆம் வசனத்தில் காணப்படுகிறது. அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனப¬க்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனப¬க்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், 14-வது வசனத்தில் நாம் வாசிக்கிறோம்; ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. பின்னர் சங்கீதங்களின் புஸ்தகம் 64-ல் 1-ஆம் வசனம் கூறுகிறது: தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். (இது சங்கீதம் 46:1-ல் காணப்படுகிறது– தமிழாக்கியோன்) 18. இப்பொழுது, இங்கிருந்து நம்முடைய மேற்கோள் பகுதியைத் தொடர நாம் விரும்புகிறோம். நான் எடுத்துக்கொண்டு வந்த காகித உறையில் "யேகோவாவின் ஏழு கூட்டு நாமங்கள்" என்று எழுதி வைத்துள்ளேன். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவருடைய இந்த ஏழு மீட்பின் நாமங்களில் யேகோவா என்னவாக இருக்கிறார் என்பதாக அது இருந்தது. இப்பொழுது, தேவன்... ஏதேனிலிருந்து மறுபடியும் ஏதேனுக்கு திரும்பும் வரைக்கும், ஜனங்கள் மீதான தேவனுடைய அணுகுமுறையானது, இந்த ஏழு நாமங்களில் சுற்றப்பட்டுள்ளது (wrapped). முதலாவதாக அது யேகோவாயீரே என்பதாக இருக்கிறது, அதன்பொருள் என்னவெனில் "கர்த்தர் ஒரு பலியை அருளிச் செய்வார்" என்பதே. இரண்டாவது "யேகோவா-ராஃபா" என்பதாகும், அதன் பொருள் "சுகமாக்குகிற கர்த்தர்" என்பதாகும். மனாசே என்றால் "நம்முடைய கொடி." ஷாலோம் என்றால் "நம்முடைய சமாதானம்." ரோஹி என்றால் "மேய்ப்பர், நம்முடைய நீதிபரர்." ஷாம் என்றால் "கர்த்தர் பிரசன்ன மாயிருக்கிறார்" என்று பொருள். இப்பொழுது, கர்த்தராகிய ஷம்மா, ஷ-ம்-மா. சங்கீதம் 64-ல் இருந்து, ஷம்மா என்பதன் பேரில் நான் பேசப் போகிறேன். முதலாவதாக வருவது யேகோவாயீரே. இந்த ஒன்று கடைசியாக வருகிறது. யேகோவாயீரே என்றால் "கர்த்தர் ஒரு பலியை அருளிச் செய்வார்" என்பதாகும், யேகோவா-ஷம்மா என்றால் "யேகோவா பிரசன்ன மாயிருக்கிறார்" என்று பொருள். இப்பொழுது, இவை களின் மீது கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதத்தைக் கூட்டித் தருவாராக, நாம் சிறிது நேரம் பேசப்போகிறோம். 19. இப்போது, யேகோவாயீரே, தேவன் ஆபிர காமுக்கு தரிசனமான போது... அவர்... ஆபிரகாமுக்கு தரிசனமான போது, அவருடைய முதலாவது நாமம் அதுவாக இருந்தது, அது ஆதியாகமம் 22-வது அதிகாரத்தில் காணப்படுகிறது, அங்கே அவர் யேகோ வாயீரே என்ற நாமத்தில் தரிசனமானர். இப்போது, அவனுடைய வாரிசாக இருக்கும் படிக்கு, கர்த்தரிடத்திலிருந்து ஆபிரகாம் வாக்குத்தத்தத்தைப் பெற்றான், அவனுக்கு ஒரு குமாரன் பிறப்பான் என்பதே அவ்வாக்குத்தத்தம். அந்த வித்தின் மூலமாக, அவரு டைய வித்து, உலகத்திற்கு சுதந்திரவாளியாக இருக்கும். ஆபிரகாமின் குமாரன் மூலமாக, அது ஈசாக்காக இருந் தது, ஈசாக்கின் வழியாக இயேசு வந்தார், இயேசு புறஜாதிகளை உள்ளே கொண்டு வந்தார், அவர் தேசங் கள் அனைத்தையும் மன்னித்தார், வெள்ளை மனிதன், பழுப்பு நிற மனிதன், மஞ்சள் நிற மனிதன், கருப்பு நிற மனிதன், எல்லா ஜனங்களையும் மீட்டுக் கொண்டு, இதுவே கடைசிக்காலம் என்பதைக் காண்பிக்கிறார். எல்லாமே இதனுடன் முடிந்துவிடுகிறது. இதற்குப்பின்பு வேறு ஒரு காலம் என்பது இருக்காது. இதுவே, தேவன் அழிந்து போகும் ஜனங்களோடு இடைபடுகிற கடைசிக் காலமாக இருக்கும். 20. ஜலப்பிரளய அழிவிற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு எழுப்புதல் உண்டாயிருக்குமானால், கிறிஸ்துவின் வருகைக்கு முன்பதாக, அவர்களுக்குள் ஒரு பெரிய கலக்கம் உண்டாயிருந்ததானால், நல்லது அப்படியானால், அதனுடைய முழுமையும் நிறைவேறும் போது, அதைக் குறித்து என்ன? என்ன சம்பவிக்கும்? அப்போஸ் தலர்களின் நாட்களைக் கவனியுங்கள்...?... உள்ளே கொண்டு வரப்பட்ட புறஜாதி யுகம் துவங்கி... எத்தகைய எழுப்புதலைக் கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனி யுங்கள். எப்படியாக ஒவ்வொரு தேசத்திலிருந்தும் அவர்கள் வந்தார்கள்? எப்படியாக அற்புதமான காரி யங்கள் நிகழ்ந்தன? நோவாவின் காலத்தைப் பாருங்கள். இப்பொழுது, இதுவே கடைசிக்காலம், கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கான நிழல்கள் சரியாக மிக நெருக்கத்தில் உள்ளது. இங்கே சில நல்ல செய்திகளை அறிவிக்க வேண்டியிருக்கிறது. லியோ அவர்களே, (Leo) எல்லாப் படச் சுருள்களையும் கொண்டு வந்துள்ளீர்களா? கொண்டு வந்திருக்கிறீர்களா? என்னிடத்தில் ஒரு படம் இருக்கிறது, ஏறக்குறைய அது என்னை மறுபடியும் மனந்திரும்பும்படி செய்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அந்தப்படம் இங்கே காட்சிப்படுத்தப்படும். அது சரியா? (ஒரு சகோதரன், "சகோதரன் பிரன்ஹாமே, நாங்கள் இன்னும் அதை முடிவு செய்யவில்லை" என்று கூறுகிறார் – ஆசி.) அது எப்பொழுது காட்டப்படும் என்று பிறகு கூறுவார்கள். அதை நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். அது என்னு டைய சொந்தப்படங்களில் ஒன்று. ஒரு மனிதன் அதை எனக்குத் தந்தார், அவர் பெயர் சகோதரன் ஆர்கன் பிரைட் (Brother Arganbright) என்பதாகும், அவர் கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கத்தின் ஒரு பிரதிநிதியாவார். நான் அதை மிகவும் விரும்பினபடியால், அவர் அதை எனக்கே கொடுத்து விட்டார். அதைக் காண்பிப்பதற்கு என்னிடத்தில் ஒளிப்படக்கருவி (projector) இல்லை. ஆகவே, நானே அதை மறுபடியும் பார்க்கும்படி விரும்புகிறேன். அது யூதர்களைப் பற்றியது, பாலஸ் தீனத்திற்கு திரும்பி வரும் நிகழ்ச்சி, விமானத்தில் இரண்டு பண்டிதர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பார்க்கும்போது, மெய்யாகவே அந்தப் படத்தைப் பார்த்து ரசிப்பீர்கள். 21. ஒவ்வொரு தீர்க்கதரிசனமும், வேதாகமத்தில் நான் பார்க்கக் கூடிய, நான் அறிந்துள்ள எல்லாத் தீர்க்க தரிசனமும் நிறைவேறிவிட்டன, ஏற்கனவே கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நான் கடந்த இரவில் சொன்னது போல, கர்த்தராகிய இயேசுவின் வருகை, இரண்டாம் வருகையானது, நிகழ்ந்திருக்க வேண்டிய ஒன்று, ஏற்கனவே நிகழ்ந்திருக்க வேண்டிய ஒன்று (past due). நீடிய பொறுமையுடன், ஒருவரும் அழிந்துவிடக் கூடாது என்று தேவன் காத்திருந்தார். இப்போதும்கூட அவர் காத்துக் கொண்டிருக்கிறார், நீடிய பொறுமையுடன் அவர் காத்துக் கொண்டிருக்கிறார், அவருடைய வருகை ஏற்கனவே நிகழ்ந்திருக்க வேண்டிய ஒன்று, இரண்டாவது வருகை நிகழும் பொருட்டு சபையானது அந்த ஒழுங்கிற்குள் வரும்படி காத்துக் கொண்டிருக்கிறார். நண்பர்களே அதைக் குறித்து என்ன? எப்படிப்பட்டதான ஜனங்களாக நாம் இருக்க வேண்டியதாயுள்ளது? இன்றே நம்முடைய அழிவுள்ள ஜீவியத்தின் கடைசி நாள் என்று உணர்வீர்களானால், நாளை நாம் ஒருவேளை அழியாமையை அடையலாம். நம்முடைய ஜீவியத்தில் நாம் பெற்றுள்ள கடைசி நாள் இதுவே என்னும் பட்சத்தில், நாம் ஒன்றுகூடும் கடைசி கூட்டமும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக பணி செய்வதும் இதுவே கடைசி என்றால், இன்றிரவுக் கூட்ட மானது எப்படிப்பட்ட விதமாக நடத்தப்பட வேண்டும்? அவிசுவாசிகளும், வெதுவெதுப்பானவர்களும் கர்த்த ராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, அவரை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்கு ஏதாவது நம்மால் உதவிசெய்ய, ஒவ்வொரு மனந்திரும்பாத ஆத்து மாவையும் நமக்கு தந்தருளும்படி, மிகவும் உயரிய பயபக்தியுடனும், நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் கர்த்தராகிய இயேசுவை சார்ந்திருக்கிறோம் 22. அது ஒரு சுயநலம் உள்ளதாயிருக்கலாம். ஒரு மனிதனுடைய இருதயம், அவனுடைய சகோதரனை இரட்சிப்பதற்கு துடிக்கவில்லையென்றால், அவனுடைய இருதயத்தில் அங்கே ஏதோ தவறு இருக்கிறது. அது என்ன சூழ்நிலையாக இருந்தாலும் சரி, அவனுடைய சகோதரன் அவனை வெறுத்தாலும், அவனுடைய சகோ தரன் அவனுக்கு எதிராளியாய் இருந்தாலும், அவனு டைய சகோதரன் எல்லாவற்றையும் செய்து, அவனைக் கிழித்து கீழே விழப் பண்ணினாலும், அவ்வாறு இருந்தும்கூட, அந்த மனிதனுடைய இருதயம் அவனு டைய சகோதரனுக்காக துடிக்கிறது. அவனால் அதை தடுக்க முடியாது. "ஓ சகோதரனே, நீ தவறாயிருக்கிறாய். ஆனால் நான்–நான், நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கதறுகிற ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது. ஆகவே, உன்னில் இருக்கிற எல்லா வற்றையும் கொண்டு, உன்னுடைய சகோதரனை, அவனு டைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்க செய்து, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் இப்பொழுது, ஒவ்வொரு முறையும் அப்படிப்பட்ட கூட்டங்களை கொண்டிருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நான்–லட்சக்கணக்கா னோருக்கு பிரசங்கித்திருக்கிறேன். நான்கு அல்லது ஐந்து பேர்களுக்கும் நான் பிரசங்கித்திருக்கிறேன். ஐந்து லட்சம் பேர் கொண்ட கூட்டத்திற்கு ஒருபோதும் நான் உத்தமமாய் இருந்ததைவிட, ஐந்து பேர் கொண்ட கூட்டத்தினருக்கு நான் மிகவும் உத்தமமாய் இருந்திருக் கிறேன். ஏனென்றால், தேவனுடைய பார்வையில் ஒரு ஆத்துமாவின் மதிப்பு பத்தாயிரம் உலகங்களுக்கு சமம். 23. இப்பொழுது, மீட்பு வருவதற்கு முன்பாக கர்த்தராகிய இயேசு வரவேண்டியதாயிருந்தது. மேலும், கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன்பதாக, தேவன் இங்கே முன்பாக... அது சரியாக – அது சரியாக பரிசுத்த வேதாகமத்தை மிகவும் பரிபூரணம் உள்ளதாக எனக்கு ஆக்குகிறது. கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன்பும் கூட, நாலாயிரம் வருடங்களாக தேவன் இங்கேதான் இருக்கிறார். அவர் பரிசுத்த வேதாகமம் முழுவதும் என்னென்ன செய்தாரோ அவை அனைத்தும் கல்வாரிக்கு ஒப்பிடப்பட்டது. அதை சற்று சிந்தித்துப் பாருங்கள், பழைய ஏற்பாட்டில் உள்ள அனைத்தும் நேரடியாக கல்வாரியைச் சுட்டிக் காட்டினது. மீட்பின் திட்டங்கள் அனைத்தும், எல்லா நாமங்களும், எல்லா அடையாளங்களும், எல்லா ஆராதனையும், ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள அனைத்தும், ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பலகைகள், மற்றும் அதில் உள்ள அனைத்தும், எல்லாமும் கிறிஸ்துவையே பறைசாற்றின. நீங்கள் எங்கே போனாலும், நீங்கள் என்ன செய்தாலும்... தேவன் அங்கே அந்த எபிரேயத் தீர்க்கதரிசிகள் முதலானோர்கூட இருந்து, விசுவாசியை பூரணப்படுத்தும்படி இயேசு வரும் போது நிலவும் அந்த பரிபூரணமான நேரத்தைக் குறித்து அவர் பேசிக் கொண்டு மற்றும் பேசிக் கொண்டே இருந்தார். நண்பர்களே, அது எதைக் குறிப்பிடுகிறது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். 24. உங்களால் ஒரு நிமிடம் நிறுத்த முடியுமா? இன்றிரவில் தேவன் நம்முடைய கண்களைத் திறக்க வேண்டும் என்று நான்–நான் விரும்புகிறேன். பாருங் கள்? நாம்–நாம் உண்மையிலேயே... நண்பர்களே, நான் அதிக நாட்கள் வாழ்வேன் என்பதையும், என்னுடைய சராசரியான காலம்வரை ஜீவிப்பேன் என்பதையும் அறிந்து கொண்டேன் என்றால், நான் தேவனுடைய அபிஷேகத்தின் கீழாக வந்து, அவர் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை, ஒருபோதும் அதை விடாதிருப்பதையே நான்–நான் வாஞ்சிப்பேன். பாருங்கள்? அது எப்படி கிரியை செய்தது என்பதை பார்ப்பதற்கு, மேலும், ...பெற்றுள்ள கிரியைகளை பார்க்க... என்னே ஒரு வித்தியாசமான உலகம் இது? என்னே ஒரு வித்தி யாசமான ஊக்குவித்தல்! நீங்கள் அதன் கீழாக இருக்கும்போது, நீங்கள் காண்கிற காரியங்கள்... நீங்கள் சற்றே... அது சரியானதாக தென்படவில்லை. அது உங்கள் இருதயத்தை அவ்வாறு உணர்வடையச் செய் கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இப்பொழுது, நீங்கள் அதை விட்டு மேலான நிலையில் இருக்கு போது... உங்களால்... நீங்கள் மலைகளைக் கூட பெயர்ந்து போக செய்ய முடியும் அல்லது இங்கே கீழே இருக்கும் போது, நீங்கள் நல்லவிதமாகத்தான் உணர்கிறீர்கள். அந்த இரண்டு நிலைகளுக்குமிடையே நீங்கள் மாறி மாறி வருவதுதான் அவ்விதம் உணரச் செய்கிறது. அங்கேதான் நீங்கள்... நீங்கள் அப்படியே பூமியை விட்டுவிட்டதைப் போல ஆகிறீர்கள். 25. பின்னர் நீங்கள் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட மண்டலத்திலிருந்து, ஒரு இயற்கைக்குட்பட்ட நிலைக்கு, அழிவுள்ள மனிதனின் நிலைக்கு மீண்டும் வந்து விடுகிறீர்கள். நல்லது, எல்லா நேரங்களிலும் நீங்கள் அழிவுக்குள்ளானவர்கள்தான், ஆனால் உங்கள் ஆத்து மாவோ ஏதோ ஒன்றினால் அவ்வளவாய் அபிஷேகிக்கப் பட்டுள்ளது. அது உங்களை, எல்லா காரியங்களுக்கும் மேலாக உங்களை உயர்த்திவிட்டது. அங்கே நீங்கள் ஒரு பரிமாணத்தில் இருக்கிறீர்கள், உலகம் அதைக் குறித்து ஒன்றுமே அறியாது. அதை விவரித்து சொல்ல முயற்சி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் நாம்... இங்கே இப்பொழுது நாம் உட்கார்ந் திருக்கிற நிலையில், இன்று இரவு நான் சொல்லப் போவது என்னவெனில், தேவனுடைய காரியங்களுக்கு சர்வசாதாரணமாகவே நாம் குருட்டாட்டமுள்ளவர்களாக இருக்கிறோம். இன்றிரவில் நம்முடைய கண்கள் திறக்கப் பட்டு, இங்குள்ள இந்த ஜனக்கூட்டத்தை சுற்றிலும் பார்க்க கூடுமானால், இங்கே சுற்றிலும் முகாமிட்டுள்ள மற்றும் நின்றுகொண்டு இதே நேரத்தில் இந்த ஜனக்கூட்டத்தை கீழ்நோக்கி சுற்றி பார்த்துக் கொண்டி ருக்கிற தேவ தூதர்களைக் காணக் கூடுமானால், ஒருவேளை அவர்கள் இங்கே ஜனக் கூட்டத்தினூடாக முன்னும் பின்னுமாகப் பறந்து கொண்டு இருக்கலாம், தேவனுடைய சிங்காசனத்திலிருந்து புறப்பட்ட கேரு பீன்கள் அருகிலே நின்று கொண்டிருக்கலாம், ஒருவேளை இங்கே மேடை மீதெங்கும் முழுதுமாக நின்று கொண்டிருக்கலாம், இங்கே இறங்கியுள்ள தேவ தூதர்களின் விஜயத்தை நம்மால் காணக்கூடுமானால் எப்படியாயிருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். 26. ஓ, நீங்களோ, "பிரசங்கியாரே, நீங்கள் பாதையை விட்டு வெளியே செல்கிறீர்கள்" என்று கூறுகிறீர்கள். இல்லை, நான் அவ்வாறு செய்யவில்லை, இன்னும் சில நிமிடங்களில் கிரியை செய்யப் போகிற அவர்களை கவனியுங்கள். அப்பொழுது, அவர்கள் இங்கு இருக் கின்றனரா அல்லது இல்லையா என்பதை கண்டு கொள்வீர்கள். பாருங்கள்? நீங்கள்... அவர்கள் இங்கு இருக்கின்றனர் என்பதை சாட்சிகள் மூலமாக உறுதி செய்கிறார்கள். நீங்கள், "நல்லது, அவர்கள் இங்கு இருந்திருந்தால், எங்களால் அவர்களை பார்த்திருக்கக் கூடும்" என்று கூறலாம். ஓ, இல்லை, நீங்கள் முற்றிலுமாக அவை களுக்கு குருடாக்கப்பட்டிருக்கக் கூடும். எலியா அங்கே தோத்தானில் இருக்கும் போது, கேயாசியின் கண்கள், அல்லது அவனுடைய வேலைக் காரனின் கண்களை திறக்கும்படி தேவனிடத்தில் வேண்டினான். (அது கேயாசியா அல்லது இல்லையா என்று எனக்கு ஞாபகம் இல்லை. அதை நான் இரண்டு அல்லது மூன்று முறை கூறி விட்டேன், அதை ஒப்பிட்டு பார்த்தேன். நான்... வேதாகமத்தில் அதை நாம் பார்க்கிறோம். அது கேயாசிதானா அல்லது இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை) ஆனால், அவன் காண்பதற்கு அவன் கண்களைத் திறக்க வேண்டும் என்று அவன் தேவனை கேட்டுக் கொண்டபோது, அவனைச் சுற்றிலும் தூதர்கள் காணப்பட்டார்கள். அந்த மலை முழுதும் அக்கினி எரிந்து கொண்டிருந்தது, அக்கினி ஜுவாலையாய் தேவதூதர்களும், அக்கினி ரதங்களும் அங்கிருந்தன. பாருங்கள்? அவர்கள் யாவரும் சரியாக அவனை சுற்றிலும் இருந்தார்கள். 27. கவனியுங்கள், இப்போது, அங்கே எலியா வெளியே சென்று, அந்தச் சீரியர்களை குருடாக்கிப் போட்டான். அது எத்தகைய குருட்டுத்தன்மை? அவர் கள் குருடாயிருக்கவில்லை, இயற்கையான குருடர் களோ, மாம்சப் பிரகாரமான குருட்டுத்தன்மையுள்ளவர் களோ அல்ல, அவர்கள் ஆவிக்குரிய குருடராயிருந் தார்கள். ஏனென்றால், அவன் நடந்து சென்று அவர்களிடத்தில், "எலியாவையா தேடுகிறீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம், நாங்கள் அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றனர். அதற்கு அவன், "இங்கே வாருங்கள், அவன் எங்கேயிருக்கிறான் என்பதைக் காட்டுகிறேன்" என்றான். அவர்களை எலியா வழிநடத்தினான், அவர்கள் அவனுக்குப் பின்சென்றனர், சரியாக பாலஸ்தீன படை வீரர்கள் பதிவிருந்த இடத்திற்கே அவர்களை கூட்டிச் சென்றான், அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர், ஆனால் சரியாக ஒரு கண்ணியில் அகப்பட்டனர், அந்த விதமாக. அவர்கள் குருட்டாட்டமுள்ளவர்களாயிருந்தார்கள். அது எலியா என்றும், எலியாதான் அவர்களை வழி நடத்திக் கொண்டு வந்தான் என்பதையும் அவர்கள் அறியா திருந்தார்கள். இன்று இரவில் நம்மைச் சுற்றி இருக்கிற காரியங்களை காண முடியாதபடி நாம் ஆவிக்குரிய குருடராயிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நம்பவில்லையா? எம்மாவூருக்கு போய்க் கொண்டிருந்த அவர்களை கவனியுங்கள். அவர்களின் இருதயங்கள் அன்பினால் நிறைந்திருந்தன. நிச்சயமாக, அவர்கள் கர்த்தராகிய இயேசுவை நேசித்தனர். அவர்கள் நடந்து சென்றனர். ஒருவருக்கொருவர், "ஓ, நாம் மட்டும்... ஓ, நான்... நாம் அவரை இன்னொரு முறைப் பார்க்கக் கூடுமானால், அங்கேதான் அவர், அவர் மரித்து விட்டார். அவரில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தோம். இது ஞாயிறு காலை நேரமாக இருக்கிறது, அவர்கள் நம்மிடம் இந்த அழகான தேவதூத கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர்"என்று பேசிக்கொண்டே சென்றனர். அவர்கள் பாதையில் சென்று கொண்டு, மிகச்சரியாக அதே கர்த்தராகிய இயேசுவிடம் அடியெடுத்து வைத்தார்கள். "நீங்கள் ஏன் கலக்கமுற்றிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். 28. அதற்கு அவர்கள், "நீர் ஒரு அந்நியரா?" என்று கேட்டார்கள். அங்கு கவனியுங்கள். குருட்டாட்டமா? "நீர் அந்நியரேயல்லாமல் வேறில்லை" என்றார்கள், மூன்று வருடம் ஆறு மாத காலமாக அவருடன் நடந்தனர், அவருடன் புசித்தினர், அவருடன் தூங்கினர். அவர் அருகிலேயே கூடவே நடந்து செல்கையில், அவரை அறியாதிருந்தார்கள். அங்கே அவர்கள் கூடவே நடந்து சென்று, "நீர் இங்கு அந்நியராயிருக்கிறீரா?" என்றனர். ஏன், "நசரேயனாகிய இயேசு வருவார் என்று நீர் எதிர்பார்க்கவில்லையா? அவர் வந்துவிட்டார்...? அவர் இஸ்ரவேலர்களை இவை எல்லாவற்றிலிருந்தும் விடு விக்கும் விடுதலை நாயகனாக இருப்பார்" என்று சொன்னார்கள். அதற்கு இயேசு, "தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ள வர்களே" என்றார். அவர் வேத வசனங்களை ஒப்பிட் டார். மூன்றரை வருடங்களாக அவர் தங்களுக்கு உபதே சித்ததை கேட்டிருந்த அவர்கள், அவருடைய போத னையை நிச்சயம் அடையாளம் கண்டிருக்க வேண்டும் என்பதாக தோன்றுகிறது. ஆனால், அவர்களோ அடை யாளம் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இராமுழுவதும் தங்கியிருக்க அங்கே ஒரு தங்கும் விடுதியண்டை செல்ல முற்பட்ட போது, தான் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதைப் போல அவர் நடந்து கொண்டார். அவர்கள் அந்த சிறிய உணவு விடுதியில் நின்றார்கள். மேலும் அவர்கள்... அவர் உணவு உண்ணும் அறைக்குள் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள், "அவர் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதாக சொல்லிக் கொண்டிருந்தாரே" என்றனர். "எங்களோடு உள்ளே வரமாட்டீரா?" 29. அதற்கு அவர், "நல்லது... நல்லது. வரலாமே" என்று கூறி உள்ளே சென்றார். விடுதி பணியாளன் வந்து அவர்களிடம் உணவு பட்டியலை கொடுத்தான். அவர்கள் அதை பார்த்து, தங்களுக்கான இரவு உணவை ஆர்டர் செய்தனர். மேஜையின் மேல் அவர்கள் அதை ஆயத்த மாக்குகையில் இயேசு, "நல்லது, இவ்வளவு தூரம் பொறுத்திருந்தது போதும் என யூகிக்கிறேன். எனவே..." என்று சொல்லி, அவர் அப்பத்தை எடுத்து, அதை ஆசீர்வதித்தார். ஜெபம் செய்தார், அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவர்கள் பார்த்து, "அப்படியானால், இவ்வளவு நேரம் இருந்தது அவர்தானே" என்றனர். அப்பொழுது அவர் அவர்கள் கண்களுக்கு மறைந்து போனார். நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று பார்த்தீர்களா? ஓ, எங்கே நீங்கள் மெய்யாகவே உணர்ந்து கொள்ள முடியுமோ, அந்த ஆழமான இடத்தில் முழுகிப் போவதற்காக நான் அதை விரும்புவேன். இப்பொழுது, அவரை இரவில் பார்க்கிறீர்கள், கிரியை செய்கிறார், அசைவாடுகிறார். ஏன், அவர் இங்கேதான் இருக்கிறார். நிச்சயமாக, அவர் இங்கே இருக்கிறார். எல்லாச் சாட்சியங்களும் அதை உறுதிப்படுத்துகின்றன. இவைகளையெல்லாம் அவர் செய்வார் என்று வேதம் கூறுகிறது. மேலும், இங்கே அவர் அதை செய்து கொண்டிருக்கிறார், சரியாக இன்று இந்த பூமியின் மேல், காலங்கள் தோறும் இருந்து வந்தவர், சரியாக நம் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கின்றார், நாம் அதிசயிக்கத்தக்கதாக கிரியை செய்து கொண்டிருக்கிறார். 30. கவனித்தீர்களா..? நீங்கள் ஒரு விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட மரித்திருக்க வேண்டிய நிலை இருந்தபோது ஏதோஒன்று அந்த இடத்திற்கு வந்திருந்ததை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் சென்று, "வ்யூ என்னே, அது எப்பேர்ப்பட்ட காரியம்" என்கிறீர்கள். அதுவோ கர்த்தருடைய கரமாயிருந்தது. பாருங்கள்? அவர்... தேவன் இங்கேயும் அங்கேயும் இருக்கிறார். இங்கே சிறிது காலத்திற்கு முன் ஒரு ஸ்திரீ என்னிடம், அவள் சொன்னாள், அவள் சடுதியில் ஒரு இடத்தில் சுகத்தைப் பெற்றுக் கொண்டதாக கூறினாள். முதலாவது அவளுக்கு, காசநோய் பிடித்திருந்தது, மேலும்–பின் அவளால் ஒன்றும் முடியவில்லை, அவள் வளர்ந்த சபை, ஞானஸ்நானம் எடுப்பதை விசுவாசிக்காத சபை. அவள் "என்னுடைய தெளிப்பு ஞானஸ்நானமே போதுமானது என்று எண்ணுகிறேன்" என்று கூறினாள், அல்லது தண்ணீரை ஊற்றுவது, அவர்கள் அவளுக்கு செய்த ஏதோ ஒன்று. அவள் மேலும், "அது போதும் என்று நினைக்கிறேன்" என்று கூறினாள். அதற்கு நான், "அது உன்னைப் பொறுத்தது" என்றேன். மேலும் நான், "ஆனால் நான் முழுக்கு ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறேன்" என்று கூறினேன். அதற்கு அவள் சொன்னான்... அவள், "நல்லது, நான் அவ்வாறு எண்ணவில்லை" என்றாள். மேலும் அவள், "நான் சகோதரன் பில்லியினுடைய உலகத்தை எண்ணிப் பார்க்கிறேன்" என்று கூறி மேலும், "ஆனால் அந்த தண்ணீர் தொட்டிக்குச் சென்று ஞானஸ்நானம் பெறும் ஒரு திட்டமோ, எண்ணமோ என்னிடத்தில் இல்லை, அது அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றும் நான் எண்ணவில்லை" என்று கூறினாள். மேலும் அவள், "நான் ஏற்கனவே தெளிப்பு ஞானஸ்நானம் பெற்றபிறகு..." என்றாள். அல்லது வேறு எதுவாக இருந்தாலும். "அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று எண்ண வில்லை" என்று கூறினாள். 31. ஆகவே, அவள் அதைக் குறித்து எல்லாம் சரியாயிருக்கிறது என்று உணர்வாளானால், எனக்கும் அது சரியாக இருக்கிறது. வேத வசனத்தில் நான் என்ன காண்கிறேனோ, அதை மட்டுமே அவளுக்கு என்னால் சொல்லக்கூடும். அவள் திரும்பிச் சென்றாள், மறுபடியும் வியாதிப்பட்டாள். இங்கே அவளுடைய தோள் பட்டையில் ஒரு பெரிய கட்டி உண்டாயிற்று, காய்ச்சல் நூற்று நான்கைத் தாண்டியது. மாற்று வஸ்திரத்தை அணிந்தவளாய் நான் பிரசங்கித்து கொண்டிருக்கும் போது அவள் வந்தாள். "சகோதரன் பிரன்ஹாமே, கூடுமானால் தயவுசெய்து இப்போதே கொடுங்கள்" என்று கூறினாள்... அங்கேயே அப்பொழுது அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். ஒரு மாதத்திற்குப் பின், ஒரு நதிக்கு அப்பால் உள்ள இடத்திற்குச் சென்றாள். அங்கே வயது சென்ற ஒரு தாயார் தெருவில் உட்கார்ந்து கொண்டு, அவளுடைய கைகளை நீட்டி வைத்துக் கொண்டிருந்தாள். அவள், "இரக்கமுள்ள சீமாட்டியே நான் ஏதாவது உண்பதற்கு, [Dime] பத்து காசு கிடைக்குமா?" என்று கேட்டாள். மிகவும் ஏழை, வயது சென்றவள் உட்கார்ந்து கொண்டி ருந்தாள், வயது முதிர்ச்சியால் அவள் தலை நடுங்கிக் கொண்டிருந்தது, முகம் சுருங்கிப் போய் கன்னத்தோடு கன்னமாக ஒட்டிக் கொண்டிருந்தது. நல்லது, அவள் தனது சிறிய பையை பார்த்தாள், அதில் இருந்ததெல்லாம் பத்து பைசா மட்டுமே [Dime] ஆற்றைக் கடப்பதற்கு கொடுக்க வேண்டிய பணம் அவ்வளவே. இல்லாவிட்டால் பாலத்தை கடக்க நடந்து போவதை தவிர வேறு வழியை அவள் அறியா திருந்தாள். பேருந்தில் செல்ல வேண்டுமானால் அதற் குரிய கட்டணம் பத்து பைசா [Ten cents].. அப்படியாக அவளும், அவளுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தனர், அவள் தெருவின் ஊடாக சென்றபோது பரிசுத்த ஆவியானவர் அவளிடம், "அந்த காசை ஏன் நீ அவளுக்கு கொடுக்க வில்லை? நான் பெற்றிருந்த எல்லாவற்றையும் உனக்காக கொடுத்தேனே" என்றார். பாருங்கள்? 32. அதற்கு அவள், "ஆம் கர்த்தாவே" என்றாள். உடனே அவள் திரும்பிச் சென்று "அம்மா, என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள். அவள் "நான் ஒரு கிறிஸ்தவள். கர்த்தர் என்னிடம் கூறினார்" என்றாள். அதற்கு அந்த மூதாட்டி, "தேனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக" என்றாள். அவள் அந்த காசை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு மறுபடியும் தெருவில் நடந்து சென்றாள். "என்னால் அந்த பாலத்தை நடந்தே கடக்க முடியும், அது ஒரு மைல் தூரம் என்பதை மட்டுமே அறிவேன். ஆகவே, நான் நடந்தே பாலத்தை கடந்து செல்வேன். அது பரவாயில்லை" என்றாள். பேருந்து நிலையத்திற்கு நடக்க தொடங்கினாள். சிறிய பெண், "அம்மா இங்கே பாருங்கள்" என்றாள். அங்கே ஒரு பத்துகாசு அவள் நடந்து சென்ற தெருவில் கிடந்தது. பாருங்கள்? ஆகவே அது – அதுதான் கர்த்தர்.. அதை விசுவாசிக்க மாட்டீர்களா? பாருங்கள்? இப்போது, அவர் ஆபிரகாமுக்கு... தரிசனமான போது அவர், "இப்பொழுது ஆபிரகாமே, இந்த சிறிய ஈசாக்கை உனக்குத் தருகிறேன்" என்றார். சிறிய, இனிமையான, பதினாறு வயதே உடைய சிறு பையன் அவன். "அவனுடைய தாயாரிடத்தில் சொல்லிவிடாதே, ஆனால், நான் உன்னை... இந்தப் பையன் மூலமாக, உன்னை பெரிய ஆசீர்வாதமுள்ளவனாக ஆக்கப் போகிறேன். நான் எல்லாத் தேசத்தையும் ஆசீர்வதிக்கப் போகிறேன். அதை உனக்கு இருபத்தைந்து வருடத்திற்கு முன் வாக்குப் பண்ணியிருந்தேன். ஈசாக்கு பிறக்கும் மட்டும் நீயும் காத்திருந்தாய். இப்போது ஈசாக்குடன் நீ என்ன செய்ய வேண்டும் என்று உன்னிடம் கூற விரும்புகிறேன். அவனை மேலே கூட்டிக் கொண்டு போய் அவனை பலியிட வேண்டும் என்று விரும்பு கிறேன். இப்போது நான் காண்பிக்கும் மலைக்கு போ, அங்கே தானே நீ அவனை பலியிட வேண்டும்" என்றார். 33. நல்லது இப்பொழுது, ஆபிரகாம் தேவனிடம் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. அந்தப் பையன் மூலமாக தேசம் அனைத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறிய தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவன் அறிந் திருந்தான். தேவன் அவர்களை ஆசீர்வதிக்கப் போகிறார் என்றால், அவன் மரித்து போனாலும், பிழைத்திருந் தாலும் அவர் அதை செய்வார், அவ்வளவே. அது அங்கே நிறைவேற வேண்டியிருந்தது, எனவே தேவன் தன்னுடைய வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்ள போது மானவராக இருந்தார். ஆகவே, மறுநாள் காலையில் அவன் எழுந்திருந்து இரண்டு வேலைக்காரர்களுடன், சிறிய கழுதைக்கு சேணம் கட்டினான். அவனும், பையனும், வேலைக் காரர்களும் பின்னாகச் சென்றார்கள். அது மூன்று நாள் பயணத்தூரமாயிருந்தது. வனாந்திர மார்க்கமாய் அது எவ்வளவு ஒரு தூரமாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். பின்பு கண்களை ஏறிட்டு அந்த மலை அங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று பார்த்தார்கள். இப்படியாக அந்த மலையை வந்தடைந்தனர். அவன் வேலைக்காரர்களைப் பார்த்து, "இப்போது, இந்த சிறிய கழுதையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நானும் பிள்ளையாண்டானும் மலையின் உச்சிக்குச் செல்கிறோம், நாங்கள் ஆராதிக்கப் போகிறோம், நானும் பிள்ளையாண்டானும் திரும்பி வருவோம்" என்றான். அவனோ அவனைக் கொன்று போடுவதற்காக மேலே சென்றான். அவன் அதை எவ்வாறு செய்யப் போகிறான்? அவன் அதை அறிந் திருக்கவில்லை, ஆனால் தேவன் வாக்குத்தத்தம் செய்தி ருந்தார். எப்படியாயினும்... பாருங்கள்? தேவன் அவருடைய ஊழியக்காரன் சரியாக கடைசி அடி எடுத்து வைக்கும் வரை அனுமதிக்கிறார், அதன் பின்பு தேவன் காட்சியில் தோன்றுகிறார். மிக இக்கட்டான சூழ்நிலையைப் பார்க்கும் போது, அதை அவ்விதமாக நேசிக்கிறீர்களா? அதுபோல்... எபிரேயப் பிள்ளைகள் மற்றும் எரிகிற அக்கினிச்சூளை, பாதையின் கடைசி அடியில், தேவனு டைய குமாரனுக்கு ஒப்பானவர் அங்கு காட்சியில் தோன்றினார். அது சரியா? 34. பெரும்பாடுள்ள ஸ்திரீ தனக்குள்ள யாவற்றையும் எல்லாப் பணத்தையும் செலவழித்து விட்டாள், தொடர்ச்சியாக மருத்துவர்களால் அவளுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாதிருந்தது. அவளுடைய வசிப்பிடத்தை கூட அடமானம் வைத்திருக்கலாம் அல்லது அதை விற்றிருக்கலாம், குதிரைகளை விற்று விட்டாள், மற்றும் தனக்குள்ள யாவற்றையும்... ஒன்றும் அவளிடம் மீதமாக வைக்கப்படவில்லை, எல்லாப் பணத்தையும் மருத்துவர்களுக்கே செலவழித்து விட்டாள், மருத்துவர்களும் மிகவும் பிரயாசப்பட்டார்கள், ஆனால் அவர்களால் அவளுக்கு எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் இயேசு அவ்வழியே வருகிறார். அவரை போலவே, இல்லையா? யவீரு என்னும் சிறிய மனிதன் இருந்தான்; இரகசியமாக அவனுடைய இருதயத்தில் விசுவாசித்தான். மருத்துவரை அழைத்தனுப்பினான், மருத்துவர் அவரால் என்ன செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்தார். சற்று நேரத்தில் அவனுடைய மகள் இறந்துவிட்டாள். அவளை வெளியே கிடத்திவிட்டார்கள். ஒவ்வொரு... அவன் கண்டிருந்ததிலேயே மிகவும் இருண்ட நேரம் அது. அப்பொழுது இயேசு அவ்வழியே வருகிறார், சரியாக அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தானே. மரியாள், மார்த்தாள் மற்றும் லாசரு, சபை முடிந்து திரும்பினார்கள், அவர்கள் அனைவரும் இயேசுவை விசுவாசித்தார்கள். இயேசு ஒரு இக்கட்டான சூழ்நிலையில், அந்தப் பையன் வியாதியில் படுத்த அந்த நேரத்தில் அவர்களை விட்டு கடந்து சென்றுவிட்டார், அவன் சுகவீனம் அடைந்தான், இயேசு கடந்து சென்றுவிட்டார். அவரை அழைத்தனுப்பினார்கள்; அவரோ வரவில்லை. இன்னும் அதிக தூரமாய் சென்று விட்டார். அது மிகவும் பயங்கரமாக இருந்தது. மறுபடியும் அவரை அழைத்தனுப்பினார்கள்; அப் போதும் கூட அவர் வரவில்லை, அது அதைவிட மோசமானதாக காணப்பட்டது. எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று, லாசருவும் மரித்துவிட்டான். கல்லறையில் அடக்கம் செய்து நான்கு நாட்களாயிற்று. ஏற்கனவே அழுகிக் கொண்டிருந்தது. காரிருளான நேரம், எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று, எல்லாமும் போய்விட்டது, பின்னர் இயேசு வந்தார், சரியாக அந்த நேரத்தில்தானே. பாருங்கள்? 35. அவருடைய சீஷர்கள் எம்மாவூருக்குப் போய்க் கொண்டிருந்தார்கள், எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று. அவர்களுடைய போதகர் மரித்துவிட்டார், எல்லாம் போய்விட்டது. வீட்டிற்கு திரும்பும் வழியில், தங்களுடைய மீன்பிடி வலைகளிடத்திற்கு திரும்பிப் போகும்போது, அவர்கள் சென்று கொண்டிருந்த எவ்விடங்களிலும் ஊக்கமிழந்தவர்களாக சென்றார்கள். பின்னர் இயேசு அங்கே வந்தார். பாருங்கள்? அது போலவே. அந்த விதமாகத்தான் தேவன் அதைச் செய்கிறார். இப்போது, அவர்கள் கடந்து வந்த பாதை ஒருவேளை அவர்களுக்கு... இந்த மலையை அடை வதற்கு நாற்பத்தைந்து நிமிடங்கள், அல்லது ஒரு மணி நேரம் பிடித்திருக்கும். இப்போது, எங்கிருந்தாவது இயேசு சடுதியில் வர வேண்டும், ஏனென்றால் அவனுடைய இடுப்பில் கத்தி வைத்திருந்தான். ஈசாக்கு அவனுடைய முதுகில் கட்டைகளை சுமந்தான். அவன் தன்னுடைய கையில் நெருப்பை வைத்திருந்தான். அவன் தன்னுடைய சொந்த மகனை பலியிடுவதற்காக அந்த மலையின் மேல் போய்க் கொண்டிருந்தான், ஏனென்றால் தேவன் அவ்வாறு செய்யும்படி கூறினார், அந்த குமாரன் மூலமாக எல்லாத் தேசங்களையும் ஆசீர்வதிப்பதாக ஆபிரகாமிடம் சொன்னார். வாக்குத்தத்தத்தை செய்வது... 36. அந்தக் குமாரனுக்காக முதலாவது அவன் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது, இப்போது காட்சி மாறுகிறது, அந்தக் குமாரனைக் கொன்று போட வேண்டியதாயிருந்தது. பாருங்கள், வாக்குத்தத்தத்தை இரட்டிப்பாகும்படி செய்தல். தேவன் ஆபிரகாமை சோதிக்க வேண்டியதாயிருந்தது. ஆபிர காமை நாம் மகிமையில் சந்திக்கும் வரை அவர் எப்படிப்பட்ட சோதனையில் நின்றார் என்பது ஒரு போதும் நமக்கு தெரியாது. பின்பு அந்த மலையின் உச்சியில், கற்களை வைத்து பலிபீடம் கட்டத் தொடங்கினான். மேலும்– மேலும் ஈசாக்கு, "தகப்பனே" என்று அழைத்தான், "இங்கே இருக்கிறது..," சிறிய ஈசாக்கு, இங்கே, "நெருப்பு இருக்கிறது, விறகும் இருக்கிறது" என்றான். "ஆனால் தகன பலியிடுவதற்கு ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்டான். பாருங்கள்? ஏன், அவன், "மகனே, தேவன் தமக்குத் தகனபலிக் கான ஆட்டுக்குட்டியை பார்த்துக் கொள்வார்" என்று சொன்னான். பின்பு அவன், "தேவன் பலியை அருளிச் செய்வார்" என்றான். ஆகவே அந்தச் சிறிய ஈசாக்கின் கைகளைக் கட்டினான், பலிபீடத்தின் மீது அவனை கிடத்தினான், கத்தியை உருவினான். அந்த வயதான தகப்பனார், அவனுடைய ஒரே குமாரனோடு இருப்பதை கற்பனை செய்து பார்க்கிறேன், எவ்வளவாய் நேசித்தார்..?... இப்போது அவனுக்கு நூறு வயதிற்கும் மேலாக ஆகிவிட்டது. அவனுடைய கரங்கள் குறுக்காக வைக்கப்பட்டு... இந்த பெரிய கத்தியினால், தன்னுடைய இருதயமாக இருக்கும் ஒருவனை, அவனுடைய மார்பை சொருகுவதற்கு ஏற்ப அவனுடைய சிறிய மயிரை பின்னாகத் தள்ளிவிடும் அவனை, தேவன் ஆபிர காமிற்குள் இருந்தார் என்பதற்கான ஓர் அடையாளம், அதை நீங்கள் கவனித்தீர்களா? 37. சொந்த ஜனங்களால் இராஜ்யபாரத்தை விட்டு அகற்றப்பட்ட தாவீதைப் பாருங்கள். அவன் ஒலிவ மலையின் மீது ஏறி சென்றான், பின்னாக திரும்பிப் பார்த்து அழுதான், ஏனென்றால் அவன் புறக்கணிக்கப் பட்டான். அவன் நேசித்த, சொந்த அப்சலோமே, அவனை சிங்காசனத்தை விட்டு துரத்தினான். அங்கே அவன் நம்பியிருந்த அவனுக்கு சொந்தமானவனே அவன் மீது கற்களை வீசிக் கொண்டிருந்தான். அவன் மலையின் மீது ஏறிச் சென்று, பின்னிட்டுத் திரும்பி எருசலேமைப் பார்த்து, சத்தமிட்டு அழுதான், ஏனென்றால் அவன் புறக்கணிக்கப்பட்டான். எண்ணூறு வருடங்கள் கழித்து, தாவீதின் குமாரன், இயேசு கிறிஸ்து, அவர் நேசித்த ஜனங்களால் எருசலேம் பட்டணத்தை விட்டு துரத்தப்பட்டார்; எருசலேமைப் பார்த்து அழுதார். அது தாவீதுக்குள் இருந்த கிறிஸ்துவாகும். பழைய ஏற்பாட்டில் உள்ள பழைய சம்பவங்கள் எல்லாம் எப்படியாக இயேசு கிறிஸ்துவை நோக்கி நகர்வதாக இருந்தது என்பதை எடுத்துக்காட்ட மணிக்கணக்காகும், எல்லாமே அவரை நோக்கி உள்ளது. மீட்பின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் இருக்கிறது. யேகோவாவின் மீட்பின் நாமங்கள் அனைத்தும் அவருக்குள் இருக்கிறது, சரியாக அவருக்குள் வைக்கப் பட்டிருக்கிறது. எல்லா இரட்சிப்பும் சரியாக அவருக்குள் தங்கியிருக்கிறது. எல்லா விடுதலையும் மீட்பும் அவருக்குள் தங்கியிருக்கிறது. எல்லாச் சமாதானமும், எல்லாத் திருப்தியும்... 38. உலகப் பொருட்களால் நீங்கள் ஒருபோதும் திருப்தி அடைய முடியாது. ஒரு சபையை சார்ந்தி ருப்பதினால் உங்களால் ஒருபோதும் திருப்தியடைய முடியாது. இயேசு கிறிஸ்துவில், தேவனுடைய குமாரனில் திருப்தியைக் காணும் மட்டும், எதிலும் நீங்கள் திருப்தி அடைய முடியாது. நீங்கள் திருப்தி அடையக்கூடிய ஒரே ஒரு வழி. இப்போது, அவர் பரிபூரணத்தைக் கொண்டு வரும்படிக்கே வந்தார். இப்பொழுது, அவர் கூறின போது... ஒரு கணம் ஆபிரகாமை நோக்கி பாருங்கள். அவனுடைய மகனை கொல்வதற்காக மகனின் இருதயத்தில் பெரிய கத்தியை பாய்ச்ச இருந்த போது, ஏனென்றால் தேவன்... மேலே இருந்து கர்த்தருடைய தூதன் பேசினார், அவர், "ஆபிரகாமே, பிள்ளையாண்டான் மீது உன் கையைப் போடாதே" என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ அந்த மலையில், பின்னாக புதரிலே, தன் கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது? 39. இப்பொழுது, முதலாவது காரியம், மக்கள் வசிப்பிடத்திலிருந்து மூன்று நாள் பயண தூரத்தில் இருந்தான், ஏறக்குறைய நூறு மைல் தூரம். அதற்கடுத்த காரியம் என்னவெனில், மலையின் உச்சிக்குச் சென்றான், அங்கே தண்ணீரோ அல்லது உணவு கொடுப்பதற்கு நீரூற்றுகளோ ஒன்றுமே இல்லை, அந்த மலை உச்சியில், அந்த மலையின் உச்சியில் ஒரு ஆட்டுக்கடா இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது, முதலாவது அது மக்கள் வசிப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. அடுத்த காரியம் அது மலையின் உச்சியாயிருந்தது. ஆபிரகாம் அந்த ஆட்டுக் கடாவை எடுத்தான். தன்னுடைய குமாரனை கட்டவிழ்த்து, அந்த ஆட்டுக் கடாவை கட்டி, அதை ஒரு தகனபலியாக பலியிட்டான். மேலும் கவனியுங்கள், அது ஒரு தரிசனமாக இருக்க வில்லை. ஆட்டுக்கடாவிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அது என்னவாக இருந்தது? கிறிஸ்துவை இருப்பவராக செய்த ஒரு முன்னடையாளத்தில் உள்ள தேவன். பின்னர் அவனுடைய ஜீவியத்தை அந்த ஆட்டுக்கடா எடுத்துக் கொண்டது, பின்னர் உடனடியாக அது காட்சியில் இல்லாமல் போய்விட்டது: யேகோவா-யீரே, கர்த்தர் தமக்கான ஒரு பலியை அருளிச் செய்வார். தேவனை அவருடைய வார்த்தையில் பெற்றுக் கொள்ளும்போது, அது எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருப்பினும், அவருடைய வார்த்தையை சந்திப்பதற்கு தேவன் அங்கே இருக்கிறார்– யேகோவாயீரே! இன்னும் ஒரு சிறு காரியம். 40. இப்போது, கர்த்தர் நம்முடைய அடைக்கலமும், பெலனுமானவர், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர். மீட்பின் நாமத்தில், ஷ-ம்-மா [Shammah], ஷம்மா என்றால் "கர்த்தர் இங்கு பிரசன்ன மாயிருக்கிறார்" என்று பொருள். இப்போது, யேகோவா யீரே என்பதற்கு, அருளிச் செய்வார் என்று பொருள். யேகோவா, அருளிச் செய்கிறவர் பிரசன்னமாயிருக் கிறார். நான் என்ன கூறுகிறேன் என்பதை புரிந்து கொண்டீர்களா? அவர் கர்த்தரால் அருளப்பட்ட பலியாக இருப்பாரானால், தேவையான போதும், உதவி வேண்டும் என்ற நேரத்திலும், பிரசன்னமாயிருக்கிற கர்த்தராகிய தேவனாக அவர் இருக்க வேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிந்து கொண்டீர்களா? இப்போது, ஒவ்வொருவரையும் அவர்களுடைய பாவத்தில் இருந்து இரட்சிக்க இன்றிரவு அவர் இங்கிருப்பாரானல், இந்த இரவில் அவர் மற்ற இந்த மீட்புக்குரிய நாமங்களையும் நிறைவேற்றும்படிக்கு அவர் இங்கே பிரசன்னமாக இருக்க வேண்டியவராயிருக்கிறார். அவர் யேகோவாயீரே, மற்றும் யேகோவா-ராஃப்பா, யேகோவா நம்முடைய... அவர் யேகோவா, தேவனால் அருளப்பட்ட நம்முடைய பலி, நம்மை சுகமாக்குகிறவர், நம்முடைய கொடி, நம்முடைய சமாதானம், நம்முடைய மேய்ப்பர், நம்முடைய நீதிபரர், அவருடைய பிரசன்ன மாகுதல். சரியாக இப்போது அவர் அவை எல்லாமுமாக இருக்க வேண்டும். கடைசி காரியம்... 41. இறுதியில், அவருடைய மீட்பின் நாமங்களில் ஒன்று, அது, ஆபிரகாமுக்கு அவர் தரிசனமாகி அவர், "நான்-நான் யேகோவா-ரஃப்பா, பாதையை அருளும் படிக்கு, ஒரு பலியை அருளும்படிக்கு, அருளப்பட்ட ஒருவர்" என்று கூறினார். அது எதுவாக இருந்தாலும், தேவன் அதை அருளிச் செய்வார். "மேலும் உன்னை சுகமாக்குகிற யேகோவா நானே. நானே உன்னுடைய நீதிபரர். நானே உன்னுடைய சமாதானம். நானே உன்னுடைய கேடகம். நானே உன்னுடைய கொடி. அதை நிறைவேற்றுவதற்கு நான் எப்போதும் பிரசன்னமாயிருப் பேன்." ஆமென். நான் என்ன பொருள் கொள்கிறேன் என்று காண்கிறீர்களா? அதை நிறைவேற்றுவதற்கு நான் எப்பொழுதும் பிரசன்னமாயிருக்கிறேன், "கர்த்தராகிய நான் அதைச் உரைத்தேன். கர்த்தராகிய நான் அதை நட்டேன். இரவும் பகலும் அதற்கு தண்ணீர் பாய்ச்சு வேன், அதை ஒருவனும் என்னுடைய கரத்திலிருந்து பறித்துக் கொள்ள முடியாது." ஒரு சிறு கதை, அது என்னைப் பற்றியது. நான் இங்கே நீண்ட நேரம் பிரசங்கித்துக் கொண்டே இருந்தால், பின்னர் அங்கே ஜெப வரிசையானது அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் போய்விடும். சற்று நேரம் கவனமாய்க் கேளுங்கள். ஒரு சமயம் இந்த வேதவசனம் எனக்கு மிக முக்கியத்துவ மானதாக இருந்திருக்கிறது, அநேக வேளைகளிலும் கூட. ஆனால், இந்த குறிப்பிட்ட நேரத்தில், இதற்கு உங்களு டைய கவனத்தை நான் கோர விரும்புகிறேன். அது, நான் திருமணம் செய்து கொண்ட வருடமா யிருந்தது. என்னுடைய முதல் மனைவியை இழந்த பிறகு, ஐந்து வருட காலம் தனிமையாகவே இருந்து வந்தேன். இப்பொழுது எனக்கு மனைவியாயிருக்கிற இந்த அன்பான இளம் பெண்ணை திருமணம் செய்தேன். 42. நாங்கள் ஏழைகளாக இருந்தோம். நான் திருமணம் செய்த தருணம், மலையேறிச் சென்று ஒரு வேட்டை பயணத்தை செய்து என்னுடைய விடு முறையைக் கழிப்பதற்கு போதுமான பணத்தை, கிட்டத் தட்ட இருபது டாலர்களை வைத்திருந்தேன். ஆகவே அது எங்களுடைய விடுமுறை நாட்களும், தேனிலவும் சேர்ந்த ஒன்று. ஆகவே, வேட்டையில் விருப்பம் உள்ள ஒரு நபரை அவள் திருமணம் செய்து கொண்டாள். நான் மலைகளை விரும்புகிறவன். அவ்விதமாக வெளியிடங் களுக்கு செல்வதை விரும்புபவன். இதற்கிடையில் ஒரு பெண், அவளுடைய கணவன் தயாரித்த செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தூண்டில் இரையைக் கொடுத்தாள். அந்த சகோதரி இங்கு இருந் தால், அதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பு கிறேன். நிச்சயமாக அதைப் பயன்படுத்துவேன், தேவன் எனக்கு உதவி செய்வாராக. இப்போது, வெளியிடங்களுக்கு போவதை விரும்பு கிறவன், ஏனென்றால் அது தனிமையாயிருக்கும். பின்னர் நான் அங்கே வரும்போது, சலனமின்றி அதில் மூழ்கி விடுவேன். இப்போது, நாங்கள் அடிரான்டாக்ஸ் (Adirondacks) என்ற மலைப் பகுதிக்கு சென்றோம். வனத்துறை பணியாளருடன் (ranger) வேட்டையாட வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன். ஆகவே, எனக்கு கரடியை வேட்டையாடுவது பிடிக்கும், ஏனென் றால் அது அப்படிப்பட்ட ஒன்று – அதை வேட்டை யாடுவதற்கு நிறைய திறமைகளை (skill) உபயோகிக்க வேண்டும். மேலும் நான்... 43. எது அதைச் செய்கிறது? என்னைப் பொருத்த மட்டில், என்னுடைய பாட்டனார், சவுத்லேண்ட் (Southlands) பகுதியில் வாழ்ந்தவர்களிலேயே மிகச் சிறந்த வேட்டைக்காரர் ஆவார். அவர் - அவருடைய வாழ்நாள் முழுவதும் கண்ணி வைத்து வேட்டை யாடுவார், புத்திசாலி, பள்ளி ஆசிரியர், பாதி இந்தியன். அவர் - அவர் மலைகளை நேசித்தார், ஆகவே அவர் அங்கு தங்குவதையே விரும்பினார். நல்லது, அது என்ன... அவருக்குள்ள பண்புகள் அனைத்தும் எனக்குள் ஊற்றப்பட்டு விட்டது என்று எண்ணுகிறேன். அதை நான் விரும்புகிறேன், நான் மலைகளை நேசிக்கிறேன், அங்கு இருக்கும் போது வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். அப்படிப்பட்ட காரியங்களைப் போல, ஒரு இடத்திற்கு ஒருவர் செல்வாரேயானால் அங்கு எந்தக் குறையும் இல்லாதவனாக பூரணமாக இருப்பதை உணரமுடியும். ஆகவே, அதற்குப் பின்பு, மேலே அடிரான்டேக்ஸ் என்ற இடத்தில் அங்கே வனத்துறை பணியாளர் இல்லை. அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அங்கு இருக்க மாட்டாராம். அங்கே... மிருகங்களை கீழே ஓடச் செய்வதற்கு அங்கே அதிக அளவில் புயல் காற்று வீசவில்லை. ஆகவே நானே மலை மேல் சென்றேன். நாங்கள் சாய்ந்து கொள்வதற்கென்று சிறிய கொட்டகை அமைத்து, மலைகளின் உச்சிக்கு என் மனைவியை கூட்டிச் சென்றேன். பட்டணத்தை விட்டு மிகத் தூரமான இடத்திற்கு பயணித்தோம். ஹரிகேன் மலையின் [Hurricane Mountain] உச்சிக்குச் சென்றோம். அது ஏறக்குறைய இருபத்தைந்து மைல் தூரமாகும். அங்கே ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு முன்பதாக, ஒரே வருடத்தில் மூன்று கரடிகளை வேட்டையாடினேன். 44. அங்கு மலையின் உச்சியில் இருபத்திரெண்டு வயதான இந்த பெண்ணோடு, ஸ்திரீயோடு இருந்தேன், அப்பொழுது எனக்கு வயது முப்பது. இப்படியாக நாங்கள் மலையின் உச்சியில் இருந்தோம். அப்பொழுது பில்லி பாலுக்கு, நான் நினைக்கிறேன் ஆறு வயதிருக்கும், பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப் பட்டிருந்தான். நல்லது, அந்த சிறுவன், வயதைப் பொருத்தமட்டில் மிகச் சிறியவன், ஆகவே அவள் அவனை பொறுப்பெடுத்துக் கவனித்துக் கொண்டிருந் தாள். வன பணியாளர் அங்கு இல்லை. அங்கே ஒரு தோற்றம் காணப்பட்டது, ஒரு வகையான தோற்றம், ஒரு புயல் காற்று வருவது போலத் தோன்றியது, ஆகவே, நான், "தேனே, வனத்துறை பணியாளர் வருவதற்கு முன், நாம் கரடியை வேட்டை யாடுவதற்குப் போக வேண்டும். மரங்கள் வெட்டப்பட்டு பழையதாய்க் கிடக்கும் சில இடங்களை நான் கடந்து செல்லப் போகிறேன். ஒரு சில வருடங்களுக்கு முன்ன தாக இங்கே மரங்களை துண்டு துண்டாக வெட்டி போட்டுள்ளனர். அவைகளைக் கடந்து செல்வேன், ஒரு மானை நமக்கு வேட்டையாடித் திரும்புவேன், நாம் புத்தும்புது (fresh) மான் கறியை பெறுவோம்" என்றேன். அவள், "நல்லது, அதிக தூரத்திற்கு சென்று விடாதீர்கள்" என்றாள். "உங்களுக்கான இரவு உணவை ஆயத்தமாய் வைத்திருப்பேன்" என்றாள். அதற்கு நான், "அது நல்லது" என்றேன். அந்த இரவு பயங்கர குளிராக இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் பில்லியை வைத்து இவ்விதமாக அணைத்துக் கொண்டோம், அவனை குளிரினால் உறைந்துவிடாமல் பாதுகாத்தோம். அவள் இதற்கு முன்பு ஒருபோதும் அவ்விதமான காடுகளில் இருந்தது இல்லை, அதைக் குறித்து அதிகமாக ஒன்றும் அவளுக்குத் தெரியாது. அவள் நிச்சயமாக குளிரினால் அப்படியே உறைந்து போவதைப் போல காணப்பட்டாள். தேவதாரு மரங் களின் ஊசி போன்ற இலைகள் மேல் (pine needles) தூங்கினாள். 45. ஆகவே நாங்கள் அதற்கடுத்த நாள் வெளியே சென்றோம், என்னுடைய சிறிதும் பழையதுமான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, இந்தப் பக்கமாக கீழே நடந்தேன். நல்லது, நான் காடுகளை நன்றாக அறிந்தவன், ஆகவே நான் வழிதப்பிப் போகமுடியாது என்று நினைத்தேன். ஆகவே நான்-என் ஜீவிய காலமெல்லாம் காடுகளில் இருந்திருக்கிறேன். மேலும், "இப்போது, உங்களால் என்னை வழிதப்பிப் போகச் செய்ய முடியாது" என்றேன். ஆகவே கீழே இந்தப் பக்கமாகச் சென்றேன், சிறு மரங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தது, ஆகவே பின்னால் திரும்பினேன், மான்கள் கூட்டம் செல்லும் தடங்களைப் பார்த்தேன். அவைகள் யாவும் கூர்மையான குளம்புகளை உடையனவாக இருந்தது, அதனால் உண்டான பாதை. ஆகவே நான் மலையின் உச்சிக்கு இந்த பக்கமாக ஏறிச் சென்றேன். புதருக்குள் ஏதோ அசைகிற சத்தத்தைக் கேட்டேன். அருகில் சென்று கவனித்தேன். நான்கு கால்களை கொண்ட பிராணி அசையும் சத்தத்தைக் கேட்டேன், ஆனால் அது குளம்புகள் உடையவை அல்ல. அது பாதங்கள் உடைய ஒன்று. நான், "அது என்னவாக இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்" என நினைத் தேன். அது சற்று இருளாக இருந்தது. அந்த பசுமை மாறாத காடுகளினுள்ளே நான் அதைப் பார்க்க நேர்ந்தது. அது ஒரு-ஒரு சிங்கம். பாதையை அந்தவிதமாக கடந்தது. அது அவ்வளவு வேகமாக சென்றது. நான் அதை குறிவைத்து சுட முடியவில்லை. நான், "நல்லது இந்தப் பக்கமாக மேலே சென்று, மறுபக்கமாய் கீழே இறங்க வேண்டும், அப்பொழுது எல்லா நேரங்களிலும் ஹரிக்கேன் மலையின் அடிவாரத்திலேயே இருப்பேன்" என நினைத்துக் கொண்டேன். மேலும் நான், "அப்பொழுது நான் எப்பொழுதும் கோபுரத்தை நோக்கி பார்க்கக்கூடும், ஏனென்றால், வெகு விரைவில் ஒரு புயல் வருவது போலத் தோன்றியது" என்று கூறிக் கொண்டேன். 46. ஆகவே, நான் - நான் இந்தப் பக்கமாக சென்று கொண்டே, சென்று கொண்டே, சென்று கொண்டே யிருந்தேன். எங்கோ ஒரு- ஒரு கரடியின் வாசனையை நுகர்வதாக நினைத்தேன். மேலும் அதனுடைய வாசனை வந்து கொண்டே இருந்தது. எனவே, "அது இங்கே தான் எங்கேயோ அருகில் இருக்கிறது. ஒரு வேளை எனக்கு முன்புறமாக கூட இருக்க நேரிடலாம்" என நினைத்தேன். ஆகவே தரையையே கவனித்துக் கொண்டு இந்த விதமாக நடந்தேன். வேட்டையாடச் செல்லுகிற ஒரு நபர், வெறுமனே தோளின் மீது துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாதாரணமாக நடந்து செல்ல மாட்டான். இலைகளினூடாக ஏற்படும் அசைவுகள் முதற்கொண்டு நீங்கள் கவனம் செலுத்துவீர்கள், ஓ, இப்படியாக கவனிக்க வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு. ஆகவே, மிக அருகில் கவனித்துக் கொண்டே வந்தேன், நான் எங்கே சென்று கொண்டிருக்கிறேன் என்பதில் கூட கவனம் செலுத்தவில்லை. நான் ஒரு குன்றின் மேல் ஏறினேன், இடது பக்கமாகத் திரும்பி னேன். "நல்லது, சரியாக அங்கே உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்குக்கு நேராக சென்று கொண்டிருக்கிறேன்" என நினைத்தேன். அங்கே கரடுமுரடான மலை உச்சிகள் (jagged places) நிறைய காணப்பட்டன. 47. வெகு சுலபமாக நெடுக வழுக்கிக் கொண்டே கீழே வந்தடைந்தேன். நான், "அந்த கரடி இருப்பது இங்கிருந்து வெகு தூரத்தில் இருக்காது" என்று நினைத்தேன். அங்கு ஒரு பழமையான பெரிய குகையைப் பார்த்தேன். அந்த கரடியை வெகு நெருக் கமாக சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டு, அது தூங்கிக் கொண்டிருக்கிறதா என்பதைக் காண அந்தக் குகையின் மேல் தாவிச் சென்றேன். ஆகவே அதைச் சுற்றி இந்தப் பக்கமாக வந்தேன். அங்கே அது ஒரு பழைய குகையாக இருந்தது. அது காலியாயிருந்தது. அதற்குள் ஒன்றும் இல்லை. நான், "நல்லது, அது அங்கே இருந்திருக்கும்" என எண்ணிக் கொண்டேன். எனவே, நான் மலைக்குப் பின்னாக கீழிறங்கி, மீண்டும் சுற்றிலும் சென்று, திரும்ப வந்தேன். பள்ளத் தாக்கின் நடுவே சில புதர்கள் அசைவதை பார்த்தேன். நான் அதை கவனித்தேன், ஏனென்றால், பெரும்பாலான நேரங்களில், கரடிகள் எறும்புகளைத் தின்னும். அவைகளுக்கு எறும்பு என்றால் பிடிக்கும், ஏனென்றால் அது இனிப்பாக இருக்கும். தங்கள் பாதங்களை அவைகளின் மீது கிளறி, அதிலிருந்து அவைகளை பொறுக்கும், பின்பு அதனுடைய நகங்களை நக்கும். ஆகவே, நான் உன்னிப்பாக கவனித்தேன், அங்கே மிகப் பெரிய மான் ஒன்று வந்தது. நான், "நல்லது, என்னே! நான் வீட்டை விட்டு தூரமாய் இருக்கிறேன், ஆனால் எனக்கு தேவையானது அந்த ஒன்றே" என்று எண்ணினேன். ஆகவே நான் அந்த மானை சுட்டேன். அதைச் சுற்றி வந்தேன். அப்பொழுது நான், "நல்லது இப்போது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று கூறுகிறேன். நான் மீண்டும் செல்லப் போகிறேன். இங்கே பார், ஏன், இப்பொழுது மணி ஒன்று தான் ஆகிறது" என்றேன். "அவள்-அவள் எனக்காகக் காத்துக் கொண் டிருப்பாள்" என்றேன். 48. ஆகவே, நான் அந்த பள்ளத்தாக்கிலே சிக்கிக் கொண்டேன். சிறிது தண்ணீரானது இந்த விதமாக சிற்றலையாக சென்று கொண்டிருந்தது. என்னால் முடிந்த வரை கடினமாக அந்த பள்ளத்தாக்கின் மேலே செல்ல ஆரம்பித்தேன். தற்செயலாய் மேலே நோக்கி பார்த்தேன். நான், "சொல்லப் போனால், நான் அங்கிருந்து துரிதமாய் புறப்பட வேண்டும். அந்தப் புயல் மிகவும் அருகில் உருவாகிக் கொண்டிருக்கிறது" என்றேன். அந்தப் புயல் கீழே இறங்கி வந்து, பனிமூட்டம் ஏற்பட்டால், அதன் பின் உங்களால் எதையும் பார்க்க முடியாது. நான் நடக்க தொடங்கினேன், நடந்தேன், நடந்து கொண்டேயிருந்தேன். நான், "இப்போது, பார்ப்போம், அங்கே எங்கோ ஒரு இடத்தில்தான் நான் திரும்பி னேன்" என்றேன். அந்த இடத்தை தேடிக் கொண்டே, தேடிக் கொண்டே சென்றேன். முதலாவது உங்களுக்கு தெரியுமா? நான் நடந்தேன், நடந்தேன், நடந்து கொண்டேயிருந்தேன். நான், "சொல்லப் போனால், அது ஒரு நீண்ட தூரம், ஆனால் நான் எந்த வழியாய் வந்தேன் என்பதை இன்னும் பார்க்கவில்லையே" என்று எண்ணினேன். முதலாவது எனக்கு தெரிந்தது, நான் எண்ணினேன்... துளிகள்... வியர்வை கொட்டியது. என்னுடைய பழைய சிவப்பு நிற கைக்குட்டையை வெளியே எடுத்தேன், என்னுடைய வியர்வையை துடைத்தேன், சுற்று முற்றும் பார்த்தேன். அங்கே என்னுடைய மான் தொங்கிக் கொண்டிருந்தது. "நான் என்ன செய்தேன்? நான் திரும் பவே இல்லை, திரும்பி வரவே இல்லையே" என்றேன். நல்லது, நான், "என்னுடைய இடத்தை தவற விட்டு விட்டேன்" என்றேன். ஆகவே, நான் மறுபடியும் தொடர்ந்தேன். நான் - நடந்தேன், நடந்தேன், நடந்தேன், நடந்தேன், நடந்து கொண்டேயிருந்தேன். வலது பக்கம் கவனித்துக் கொண்டே நடந்தேன், ஏனென்றால், நான் வலது பக்கத்திலிருந்து திரும்பினேன் என்பதை அறிந் திருந்தேன். (வரும்போது) இடது பக்கமாக திரும்பினேன், எனவே நான் போகும்போது வலது பக்கமாக திரும்ப வேண்டும். 49. பின்பு அந்தப் புயல் அந்தப் புதர்களில் வீச ஆரம்பித்தது. ஆகவே, மறுபடியும் நடந்தேன், நடந் தேன், நடந்தேன். முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, நான் மிகவும் களைப்படைந்து விட்டேன். நான், "நல்லது, நான் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வருகிறேன். நான் கடந்து வந்த அந்த சிறிய குன்று எங்கே இருக்கிறது என்பதை நான் நிச்சயம் அறிந்திருக்கிறேன். ஏனென்றால், அந்த இரு மலைகளுக்கிடைப்பட்ட பகுதியில் இந்த விதமாக அவைகள் பக்கவாட்டில் இருந்தன" என எண்ணினேன். பின்னர் அந்த இரு மலைகளுக்கிடைப்பட்ட பகுதியை கடந்தேன். பின்னர் இறங்குவதும் ஏறுவதுமாக சென்றேன். சொல்லப் போனால், முன்னால் இருக்கிற மலைகளை கூடப் பார்க்க முடியவில்லை, தூரமாய் இருந்தது, ஏனென்றால் மிகவும் பனி மூட்டத்தால் மூடப்பட்டி ருந்தது, இல்லாவிட்டால், நான் ஒரு உயரமான பகுதிக்கு ஏறிச்சென்று சுற்றிலும் பார்த்திருப்பேன். ஆனால் அது பனிமூட்டத்தால் மூடப்பட்டிருந்தது, ஆகவே அதைச் செய்ய முடியவில்லை. பனியும், பனித்துகள்களும் பொழிந்து கொண்டிருந்தன. ஆகவே, இன்னும் சற்று இந்த விதமாக முன்னோக்கிச் சென்றேன். நான் தற்செயலாய் நின்று கவனிக்க நேரிட்டது. அப்பொழுது நான் மறுபடியும் என்னுடைய மான் இருக்கும் இடத் திற்கே வந்திருந்தேன். 50. இப்பொழுது, அதை இந்தியர்கள் மரண அணிவகுப்பு என்றோ அல்லது மரண நடை என்றோ அழைப்பார்கள். நீங்கள் சிறிய குன்றின் மேல் அல்லது சமபூமியில் இருக்கிறீர்கள், ஒரு வட்டத்தில் நடக்கிறீர்கள், அங்கு திசை காட்டும் கருவியோ அல்லது வேறெதுவுமே அங்கே இல்லை. காடுகளுக்குச் செல்லும் போது நான் திசைகாட்டும் கருவியை ஒருபோதும் கொண்டு சென்றது கிடையாது. நான் மிகவும் திறமைசாலி, நான் வழிதப்பிப் போக முடியாது என்று எண்ணிக் கொண்டேன்.. நீங்கள் பாருங்கள்? தேவன் எனக்கு சிறிது புத்தி கற்பிக்க வேண்டியதாயிற்று. நான் தன்னிறை வுள்ளவன் அல்ல (selfþsufficient) என்பதை நான் அறிந்து கொள்ளும்படிக்கு தேவன் என் தலையில் சிறிது மூளையை வைத்தார். நான் எப்படிப்பட்டவன் என நினைத்திருந்தேனோ அந்தளவாக நான் இல்லை. நான் சுற்றிலும் நடந்தேன். மறுபடியும் இந்த மான் இருக்கும் இடத்திற்கே வந்தேன். அதை நான் மூன்று முறை செய்தேன். நான் பாதையை தவறவிட்டேன் என்பதை அறிந்து கொண்டேன். நல்லது, நான்... பின்னர் நான் பதற்றம் அடைந்தேன். அது சாயங்காலம் நான்கு மணி முப்பது நிமிடங்கள் இருக்கும், கிட்டத்தட்ட ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இருள் கவ்வத் தொடங்கியது, ஏறக்குறைய இருளடைந்துவிட்டது. நான், இரக்கம்! இப்பொழுது நான் என்ன செய்வேன்? எல்லா கவலையும் என்னுடைய மனைவியைப் பற்றிய தாயிருந்தது. "உலகத்தார் சாவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக என் மனைவி செத்துவிடுவாள், அவளும், அந்தக் குழந்தையும் இன்று இரவு இந்த மலையிலேயே மரித்துப் போய் விடுவார்கள்" என்று எண்ணினேன். இப்பொழுது, அது என்னைப் பற்றியதாக மாத்திரம் இருக்குமென்றால், நான் மறுபடியும் அந்தக் கரடியைத் தேடிச் செல்ல முயற்சி செய்திருப்பேன் அல்லது எனக்கென்று ஒரு இடத்தை கண்டுபிடித்து, ஓரிரு நாட்கள் அந்த புயல் கடந்து போகுமட்டும் அங்கேயே தங்கியிருந்திருப்பேன். பாருங்கள்? 51. இப்பொழுது, இங்கே ஒரு சிறு விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன். எனக்காகவென்றால், நான் அந்த குகைக்குள்ளாக சென்றிருப்பேன், அல்லது எங்கோ ஒரு பாறையின் அடியில் சென்று, எனக்கு சில விறகுகளைக் கொண்டு ஒரு நெருப்பை உண்டுபண்ணி யிருப்பேன். ஆனால் அவ்விதம் செய்வதற்கு நான் முயற்சிக்கவேயில்லை, ஏனென்றால் அது மிகவும் பனிமூட்டமாயிருந்தது. அந்நேரத்தில் என்னால் அதை செய்ய முடியவில்லை. அது ஒரு அவசரநிலை. என் மனைவி, அவளுடைய ஜீவிய காலத்தில் கடந்த இரவைத் தவிர முன்னர் ஒருபோதும் காடுகளில் இருந்தது இல்லை, எவ்வாறு ஒரு நெருப்பை உண்டாக்க வேண்டும் என்பது குறித்து ஒரு துளி கூட அவளுக்குத் தெரியாது–எதுவும் தெரியாது என்பதை நான் அறிவேன். அந்த சிறு பையன், உலகத்தார் மரிப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக இரண்டு பேரும் மரித்துப் போவார்கள், ஏனென்றால் அந்த இரவில் குளிர் ஒருவேளை பூஜ்ஜியத்துக்கும் கீழே போய்விடும். அவர் கள் மரணபயத்தில் இருப்பார்கள். வனாந்திரத்தில் எங்காவது அலைந்து திரிந்து தேட முயற்சிப்பார்கள் அல்லது தீவிரமாக என்னை தேடிப் போவார்கள் அல்லது ஏதோ ஒன்று–அல்லது சத்தமிடுவார்கள். மேலும்-என்ன சம்பவிக்கும் என்று கூறுவது மிகவும் கடினம். ஏதாவது ஒன்று தங்கள் சத்தத்தை வெளியிட்டு ஊளையிடுமானால், இரண்டு பேரும் மயங்கி விழுந்து விடுவார்கள் என்பதை அறிவேன். நிச்சயமாக மயங்கி விழுவார்கள். அந்த பகுதியில் ஒரு சிங்கம் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன். 52. ஆகவே, நான், "ஓ, என்னே!" என்று கூறி பின்னர் உண்மையாகவே பைத்தியம் பிடித்தவன் போலா னேன். நான் நடுங்கினேன், பதற்றமடைந்தேன். அப்பொழுது நான், "வில்லியம் பிரன்ஹாமே, ஒரு நிமிஷம் பொறு, உனக்கு என்ன சம்பவித்தது? நீ பைத்தியம் ஆகிவிட்டாயா?" என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். வழக்கமாக சம்பவிக்கும் காரியம் அதுதான். நீங்கள் நிலைதடுமாறுகிறீர்கள், மேலும் நீங்கள்... அவர்கள் உங்களை ஒரு குழியில் கிடப்பதை, அல்லது உங்களுக்கு நீங்களே வருவித்துக் கொண்ட அல்லது அது போன்ற ஒன்றில், காடுகளில் ஏற்படும் ஆபத்தில் நீங்கள் இருப்பதை காண்கிறார்கள். மேலும் நான், "இங்கே, நீ மிகவும் சிறந்த ஒரு காட்டுவாசி. நீ வழிதப்பிச் செல்ல முடியாது. உனக்கு என்னதான் நேர்ந்தது? " என்று கூறிக் கொண்டேன். பின்னர் நான் ஒரு பாறையின் மீது அமர்ந்தேன். "இப்பொழுது, நீ தொலைந்து போனாய் என்று எண்ணு கிறாய். அப்படித்தானே? ஆனால் நீ தொலைந்து போகவில்லை" என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். மேலும், நான், "ஏன், அந்த பனிமூட்டமெல்லாம் எனக்கு ஒரு பெரிய காரியமே இல்லை. ஏன், நிச்சயமாக, சரியாக அதனூடாக என்னால் தொடர்ந்து செல்ல முடியும், நிச்சயமாக" என்றேன். மேலும் நான், "இப்பொழுது, பார்க்கலாம், காற்று சரியாக என் முகத்திற்கு நேராக வீசுகிறது. அவ்வாறு அது என் முகத்திலே வீசுமானால், பிறகு நான் இந்த பக்கமாக திரும்ப வேண்டும். ஏனென்றால், நான் அங்கே மேலே வந்த போது காற்று என் முகத்தில் வீசியது. அப்பொழுது நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்று பொருள்" என்று கூறிக் கொண்டேன். நான் எண்ணினேன்... நான் மேலே முன்னேறிச் சென்றேன். நான், "நிச்சயமாக, நான் இயல்பாக இருக்கிறேன்" என்று கூறி என்னை நானே ஏமாற்றிக் கொள்ள முயற்சி செய்தேன். (பாருங்கள்?) நான் வழி தப்பிப் போகவில்லை என்று என்னை நம்பப் பண்ணினேன். ஆனால் உண்மையாகவே நான் வழி தப்பித்தான் இருந்தேன். மேலும் சகோதரனே, அது எந்த ஒரு நபரும் பெற்றிராத பயங்கரமான உணர்ச்சியை நான் பெற்றிருந்தேன். இந்த இரவில் நீ இழந்து போயிருப்பா யானால், உனக்காக நான் பரிதாபப்படுகிறேன். தொலைந்து போனவனாக, நான் எங்கே சென்று கொண்டிருக்கிறேன் என்பதை அறியாதவனாய் இருந் தேன், மேலும் அது ஒரு அவசர நிலை(emergency on) ஆகும். மேலும், எப்போதாவது ஒரு அவசரநிலை நடப்பில் இருக்குமானால், சகோதரனே, உன்னால் இயலும்போதே ஒரு பாதுகாப்பான அடைக்கலத்தை தேடிக்கொள்வது உனக்கு நன்மை பயக்கும். நீ இழக்கப்பட்டிருந்தால் இந்த இரவில் வழிகாட்டும் கலங்கரை விளக்கை தேடுவது உனக்கு நல்லது. 53. அங்கே நான் நடந்து கொண்டே இருந்தேன். ஒரு தாழ்வான இடத்திற்கு வந்தேன், அங்கு மிகவும் ஈரமாகவும், வழுக்கல் உண்டாக்கும் இடமாகவும் இருந்தது. நான், "இப்பொழுது நிச்சயமாக என்னால் முடியவில்லை... " என்று கூறிக் கொண்டேன். உங்களால் அங்கு ஒரு சிறு பொருளைக் கூடக் காணமுடியாது, காற்றானது மரங்களின் ஊடாக வீசிக்கொண்டிருந்தது. நான் என்ன செய்தேன் என்றால், நான் நடந்து கொண்டே அடர்ந்த வனப்பகுதிக்குள்ளாக (Giants) வந்துவிட்டேன். அதை நான் அறிந்திருக்கவில்லை. அந்த பகுதியை அவர்கள், இதுவரை மரங்களே வெட்டப்படாத அடர்ந்த இயல் காடுகள் (virgin forest - பசுமைமாறா காடுகள்) என்று அழைப்பார்கள். மேலும், அந்த காடுகள் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அப்பொழுது நான், "ஓ, என்னால் மட்டும் அந்த ஹரிகேன் மலையை (Hurricane Mountain) பார்க்க முடிந்தால், எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்வேனே" என்று கூறிக் கொண்டேன். நான், "நல்லது, அந்த புயல் கீழே வருகிறது, அந்த மலையில் எவ்வாறு காற்று சுழன்று அடிக்கும் என்றும், நகரும் என்றும் கணிப்பது மிகக் கடினம், ஆனால் இப்பொழுது, அது எப்படியாயினும் வந்துவிடும்" என்று எண்ணிக் கொண்டேன். ஆகவே, அந்த காற்றைச் சார்ந்திருக்க என்னால் முடியவில்லை, நான் அதைக் குறித்து அறிந்திருந்தேன். மேலும், மறுபடியும் ஒரு குன்றின் மேல் அமர்ந் தேன்; நான், "இப்பொழுது, நீ வழிதப்பிப் போகவில்லை, நீ எங்கே இருக்கிறாய் என்பதை நீ அறிவாய். ஏன், உறுதியாக இரு. நீ எங்கே இருக்கிறாய் என்பதை அறிந்திருக்கிறாய்" என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் நான் பெற்றிருந்த எல்லாவித வேட்டை களையும், காடுகளையும் குறித்த திறமைகள் யாவும் என்னைவிட்டு நீங்கிப் போயின. நான் உங்களுக்கு கூறுகிறேன்; நான் உண்மையிலேயே ஒட்டுமொத்தமாக இழக்கப்பட்டுவிட்டேன். ஆனால் நான் என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்ட (pluck up) முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நான் பைத்தியமாக விரும்பவில்லை, உங்களுக்கு அது தெரியும், நான் என் மனைவி மற்றும் குழந்தை இருக்கும் இடத்தை அடையவில்லை என்றால் அந்த இரவில் காட்டிலேயே அவர்கள் இருவரும் இறந்து விடுவார்கள், நான் அதை அறிந்திருந்தேன். எல்லாம் முடிந்து விடும். அவர்களை விட்டுப் பல மைல்களுக்கப்பால் வெகு தூரத்தில் இருந்தேன், இருட்டு அதிகரித்துக் கொண்டே இருந்தது, புயல் வீசிக்கொண்டிருந்தது. 54. ஆகவே நான் சற்று தூரம் முன் நடந்தேன். ஏதோ ஒன்று என்னிடம், "இப்பொழுது, பில்லி, நீ உன் அடுத்த பாதைக்கு செல், உன் அடுத்த பாதைக்கு செல், (get next to yourself) நீ பாதை தவறிவிட்டாய் என்பதை அறிவாய்" என்றது. நான், "இல்லை, நான் அல்ல, நான் தவறிப் போகவில்லை, நான் மிகச் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன்" என்று கூறினேன். ஒரு குன்றின் மீது மோத இருந்தேன், அப்பொழுது நான், "இல்லை, நான் சரியான பாதையில் செல்லவில்லை" என்று எண்ணினேன். நான் பின்னால் திரும்பி இந்தப் பக்கமாக போனேன், அப்பொழுது நான் "இதை இதற்கு முன்னால் ஒருபோதும் நான் பார்த்ததில்லையே, இது எங்கிருந்து வந்தது?" என்று எண்ணினேன். நான் நடுக்க முற்றதை உணர்ந்தேன். நான்... என்னிலிருந்து வியர்வை கொட்டியது. நான், "இப்பொழுது, உன்னை நீயே முட்டாளாக்கிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை, நீ தவறவிட்டு விட்டாய். செய்வதற்கு ஒரே ஒரு காரியம் தான் உள்ளது; பாதை தவறிவிட்டேன் என்பதை ஒத்துக்கொள்வது தான் அது" என்று கூறிக் கொண்டேன். நல்லது, "நான் பாதை தவறிவிட்டேன்" என்று நான் எண்ணினேன். அப்படி என்றால் இப்போது என்ன செய்வது... அது என்னுடைய மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் இல்லை என்றால், இங்கே இருக்கிற பாறைகளில் ஒன்றுக்குப்போய், சிறிது நேரத்திற்கு அல்லது நாளை வரையோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரையிலுமோ அல்லது புயல் அடங்குவது வரைக்கும் அங்கு தங்கி இருப்பேன். பின்னர் அதை விடவும் உயரமான இடத்திற்கு ஏறிச்சென்று, சுற்றும் முற்றும் பார்த்து, நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் பார்த்திருப்பேன். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் செல்வேன். ஆனால் உங்களால் அதை அப்பொழுது செய்ய முடியாது. பனிமூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. 55. நல்லது, நான் நடக்கத் தொடங்கினேன். நான், நல்லது, ஏதாவது ஒரு வழியை நான் தெரிந்தெடுக்க வேண்டும். எனக்கு கிழக்கு எது, வடக்கு எது, மேற்கு எது அல்லது தெற்கு எது என்று தெரியவில்லை. எனக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை, மரங்களில் பனி படர்ந் திருக்கிறது. மரத்தின் பட்டை உரிப்புகள் (bark) எந்த பக்கம் பார்த்து இருக்கிறது என்பதை அல்லது எதையும் உங்களால் கூற முடியாது. மற்றுமொரு காரியம் மரங்களில் பாசி படர்ந்து இருக்கும். அது தட்டையாக இருந்தது, தளத்தின் இரண்டு பக்கங்களிலும் பாசி காணப்பட்டது. ஆகவே பின்னர், நான், "என்னே, நான் இப்போது என்ன செய்வேன்?" என்று எண்ணினேன். எனவே நான் நடக்கத் தொடங்கினேன். நான், "இப்பொழுது, நான் என்ன செய்ய போகிறேன் என்பதை உங்களுக்குக் கூறப் போகிறேன். நான் சரியாக இந்த வழியாகப் போகப் போகிறேன். நான் வந்த வழி இதுதான் என்பதை அறிவேன். ஸ்திரமான நேர்பாதை ஒன்றை நான் உருவாக்க வேண்டும், ஏனென்றால் நான் – நான் ஒரு வட்டத்துக்குள் நடந்து கொண்டிருந்தேன்" என்று கூறி னேன். ஆகவே நான், "ஆம் ஐயா, நான் நம்புகிறேன். நான் மிகச் சரியான பாதையில் தான் சென்று கொண்டி ருக்கிறேன்" என்று கூறிக் கொண்டே அதனூடாக நடந்து கொண்டு இருந்தேன். மேலும் நான்– நான் அதை என் உதட்டளவில் சொன்னேன். ஆனால், என் இருதயமோ "இல்லை" என்று சொல்லிற்று. ஏதோ மெல்லிய சத்தம் ஒன்று என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது, "கர்த்தர் நம்முடைய பெலனும் அடைக்கலமும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்" என்பதாக. நான், "இப்போது, நான் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன்" என்று எண்ணினேன், அவ்வாறு நடக்கத் தொடங்கினேன். ஏதோ ஒன்று, "கர்த்தர் நம்முடைய பெலனும் அடைக்கலமும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்" என்பதாக. நான், "இப்போது, நான் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறிற்று. நான் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தேன். அந்தச் சத்தம் அதிகரித்தது. "கர்த்தர் நம்முடைய பெலனும் அடைக்கலமும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்." என்னுடைய துப்பாக்கியையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து கொண்டே இருந்தேன். நான் அப்பொழுது மிகவும் களைப்புற்றவனாக இருந்தேன். உங்களுக்கு தெரியும், "கர்த்தர் நமது பெலனும் அடைக்கலமுமானவர்." என்னோடு பேசிக் கொண்டிருந்த ஒருவர் அந்த யேகோவா-ஷம்மா [JehovahþShammah] ஆகும். 56. மேலும், நான்– நான் அங்கிருந்து கடந்து சென்று கொண்டேயிருந்தேன். நான், "ஓ, தேவனே, நான் பாதை தவறிவிட்டேன். கர்த்தாவே, நான் பாதை தவறிவிட்டேன். நான்- திசைகாட்டும் கருவியை நான் கொண்டிருக்க வில்லை. என்னிடத்தில் ஒன்றுமில்லையே" என்று எண்ணினேன். ஆனாலும் நான், "இப்போதும் உம்மை நான் உடையவனாயிருக்கிறேன்" என்று கூறினேன். நான் மிகவும் சத்தமிட்டு கூறிக் கொண்டேயிருந்தேன். நான், "இப்போது ஒரு நிமிஷம் பொறு. நீ உன் சிந்தையை இழக்கப் போகிறாய். நீ பைத்தியமாகப் போகிறாய், இந்த இரவில் மரித்துக் கொண்டிருக்கிற உன்னுடைய மனைவியையும் குழந்தையையும் குறித்து நினைத்து கொண்டிருக்கிறாய்" என்று எண்ணிக் கொண்டேன். நான், "கர்த்தாவே, நான் வாழ்வதற்கு தகுதியுடையவன் அல்ல, ஆனால் அவர்களை மரிப்பதற்கு விடாதேயும்" என்று கூறினேன். "கர்த்தர் நம்முடைய பெலனும் அடைக்கலமும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" என்று கூறுகிற சத்ததை மறுபடியும் கேட்டேன். என்னுடைய துப்பாக்கியை கீழே மரத்தில் சாய்த்து வைத்தேன், என்னுடைய தொப்பியைக் கழட்டினேன், அதைக் கீழே வைத்தேன், என் தொப்பி மீது முழங்காற்படியிட்டேன். நான் மேலே நோக்கிப்பார்த்து, "தேவனே, நான் பாதை தவறிவிட்டேன். நான் - நான் - நான் - நான், பிதாவே நான் பாதை தவறிவிட்டேன். நீரே என் திசைகாட்டி. மேலும் நான்... தலைக்கனம் கொண்டவனாயிருந்த, அதைக் குறித்து எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணம் கொண்டிருந்த என்னைப் பொறுத்தவரை, நான்-நான் வாழ்வதற்கு தகுதியற்றவன். நான் தொலைந்து போக வேண்டியவன்தான். ஜீவிப்பதற்கு பல நாட்கள் நான் இங்கு தங்கியிருந்து, பன்றி இறைச்சியை உண்ண வேண்டியிருக்கும், ஆனால் என் அன்பான ஏழை மனைவியை நினைவு கூரும். அவள் ஒரு அப்பாவி. அங்கே இந்த இரவிலே என்னுடைய குழந்தை இறந்துவிடும்... எங்களுக்கிருக்கும் ஒரே குழந்தை அது. நான் எப்போதாவது.. (ஒலிநாடாவில் காலியிடம் – பதிப்பாசிரியர்) அவர்களைக் காப்பாற்றும் (ஒலிநாடாவில் காலியிடம் –ஆசி.) இந்நேரம் அவர்கள் அசாதாரணமான நிலைக்குள்ளாக சென்றிருப்பார்கள். இங்கே ஏறக்குறைய முழுவதும் இருள் சூழ்ந்துவிட்டது. நான் பாதை தவறிவிட்டேன். பிதாவே, முற்றுமாக தொலைந்து போனேன். நீர் எனக்கு உதவி செய்ய மாட்டீரா?" என்றேன். பாருங்கள்? 57. நீங்கள் வியாதிப்பட்டால் இயற்கையாக என்ன செய்வீர்களோ, அதே போல இயற்கையான முறையில் நானும் செய்திருப்பேன். அந்த இயற்கையான முறை என்னவென்றால், நான் ஒரு குகைக்குள் நுழைந்திருப் பேன். எனக்கென்று நெருப்பை உண்டாக்கி, காலை வரை அங்கே இருந்திருப்பேன். அல்லது புயல் அடங்கும் வரை இருந்திருப்பேன். நீங்கள் வியாதிப்படும் போது பொதுவாக என்ன செய்வீர்கள் என்றால், மருத்துவரிடம் சென்று அவர் உங்களுக்கு என்ன செய்யக்கூடும் என்பதைப் பார்ப்பீர்கள். ஆனால், நான் ஒரு குகைக்குள் செல்ல முடிய வில்லை; அங்கே அவசரநிலை இருந்தது. நீங்கள் மருத்துவரிடத்தில் செல்லமுடியாது, ஏனென்றால் நீ மரித்துக் கொண்டிருக்கிறாய் என்று அவர் கூறிவிட்டார். அங்கே உங்களுக்கு செய்வதற்கென்று ஒன்றுமே இல்லை. அங்கே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அவர் என்னவாக இருக்கிறார்? அவர் யேகோவா-யீரே [Jehovahþjireh] யேகோவா-ஷம்மா [JehovahþShammah]. கர்த்தர் ஒரு பலியை அருளிச் செய்வார், தேவன் நம்முடைய பிரசன்னராயிருக்கிறார். அவர் நிகழ்காலத்தில் இருக்கிற ஒருவர், வேண்டிய நேரத்தின் உதவி அவரே. அவர் இங்கே இருக்கிறார். கர்த்தர் நம்முடைய பெலனும் அடைக்கலமுமானவர், கூடவே இருக்கும் ஒரு உதவி. அல்லது நாம் வேறுவிதமாக கூறலாம்: எப்பொழுதும் இருக்கிறவர், ஆபத்துக் காலத்தில் உதவி செய்வதற்கு எப்பொழுதும் கூடவே இருக்கிறவர். அதை நாம் இவ்வாறு கூறலாம்: "கர்த்தர் நமது பெலனும் அடைக் கலமும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையாக எப்போதும் பிரசன்னராயிருக்கிறவர்." அங்கு தான் நாம் இருந்தோம். இன்றிரவில் நீங்களும் அங்கே தான் இருக்கிறீர்கள், அதே காரியம். உங்களில் பலர் மிகவும் வியாதிப்பட்டிருக்கிறீர்கள், மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். 58. இப்போது, மருத்துவர்கள்... நீங்கள் குகைக்குச் செல்ல முடியாது, அவசரநிலை காணப்படுகிறது. அப்படியானால், அது தேவனே, இன்றிரவில் அவர் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறார், "நான் உன் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையு மாயிருக்கிறேன்" என்று கூறுகிறார். நான் முழங்காற்படியிட்டு ஜெபித்தேன். நான் எழுந்தேன். நான், "நல்லது, இப்போது நான் ஜெபம் செய்தேன், தேவனே உம்மிடத்தில் கேட்டேன்; அவ்வளவு தான் என்னால் செய்யமுடிந்தது. நான் கேட்டுக் கொண்டால், அதைப் பெற்றுக்கொள்வேன் என்று நீர் வாக்குத்தத்தம் செய்துள்ளீர். அது தகுதியா யிருக்கிறது, ஏனென்றால், அது எனக்காக அல்ல, ஆனால் யாரோ ஒருவருக்காக. மேலும் நான் - மேலும் நான்..." என்று எண்ணினேன். 59. அதுபோலவே இன்றிரவில் நீங்களும், "கர்த்தாவே, ஒருவேளை நான் எப்படி ஜீவிக்க வேண்டுமோ அவ்வளவு சரியாக நான் ஜீவிக்காமல் இருக்கலாம். ஆனால் இன்றிரவில் என்னைச் சுகப் படுத்துவீர் என்றால், எஞ்சியுள்ள ஜீவியகாலத்தில் உமக்காக ஜீவிப்பேன். கைப்பிரதிகளைக் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் என்னால் செய்ய முடியாவிட்டாலும், சாட்சி பகருவதற்கு மேலாக என்னால் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் நீர் மாத்திரம் என்னைச் சுகப் படுத்துவீர் என்றால், என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வேன்" என்று கூறுங்கள். அவர் நமது அடைக்கலமும் பெலனுமானவர், மேலும் ஆபத்து சூழ்ந்துகொள்ளும் வேளையில் அவர் அனுகூலமான துணையுமானவர். ஆகவே நான் எழுந்து நின்றேன். நான் செய்ய முடிந்தது எல்லாம் அவ்வளவு தான். அப்பொழுது நான், "கர்த்தாவே, இப்பொழுது நான் இந்தப் பக்கமாகச் செல்லத் தொடங்குகிறேன். நான் சென்றது... நான் வந்தது இந்த வழிதான் என்று நம்புகிறேன். எனக்கு தெரிந்தமட்டில், என்னுடைய அறிவிற்கு தெரிந்தவரை, நான் இந்த வழியாகத் தான் வந்தேன். எனவே, "கர்த்தர் நமது பெலனும் அடைக்கலமும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்" என்று என் காதுகளில் தொனித்துக் கொண்டிருந்த அந்தச் சத்தத்தை விசுவாசித்தவனாய், இப்பொழுது அந்த சத்தம் நின்று விட்டது, நான் இந்த வழியாக நேராக செல்லப் போகிறேன். அது நீர் தான் என்று விசுவாசிக்கிறேன் தேவனே" என்று கூறினேன். 60. தேவதாரு மரங்களின் ஊடாக காற்றின் வேகம் அதைக் கிழிக்கிறதாகவும், கொடூரமான சப்தங்களைப் பிறப்பித்துக் கொண்டும் இருந்தன, இவைகளை எல்லாம் கடந்து, எங்கோ ஓரிடத்தில் தேவனுடைய தூதன் இந்தக்காட்டினூடாக என்னை தொடர்ந்து வந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் அவர் அங்கே தான் இருந்தார், அவர் என்னுடன்தான் இருந்தார், இருப்பினும் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. இவைகள் சம்பவித்து பல வருடங்கள் ஆகின்றன, ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன் இவைகள் நடந்தன. நான் இவ்விதமாக அவைகளின் ஊடே நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என் தோளின் மேல் தட்டுவதை உணர்ந்தேன் (சகோதரன் பிரன்ஹாம் பலிபீடத்தின் மேல் தட்டுகிறார் – ஆசி) அது யார் என்று பார்ப்பதற்காக நான் திரும்பினேன், சரியாக அப்பொழுது பனி மூட்டம் விலகியது. அந்தப் புதர்களின் வழியாக தொடர்ந்து சென்றேன், நான் நேராக கனடாவிற்கு சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். என் அறிவின்படியாக நான் அந்த பாதையில் சென்று கொண்டிருந்தேன். ஆனால், ஹரிக்கேன் மலையோ இந்தப் புறமாக சரியாக மேலே இருந்தது. அது என்னுடைய பாதையின் மறுபுறத்தில் இருந்தது. பாருங்கள், சரியாக நான் அதை தாண்டி சென்று கொண்டிருந்தேன். இந்த விதமாக என்னை நேராக நிறுத்திக் கொண்டேன். என் கரங்களை மேலே உயர்த்தினேன். நான், "ஓ, மகத்தான தேவனே, உம்முடைய கரத்தை என் தோளின் மேல் வைக்கும் அளவிற்கு, நீர் எனக்கு மிக அருகாமையில் இருந்தீர். நீர் என் பெலனும், உதவி செய்கிறவரும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்" என்று கூறினேன். 61. என் முகம் இறுகியது. நான், "இருட்டு அதிகமாகிக் கொண்டே போகிறது, நான் என் பயணத்தை செய்தாக வேண்டும், என்னுடைய பாதையில் என்ன குறுக்கிட்டாலும் நான் அதிலிருந்து விலகக்கூடாது, நான் எப்போதாவது பாதையை இழந்துவிட்டால்..." என்றேன். இப்பொழுது, அந்த கோடை காலத்தில் வன அதிகாரிக்கு தொலைபேசி கம்பியைக் கோபுரம் வரை கொண்டு சென்று பின்பக்கம் கீழே சென்று அதை இணைக்கும் இடம் வரை அதை கட்டிச் சென்று அவருக்கு உதவி செய்திருந்தேன். பின்னர் அந்த இடத்திலிருந்து நாங்கள் வேட்டையாடினோம். அப் பொழுது நான், "இப்பொழுது அந்தத் தொலைபேசிக் கம்பி மாத்திரம் என் கைக்கு சிக்கினால், பின்னர் நான் செல்லும் பாதையைக் கண்டு கொள்ள இயலும். ஆனால் நானோ ஹரிக்கேன் மலையை [Hurricane Mountain] நோக்கி இருக்கிறேன். இங்கே என்னால் சுற்றித் திரிய முடியாது, ஏனென்றால், அங்கே ஏராளமான மலைகளும் பள்ளத்தாக்குகளும் காணப்பட்டன. இந்த பனி மூட்டத்தில் அதை ஒரு போதும் என்னால் கண்டுபிடிக்க முடியாது. நான் நேராக அந்தக் கோபுரத்தை நோக்கி செல்லவேண்டியவனாக இருக்கிறேன்" என்று எண்ணி னேன். 62. ஆகவே, என் கரங்களை உயர்த்திய நிலையில் தேவனைத் துதித்துக் கொண்டே நடக்கத் தொடங்கி னேன். இருட்டி விட்டது. தூரத்தில் உள்ள எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. காற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது, சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. நான் மலைகளின் மேல் ஏறிச்சென்று, கீழே கரடு முரடான பகுதிக்கு வந்தேன். அவர் எவ்வழியில் நடத்துகிறார் என்பது பொருட்டல்ல, கல்வாரியை நோக்கிப் பார். அதையே பார்த்துக் கொண்டிரு. அது ஒருவேளை கடினமாக இருக்ககூடும். நீ வழுக்க நேரிடும், விழ நேரிடும். ஆனால் கல்வாரியை நோக்கி நடந்துகொண்டே இரு, நடந்து கொண்டே இருப்பாயாக. பின்னர், நான் மேலே வந்தடைந்தேன். நான், "இப்பொழுது இது இருட்டின் உச்சகட்டமாக இருக்க வேண்டும்" என்று எண்ணினேன். என் கைகளை இவ்விதமாக உயர்த்தினேன். இந்த உயரத்தில்தான் அந்த கம்பி இருந்தது என்பதை அறிந்திருந்தேன். நான், "ஓ, அந்தக் கம்பி தட்டுப்படுவதை மட்டும் என்னால் உணரக்கூடுமானால், நான் அந்தக் கம்பியை உணரக் கூடுமானால், இப்போது எனக்கிருக்கும் ஒரே நம்பிக்கை அதுதான். என்னால் முடியாது..." என்று எண்ணினேன். என் கைகள் தளர்ந்து போய் விட்டன, நான் நடப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு கையை மேலே தூக்கினவாறும், இன்னொரு கையை வைத்துக்கொண்டு அந்த புதர்களினூடே நடந்தும் சென்றேன், மரங்களைச் சுற்றி நடந்தேன். பனியும் மற்றும் எல்லாமும் உங்கள் கழுத்தைச் சுற்றியிருக்கும். நான் இவ்விதமாக நகர்ந்து சென்றேன். 63. நான், "தேவனே, இந்தப் பூமியில் இருக்கும் எனக்கு அன்பானவர்கள் எல்லாரும் அந்த கம்பியின் முடிவில் இருக்கிறார்கள். என்னால் மாத்திரம் அந்தக் கம்பியை கண்டுகொள்ள கூடுமானால்" என்று கூறினேன். என் கையை இப்படிப் பிடித்துக் கொண்டேன். மேலும் இந்த ஒன்றை கீழே போட்டிருந்தேன் ஒரு அடிகூட விலகவில்லை, பின்னிடவும் இல்லை, நிச்சயமாக நான் அதை செய்யவில்லை...... ஓ, கல்வாரிக்கு நாம் அந்த விதமாகத் தான் செல்ல வேண்டும். ஒரு அங்குலத்தைக் கூட விட்டுவிடாதீர்கள். என்னுடைய கையை மேலே உயர்த்தினபடியே வைத்திருந்தேன், இவ்விதமாக நகர்ந்து கொண்டிருந்தேன். நான், "தேவனே அதைக் கண்டு கொள்ள நிச்சயமாக நீர் எனக்கு உதவி செய்வீர். எனக்கு தெரிந்தவரை நான் இந்த மலையைத் தாண்டி நேராக வந்து கொண்டிருக்கிறேன். இந்த வழியைத்தான் எனக்குச் சுட்டிக்காட்டினீர்" என்றேன். இந்த இரவில் நீங்கள் வார்த்தையிடம் சொல்ல வேண்டியது அதுவே. "நீர் உம்மை சுகமாக்குகிறவர் என்று கூறியிருக்கிறீர். நான் என் கரங்களை உயர்த்தி இருக்கிறேன். நான் நேராக வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு செய்யத் தெரிந்த காரியம் அது மட்டுமே. என்னை சுகமளித்தலுக்குள்ளாக கொண்டு செல்வது உம்முடைய காரியம். அந்தப் பலியினிடத்திற்கு என்னை வழிநடத்துவது நீர் ஒருவர் மாத்திரமே" என்று கூறுங்கள். 64. அங்கே என்னுடைய கரங்களை உயர்த்தி யிருந்தேன். ஏற்கனவே காலதாமதமாகிவிட்டது. அவ்வாறே நான் கடந்து சென்று கொண்டிருந்தேன். என்னுடைய இருதயம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடையத் தொடங்கியது. நான், "ஓ, அதை நான் கடந்து விட்டேனா?" என்று எண்ணினேன். நான் சில தாழ்வான பகுதிகளுக்குச் சென்றேன். நான், "ஒ, நிச்சயமாக நான் மலையின் மறுபுறத்திற்கு செல்லவில்லை" என்று எண்ணிக் கொண்டேன். என்னுடைய கரத்தை இவ்வாறு உயர்த்தி இருந்தேன், அவ்வாறு அந்த புதர்களின் ஊடாகக் கடந்துசென்றேன், ஒரு ஒளிக்கதிர் கூட காணப்படவில்லை, புயல் காற்று வேகமாக வீசியது, சுழன்று சுழன்று அடிக்கிறது, புதர்களையும் மரங்களையும் கிழிக்கிறது, பயங்கர குளிர், பனி உறைதல் மற்றும் எல்லாமும் உண்டாயிருந்தன. அங்கே பனிக்கட்டியும், மழையும் அல்லது பனிமூட்டமும் ஒன்று சேர்ந்து பெய்தது. நான் இந்த விதமாக சென்று கொண்டே இருந்தேன், என் கரங்களை ஏதோ ஒன்று தட்டினது. முதலாவது காரியம் என்ன தெரியுமா, நான் எதையோ பிடித்துவிட்டேன். அதை நான் உணர்ந்தேன். அது அந்த கம்பிதான். ஓ, எப்பேர்ப்பட்ட ஒரு உணர்வு! நான் அந்தக் கம்பியைப் பிடித்தால் என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்தேன். நான், "இந்த மலையை விட்டு நான் மெதுவாக கீழிறங்குவேன், நான் மெதுவாக நகர வேண்டும். அந்தக் கம்பியை விட்டு ஒருபோதும் என் கையை எடுக்க கூடாது, ஏனென்றால் அந்த கம்பியின் கடைசி நுனியில் நான் எதைக் கேட்டேனோ அது அங்கே இருக்கிறது, அங்கேதான் என் மனைவியும் குழந்தையும் இந்த தொலைபேசிக் கம்பியின் கடைசியில் இருந்தார்கள். அந்தப் பிடியை நான் தளரவிட மாட்டேன். நான் அதை அடையும் வரை அதை தொடர்ந்து செல்வேன்" என்று நான் எண்ணினேன். நான் அதை செய்து முடித்தேன், அங்கே சிறிதளவு நெருப்பு மூட்டுவதற்கு ஏதுவாக நான் அங்கே சென்றடைந்தேன். மேலும் எல்லாமே நல்லபடியாக இருந்தது. 65. சகோதரனே, இந்த இரவில் இயேசு கிறிஸ்து ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையாயிருக் கிறார். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், மருத்துவர்களால் இதற்குமேல் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போனால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அப்பால் உள்ள அந்த சிறிய மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிற (Live Electric Wire) கம்பியைத் தொடும் வரைக்கும் தேவனை நோக்கிப் பாருங்கள், அது, "எல்லாம் முடிந்தது" என்று கூறும். எவ்வளவு அவிசுவாசிகள், சந்தேகக்காரர்கள், சபைகள், மற்றும் உள்ள அனைத்தையும் நீங்கள் கடக்க வேண்டியதா யிருந்தாலும், அதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய விடுதலைக்கு நேராக வழி நடத்துவது அந்த ஒன்று மாத்திரமே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் கரங்களை உயர்த்தினவர்களாய் இருங்கள், இந்த இரவில் தொடர்ந்து செல்லுங்கள். "எல்லாம் முடிந்தது" என்று சொல்லுகிற உங்களைத் தொடும் ஏதோ ஒன்றை நீங்கள் உணரும்வரை, விசுவாசம் எனும் உங்கள் கரங்களை உயர்த்திப் பிடியுங்கள். பின்னர் அதை பின்பற்றுங்கள். அதைப் பின்பற்றுங்கள். "அது முடிந்துவிட்டது." அவர் உங்களை வெற்றிக்கு வழி நடத்துவார் என்னும் அவருடைய வார்த்தையைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள்... விசுவாசத்தினால் நீங்கள் சுகம் அடையக்கூடும். யாராக இருந்தாலும் விசுவாசித்தால் சுகத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடும். தேவனுடைய விசுவாசம் உங்களில் ஊற்றப்படுவதை உணரும் வரை நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்திப் பிடியுங்கள். பின்பு அதைப் பின்பற்றுங்கள். கர்த்தர் நம்முடைய பெலனும் அரணுமானவர், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். நாம் ஜெபிப்போமா? 66. பிதாவே, இன்று இரவில் ஜனங்கள் மத்தியில் அவசரநிலை (emergency on) நிலவுகிறது. நீர் எங்கள் பெலனாகிய கர்த்தரும், ஆபத்துக்காலத்தில் அனுகூல மான துணையுமானவர். ஓ, தேவனே, இந்த இரவில் விசுவாசத்தின் கரங்கள் உயர்த்தப்படட்டும், ஆவிக் குரியபடி பேசுகிறேன். மாம்சமான, ஒரு சில அங்குல நீளமுள்ள இயற்கையான கரங்கள் அல்ல, ஆனால் பிதாவே, விசுவாசத்தின் கரங்கள், இந்த பாவசாபமான உலகத்தை தாண்டி உயர்த்தப்படட்டும், அந்த விசுவாசத் தின் வரிசை சந்திரனைக் கடந்து, நட்சத்திரங்களைக் கடந்து, அங்கே உன்னதத்தில் இருக்கிற அவருடைய வஸ்திரத்தை தொடும்மட்டுமாய் உயர்த்தப்படட்டும். (ஒலிநாடாவில் காலியிடம் –ஆசி.)..?... அப்பொழுது, வானத்திலிருந்து, "என்னுடைய வார்த்தையை உறுதிப் படுத்தத்தக்கதாக உன்னை சுகமாக்குகிற கர்த்தர் நானே. நான் யேகோவா-ஷம்மா [YehovahþShammah], ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். உனக்கு உதவி செய்வதற்காக நான் இங்கே இருக்கிறேன்" என்ற சத்தம் உண்டாவதாக. தேவனே, நாங்கள் தன்னிறைவுள்ளவர்கள் அல்ல என்பதை இன்றிரவு எங்களுக்கு உணரச் செய்யும். "ஓ, நான் போகப் போக சரியாகிவிடுவேன்" என்று எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டு வழிநெடுகச் செல்ல முடியாது. இல்லை கர்த்தாவே, நீரே எங்கள் அடைக்கலம். நீரே எங்களுக்கு எல்லாம். நாங்கள் நம்புவதும் நீரே, நாங்கள் விசுவாசிப்பதும் நீரே. 67. இப்பொழுது, நீர் வருவீரா, கர்த்தாவே? ஜனங்களுக்கு மிகவும் வித்தியாசமானதாக காணப்படும் படி, இதற்கு முன்பான கூட்டங்களில் நடந்திராத வேறெதாவது காரியத்தை செய்வதன் மூலம் இன்றிரவு இங்கே, ஒரு சிறு உயிர்காக்கும் சாதனத்தை (life line) வீசுவீராக. எம்மாவூரில் நீர் செய்தது போல ஏதாவது ஒன்றை செய்வீராக. சாதாரணக் கூட்டங்கள் அல்லது சாதாரண சுகமாக்கும் கூட்டங்களை விட சற்று வித்தியாச மானவைகளை செய்வீராக, அதன் மூலமாக, எங்கள் இருதயத்தின் வாஞ்சையை தம்முடைய ஐசுவரியங் களுக்கு ஏற்றார்போல் எங்களுக்கு ஈன்றருளும்படி, இன்றிரவு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து இங்கே எங்களுடன் இருக்கிறார் என்பதை அவர்கள் காணட்டும், அதை வாங்குவதற்காகவே அவர் மரிக்கவும் செய்தார். அவருடைய நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். நான் – உங்களுடன் பேசவேண்டும் என்று நான் எதிர்பார்த்ததை விட சற்று காலதாமதமாகிவிட்டது. நான் அப்படியே பேச ஆரம்பிக்கிறேன், பின்னர் அப்படியே என்னால் அதை நிறுத்த முடிவதில்லை. இப்பொழுது, அவர் இங்கே இருக்கிறார் என்பதை விசுவாசிக் கிறீர்களா? நிச்சயமாக அவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, இன்றிரவில் அவரால் என்ன செய்யக் கூடும்? இங்கே அவருடைய வார்த்தை இருக்கிறது. இங்கே அவருடைய ஜனங்கள் இருக்கிறார்கள். அவருடைய பிரசன்னம், இங்கே நான் அதை உணர் கிறேன். இப்பொழுது, செய்வதற்கென்று ஒரே ஒரு காரியம் மட்டுமே உண்டு. அவரால் செய்யமுடிகிற ஒரே ஒரு காரியம் என்னவென்றால் உங்களை அதை விசுவாசிக்க செய்வது மாத்திரமே. அது சரிதானே? தன்னுடைய பாகத்தை அவர் செய்து முடித்துவிட்டார். இப்பொழுதோ, விசுவாசிப்பதற்கென்று இது உங்களு டைய நேரமாயிருக்கிறது. 68. இப்பொழுது, கொஞ்ச ஜனங்களுக்கு ஜெபிப்பதற் காக ஒரு ஜெப வரிசையை அழைக்கப் போகிறோம். கண்டிப்பாக அதை செய்ய வேண்டுமென்றில்லை, ஆனால், வழக்கமாக எங்களுடைய கூட்டங்களில் நாங்கள் அவ்வாறு செய்கிறோம். இப்பொழுது, சுகமாக் குவது சம்பந்தமாக நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. பூமியில் உள்ள எந்த மனிதனும் அதைப் பற்றியதான காரியங்களை செய்வதற்கு அங்கு ஒன்றுமில்லை, ஒரு காரியம் கூட கிடையாது. ஒரு மருத்துவர் வேண்டுமானால் முறிந்த எலும்பை அதன் ஸ்தானத்தில் பொருத்தக்கூடும்; அவர் ஒரு சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை செய்து அதை அகற்ற முடியும். ஆனால் அவரால் அதை சுகப்படுத்த முடியாது. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் அந்தச் சதை வளர்ச்சியை அகற்றுவதுதான். அதை இப்போது யார் சுகப்படுத்தப் போகிறார்கள்? பாருங்கள்? உங்கள் கரங்களை அவரால் பொருத்தக்கூடும். ஆனால் சுகமாக்க போவது யார்? எல்லாம் தேவனே. சங்கீதம் 103:3 சொல்கிறது: "உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே." எல்லா சுகமளித்தலும் தேவனிடமிருந்தே வருகிறது. தேவனைத் தவிர வேறு எந்த வழியிலும் சுகமளித்தல் வருவது கிடையாது. எந்த ஒரு மனித னாலும் சுகமாக்க முடியாது, அதை ஒருபோதும் செய்ததுமில்லை, ஒருபோதும் செய்யப்போவதும் இல்லை. தேவனிடத்தில் இருந்து மட்டுமே சுகமாக்குதல் வருகிறது. தேவனே ஜீவனாயிருக்கிறார். இப்போது உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்பு கிறேன். நீங்கள், "அது யாரிடத்தில் இருந்தும் ஒரு போதும் வந்ததில்லை. இயேசு ஒருவரையும் சுகப்படுத்த வில்லைதானே?" என்று கூறுகிறீர்கள். அதைத்தான் அவரும் கூறினார். "நானாகவே எதையும் செய்ய முடியாது" என்றார். "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறது எதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளை குமாரனும் அந்தப்படியே செய்கிறார்" என்றார். பரிசுத்த யோவான் 5:19, அது அந்த வேத வசனம் தானே? 69. "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறது எதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய் செய்யமாட்டார்" என்று இயேசு கூறினார். அப்படி யானால் இயேசு என்ன செய்தார்? தரிசனங்களைக் காணக்கூடிய வல்லமையை அவர் பெற்றிருந்தார். என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவரால் காண முடிந்தது. கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயினிடத்தில் அவளுடைய பிரச்சனை என்ன என்பதைக் கூறினார். பிலிப்பு எங்கிருந்து வந்தான் என்றும் அல்லது கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு நாத்தான்வேல் எங்கிருந்தான் என்பதை அவர் கூறினார். அவர் கூறினார்... தரிசனத்தின் வல்லமையைக் குறித்து அநேகக் காரியங்களை அவர்களுக்குக் கூறினார். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட ஸ்திரீ கூட்டத்தை விட்டு ஓடி ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தாள், இது உங்களுக்குத் தெரியும். இயேசு திரும்பி சுற்றும் முற்றும் பார்த்து, "என்னை தொட்டது யார்?" என்றார், அவர் அங்கே என்ன கூறினார்? "நான் பலவீனம் அடைந்ததை உணர்கிறேன்." அது சரியா? "வல்லமை (அப்படியென்றால் அது பெலன்) என்னிடத் திலிருந்து புறப்பட்டுச் சென்றது." "நல்லது, ஒவ்வொருவரும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே" என்று கூறினார்கள். 70. "ஆம், ஆனால் நான் பலவீனம் அடைந்தேன்" என்றார். ஆங்கில மொழி பெயர்ப்பில் அவ்வாறு அதைக் கூறுகிறேன். "நான் பலவீனம் அடைந்தேன். ஏதோ சம்பவித்துள்ளது. வல்லமை என்னிடத்திலிருந்து புறப் பட்டுச் சென்றது." அவர் சுற்றும் முற்றும் பார்த்தார், ஒருவேளை அவர் தரிசனம் கண்டிருக்கலாம். நான் அறியேன். அவர் கூறினது அதுதான், அதையே அவர் செய்தார். அவர் சுற்றும் முற்றும் கவனித்தார், அவர் அந்த ஸ்திரீயைக் குறித்ததான தரிசனத்தைக் கண்டார். அவர்... அவர்களுடைய கண்கள், அந்த ஸ்திரீயை ஊடுருவிப் பாய்ந்தபோது, அவள் அறிந்துகொண்டாள், தான்... (ஒலி நாடாவில் காலியிடம் –ஆசி.) அப்போஸ்தலர்களின் காலத்தினூடாக மட்டுமல்ல, அல்லது புனித ஃபிரான்ஸிஸ் காலத்தினூடாக மட்டு மல்ல, வெஸ்லியின் காலத்தினூடாக மட்டுமல்ல, "உலகத் தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடு கூட இருப் பேன். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிறார்." நண்பர்களே, நான் அதை விசுவாசிக் கிறேன். இப்போது, புதிதாக வந்திருப்பவர்களுக்காக, இதைக் கூறுகிறேன், நம்முடைய பரலோகப் பிதா, அவர் என்னவாக இருந்தார் என்பதைப்பற்றி இந்த இரவில் நான் பேச முயற்சித்துக் கொண்டிருந்தேன், அவருடைய மீட்பின் நாமங்களுக்குள் தன்னை மூடி மறைத்துக் கொண்டிருந்தார், அவர், கர்த்தராகிய இயேசு என்னும் தம்முடைய குமாரனுடைய ரூபத்தில் இன்றிரவில் வந்து, தான் என்ன செய்வேன் என்று கூறினாரோ அதைச் செய்து, இங்கே மேடைக்கு வந்து, ஒரு எளிமையான ஜனத்தை தனது கட்டுப்பாட்டில் பொறுப்பேற்று, என்னை மாத்திரம் அல்ல, கூட்டத்தில் இருக்கிற உங்களையும்கூட, "ஆம், என்னுடைய கர்த்தாவே, என் முழு இருதயத் தோடும் உம்மை நான் நேசிக்கிறேன்" என்று கூறும் இங்கு அமர்ந்துள்ள எளிமையான ஜனங்களையும் தனக் கென்று பொறுப்பேற்றுக் கொள்வாரானால்... 71. அப்பொழுது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலிருந்த அதே பரிசுத்த ஆவியானவர், அவர் பெற்றிருந்த அதே ஞானஸ்நானத்தை அல்லது அதே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நாமும் பெற்றுக் கொள்வோம் என்று அவர் கூறினாரே, அதே பரிசுத்த ஆவியானவர் அவருடைய எளிமையான, தகுதியில்லாத ஊழியக்காரர்கள் மீது வந்து, காரியங்களை மாற்றி... "இன்னின்னதைப் பெற்றிருக்கிற உங்களிடம் கூறுகிறேன், நீங்கள் இவ்விதமாய்... நீங்கள்–நீங்கள் இன்னின்னதைச் செய்தீர்கள், நீங்கள் இதைச் செய்தீர்கள், மேலும்– மேலும் – மேலும், நீங்கள் – நீங்கள் இதைச் சரிபடுத்தி கொண்டால், நீங்கள் அதைச் செய்தால் மற்றும் அதுபோன்று செய்தால், அல்லது, ஜனங்கள் மேடைக்கு வரும்போது அவர்களிடம், "இப்பொழுது, அதை ஏற்றுக் கொள்வீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் அவ்வாறு விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசித்தால் உங்கள் கரங்களை உயர்த்தி, "நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறேன் என்று கூறுங்கள்" என்று கூறுவேன்." உங்களுக்கு நன்றி, உங்களுக்கு நன்றி, இப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக". பில்லி, எந்த ஜெப அட்டைகளைக் கொடுத்துள்ளாய்? Bþ வரிசையா? நாம் பார்ப்போம், நாம் அழைப்போம்... இரண்டு இரவுகளுக்கு முன் நாம் ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருந்தபோது, அவர்களில் முதல் எண்ணிலிருந்து அழைத்தோம் என்று விசுவாசிக்கிறேன், நாம் அவ்வாறு தானே செய்தோம்? எல்லாம் சரி. இப்பொழுது தொடர்வோம்... அதன் கடைசி அட்டை எண் எது? அந்த ஜெப அட்டையிலிருந்து நாம் தொடங்குவோம், வழக்கமாக நாம் என்ன செய்வோம்? இருபது வரையிலுமா? பதினைந்து அட்டைகள் முதல் இருபது அட்டைகள் வரைதானே? நல்லது, அவர்களில் (கடைசி) பதினைந்து பேரை அழைப்போம். 85, 90, 95 என்று அழைக்கலாம்... அட்டை எண் 85-ல் இருந்து அழைக்கலாம். அவர் அங்கே இருக்கிறாரா? என்று பார்ப்போம்... 72. யார் B-85 வைத்துள்ளீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? B-85, உங்கள் கரத்தை உயர்த்து வீர்களா? 85, யார் B-86 என்ற ஜெப அட்டையை வைத்துள்ளீர்கள்? நல்லது. 87? நல்லது. 88? B-88? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? யார் B-88 ஐ வைத்துள்ளீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? உங்களுக்கு நன்றி. இங்கு இருக்கிற சீமாட்டியா? 88, 89? யார் B-89 ஜெப அட்டை வைத்துள்ளீர்கள்? நீங்கள் எங்கேயிருந்தாலும் சரி, உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? 89? உங்களுக்கு நன்றி. 90? B ஜெப அட்டை... ஜெப அட்டை 90, நீங்கள் வைத்துள்ளீர்களா? இந்தக் கட்டிடத்தினுள் இருக்கிறீர்களா? 90? எல்லாம் சரி, அதன் பிறகு 91? யார் 91 ஜெப அட்டை வைத்துள்ளது? சரி. 92, 93, வரிசையாக 100 வரை. சற்று மேலே வந்து உங்களுடைய இடங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். அதுபோல எத்தனை பேர் என்று பார்ப்போம், பின்னர் நாம் வரிசையை... அதை நாம் சரியான நேரத்திற்குள் பெற்றுக் கொண்டோமானால், அந்த நேரத்தில் நான் களைப்படையாமல் இருந்தால், சகோதரர்கள் சற்று அதிகமான நேரம் என்னை இருக்கச் செய்வார்கள். அது நம்முடைய இயேசு என்ன செய்கிறார் என்பதைப் பொருத்தது. இப்பொழுது, ஜெப அட்டையை பெற்றிராமல் அதே சமயம் சுகமாக்கப்பட வேண்டியவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். தேவன் உங்களோடு இருப்பாராக, உதவி செய்வாராக, உங்களை ஆசீர்வதிப்பாராக, அதுதான் என்னுடைய ஜெபமாக இருக்கிறது. இப்போது, நீங்கள் ஜெப அட்டையைப் பெறவில்லை என்றால்... இப்போது, அவர்கள் ஜெபவரிசையில் நிற்கும் போது, நான் இந்த பெட்டியில் உள்ளவைகளுக்காக ஜெபிக்கப் போகிறேன். நன்றி சகோதரன் பில்லி. சற்று நேரத்துக்கு நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 73. அன்பும் இரக்கமும் நிறைந்த பிதாவே, இந்தப் பெட்டியில் உள்ள இந்த கைக்குட்டைத் துணிகள், தேவைப்படுபவர்களுக்கும், வியாதி உள்ளவர்களுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் அனுப்பப்படுகிறது. தாய் மார்களும், தகப்பன்மார்களும் இவைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், சகோதரர்களுக்காகவும், சகோதரி களுக்காகவும், வியாதியில் இருக்கிற சிறு குழந்தை களுக்காகவும், தேவை உள்ளவர்களுக்காகவும், குருடர் கள், துன்பப்படுகிறவர்கள், ஊனமுற்றோர்க்கும் இவைகள் அனுப்பப்படுகின்றன. ஓ, இந்தக் கைக்குட்டைகள் எல்லாம் தங்களிடம் திரும்பி வருவதற்காக அவர்கள் எவ்வளவாய் ஆவலோடு இருக்கின்றனர். பிதாவே, நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். உம் மூலமாக அவர்களுடைய கண்களில் நாங்கள் கிருபை பெற்றோம். அப்படியாக நாங்கள் விண்ணப்பம் செய்யும்போது, அவர்கள் அதை விசுவாசித்து, உம்முடைய உதவியை அவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். பிதாவே, நாங்கள் அதற்குத் தகுதியுள்ளவர்கள் அல்ல. நான் தகுதியுள்ளவன் அல்ல. தேவனே, நான் ஜெபிக்கிறேன், என்னுடைய தகுதியில்லாத் தன்மையை நீர் பார்ப்பதில்லை, ஆனால் நீரோ அந்த எளிய ஜனங்களை, வியாதியுள்ள ஜனங்களைப் பார்க்கிறீர், நாங்களோ உம்முடைய குமாரன் இயேசுவை அவர்களிடம் கொண்டு செல்ல பெருமுயற்சி செய்கிறோம். இந்த கைக்குட்டைகள் வியாதியஸ்தர்களின் சரீரத்தின் மேல் வைக்கப்படும்போது, பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், வியாதிகள் அவர்களை விட்டு அகன்று போகட்டும், கர்த்தாவே அதை அருளிச்செய்யும். இக்காரியங்களிருந்து விடுதலை பெற்று, முற்றிலுமாக சுகம் அடைவார்களாக. இப்போது, இந்தக் கடிதங்களை அவர்கள் எழுதும்போது, அந்த ஜனங்களை நீர் கவனித்துள்ளீர். இப்போது அவைகளைப் பார்க்கிறீர். அவைகள் எல்லாம் திரும்ப அவர்களுடைய கைகளில் கிடைக்கும் போதும் அவர்களைக் காண்பீர். இப்போது, இங்கே இருக்கிற தேவ தூதனுடைய பிரசன்னமானது, ஒவ்வொருவரோடும் கூட தரித்திருக்கட்டும். அவர்கள் அவைகளை வியாதியுள்ள ஜனங்கள் மேல் வைக்கும் போது, அவர்கள் உடனடியாக சுகம் அடைவார்களாக. இவைகளை தேவனுடைய மகிமைக்கென்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 74. நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், உங்களால் கூடுமானால், உங்களால் முடிந்த அளவுக்கு பயபக்தியாய் இருங்கள். இவைகள் எல்லாம் என்ன என்று நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நான் நம்பிக்கை உள்ளவனாக இருக்கிறேன். அதைக் குறித்து சற்றே சிந்திப்பீர்களா? நான் ஒரு சாதாரண மனிதனாக இங்கே நின்று கொண்டிருக்கிறேன். தேவன் அதை அறிவார். இங்கே வரிசையில் பதினைந்து அல்லது இருபது பேர் ஜெப வரிசையில் நிற்கிறார்கள், அங்கே அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பதினைந்து பேர்கள் என நினைக்கிறேன், ஒருவேளை ஓரிரண்டு பேர் குறைவாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை கொஞ்சம் அதிகமாகக்கூட இருக்கலாம். இங்கே குறைந்தபட்சம் ஆயிரத்து அறுநூறு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள், அவ்வாறு நான் அனுமானிக் கிறேன், கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையில் இருக்கலாம், இங்கே எனக்கு முன்னால் அமர்ந்திருக் கிறார்கள். அங்கே தேவை உள்ளவர்களாய், குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இன்றிரவில் நான் இங்கே இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசியிருக்கிறேன், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். 75. இப்போது இங்கு நின்று கொண்டு கற்பனை செய்து பார்க்கிறேன். இந்த அளவிலான ஒரு ஜனக் கூட்டத்தில், நீங்கள் சுற்றிலும் விமர்சனம் செய்பவர் களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிறிது சந்தேகம் கொள்கின்றதான ஜனங்களை பெற்றிருக்கிற வேண்டிய நிலைமையிலிருக்கிறீர்கள். நீங்கள் அதை உணர்கிறீர்கள். உங்களால் அதை உணர முடியும். பரிசுத்த ஆவியானவர் சென்று அவைகளைச் சரிசெய்யும் போது, உங்களால் அதை உணர முடியும். பாருங்கள்? அது நிச்சயமாக தாழ்மையின் பாதை (low ebb), அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். நாம் இங்கு நடத்தின ஒவ்வொரு கூட்டத்திலும், விசுவாசமே முதன்மை ஸ்தானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. பாருங்கள்? அது சரியே. இப்போது, இங்கே குறை கூறுபவர் உட்கார்ந்திருக் கிறார் என்று நான் கூற மாட்டேன். அது ஒரு வேளை, "நல்லது, இப்போது நான்-நான் அதிசயிக்கிறேன்" என்று ஒருவித சந்தேக மனப்பான்மையோடு சொல்லும் யாரோ ஒருவராக இருக்கலாம். பாருங்கள்? அப்படிப்பட்ட அந்த மனிதன், எத்தகைய செயல்பாடு நடந்துள்ளது என்றும், அது எத்தகைய விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை மட்டும் அறிந்து கொள்வாரானால், பின்னர் அந்த மனிதன், "இல்லை, நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்" என்று கூறுவார். 76. இப்பொழுது, இன்று இரவு, இந்த மேடையின் மேல் நம்முடைய கர்த்தராகிய இயேசு, நான் நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் அவர் நிற்பாரானால், அது எப்படியாயிருக்கும்? இப்பொழுது, அவரால் என்ன செய்யக் கூடும்? இப்போது, நாம்–நாம் அதை நம்மு டைய சொந்த எண்ணங்களைக் கொண்டு நோக்காமல், அதை நாம் பரிசுத்த வேதாகமத்தின் முறைமையின்படி பார்ப்போம். இப்போது, அவர் முதலாவது "என் பிதா எனக்கு காட்டினால் ஒழிய, என்னால் ஒன்றும் செய்யமுடியாது" என்று கூறினார். அவர் என்ன செய்தார்... அவர் என்ன வாக இருந்தார்? அவர் யேகோவாவின் அருளப்பட்ட பலியாக இருந்தார். அது சரியா? அவர் யேகோவா -யீரேவாக இருந்தார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? அவர் தேவனுடைய அருளப்பட்ட பலியாக இருந்தார். பின்பு அவர் மரித்தபோது, அவர் எதற்காக மரித்தார்... நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார் (அது சரியா?), நம்முடைய அக்கிரமங் களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் என்ன நடந்தது? சுகமடைவோம் என்றா எழுதியிருக்கிறது? நாம் அடைந்துவிட்டோம்; ஏற்கனவே, நாம் சுகமாக்கப்பட்டு விட்டோம். நாம் இரட்சிக்கப்படுவோமா? நாம் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டுவிட்டோம். பாருங்கள்? நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்போ அல்லது பத்து வருடத்திற்கு முன்போ அல்லது இருபது வருடத்திற்கு முன்போ இரட்சிக்கப்படவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள். இரண்டு வருடத்திற்கு முன்னரோ அல்லது மூன்று வருடத்திற்கு முன்னரோ நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்கள். உங்களுடைய சுகமாகுதல் என்பதும் ஏற்கனவே நடந்துவிட்டது. நீங்கள் அதை வெறுமனே ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும். அதனால்தான் அவர், "உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்" என்று கூறினார். 77. இப்போது, இங்கே ஒரு சீமாட்டி நின்று கொண்டிருக்கிறார். இவர்தான் அந்த நோயாளியா? இங்கு இருக்கிற இந்த சீமாட்டியை, என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் பார்த்ததில்லை. ஒரு கிறிஸ்தவர் என்கிற முறையில் இந்த ஸ்திரீயை சந்திக்கதக்கதாக உங்களை ஆயத்தப்படுத்துங்கள். ஒரு கிறிஸ்தவர் என்ற முறையில் இந்த அரங்கத்தில் இருக்கிறவர்களை சந்திக்கதக்கதாக உங்களை ஆயத்தப்படுத்துங்கள். அப்பொழுது, தேவ தூதன் இங்கே அருகாமையில் நின்று கொண்டிருக்கிறார் என்கிற பாதுகாப்பை அதிகம் உணர்வீர்கள். அது சரியே. இப்போது, குறை கூறுபவர்கள் இந்த வரிசையில் நின்று கொண்டிருந்தால் என்னவாக இருக்கும்? ஒருவேளை அதுதான் இடுக்கண் (oppression) உண்டாகும் இடமாக இருக்கலாம். இடுக்கண்களை நான் உணர்கிறேன். அவ்வாறாக இருந்தால் என்னவாகும்? அப்பொழுது ஒருவேளை அந்த... எந்த வியாதி இருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்கிறார்களோ, அதே வியாதியினால் அவர்கள் சரியாக இங்கே மேடையின் மீதே தாக்கப்படுவார்கள். பாருங்கள்? அங்கே குறை கூறுபவர்கள் உட்கார்ந்து கொண்டு, இங்கே ஒரு வியாதி துரத்தப்படும் போது, அது அரங்கத்தில் உள்ளவர்கள் இடத்திற்கு சென்றால் எப்படியாயிருக்கும்? அப்போது குறை கூறுபவன் அந்த வியாதியைப் பெற்றுக் கொள் கிறான். பாருங்கள்? அது உண்மை என்று எத்தனை பேர் அறிவீர்கள், என்னுடைய கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தடவைகள் அவ்வாறு நடந்துள்ளதை எத்தனைபேர் கண்டுள்ளீர்கள்? பாருங்கள்? நிச்சயமாக. 78. அவர்களில் அநேகர் பைத்தியக்கார மருத்துவ மனைகளில், அல்லற்படுகிறவர்களாயும், அதைப் போன்ற வர்களாயும் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த இரவில் அங்கே என்னை மனோவசியப்படுத்த வந்த அந்தப் பையனைக் குறித்தென்ன? அவன் இன்னும் சரீரம் செயலற்றவனாக இருக்கிறான். அது கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்தது, அவன் இன்னமும் கைகால் செயலற்றுப் போனவனாகக் கிடக்கிறான். மனோவசியம் செய்கிறவன், இராணுவ வீரர்கள் தங்கும் இடங்களைப் பார்த்து அங்கு சுற்றித்திரிந்து ஜனங்களை மனோவசியப்படுத்தி, அவர்களை நாய்கள் குரைப்பது போல குரைக்கவும், மற்றும் அதுபோன்ற காரியங்களை செய்யும்படியும் செய்வான், ஆனால் தேவனோடு விளையாட முடியாது. முடியாது ஐயா. பயபக்தியாயும், ஜெபத்தோடும் இருங்கள். சற்றே... இப்போது, கர்த்தர் ஆசீர்வதிப்பாராக, சரி. இப்போது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவாகிய தேவனுடைய மகிமைக்காகவும், அவருடைய குமாரனாகிய இயேசுவைப் பிரதிநிதித்து வப்படுத்தவும், தேவனுடைய மகிமைக்காக இப்போது இங்கே உள்ள ஒவ்வொரு ஆவியையும் என்னுடைய ஆளுகைக்குள் எடுத்துக் கொள்கிறேன். 79. சீமாட்டியே, எப்படி இருக்கிறாய்? இப்போது, உங்களுக்கு விருப்பமானால், சற்றே மேலே வாருங்கள் சீமாட்டியே. இன்று இரவில் நாம் முதன் முதலாகப் பேசுகிறோம், அவ்வாறு முதல் நபரிடத்தில் பேசும்போது, அது மிகவும் கடினமான ஒன்றாய் இருக்கிறது. அது... ஆகவே அது... அந்த வகையில், அது என்னை அபிஷேகிக்க தொடங்குவதற்கு முன்னர், ஏன், சில நேரங்களில் அது என்னை அதிக நேரம் எடுத்துக் கொள்ள செய்கிறது. நான் ஒரு சாதாரண மனிதன். நீங்கள் -நீங்கள் அதை அறிவீர்கள். நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் அவரோ கர்த்தராயிருக்கிறார். இப்போது, அவர் இங்கு நின்று கொண்டிருப் பாரானால், உங்களுக்கு ஏதாவது தேவைப்படுமானால் அல்லது எதிலாவது வாஞ்சையாய் இருப்பீர்களே யானால்... இப்போது, ஏதாவது பலி சம்பந்தப்பட்டதாய் இருக்குமானால்... பலியில் என்ன சம்பந்தப்பட்டிருக் கிறது? ஏதாவது உங்களுக்குத் தேவையாய் இருக்கு மானால். பாருங்கள்? ஆதாமில் நாம் இழந்துபோன ஒவ்வொன்றையும் அவர் நிறைவேற்றி விட்டார், கல்வாரியில் அவர் பட்ட கொடூரமான வேதனையில் அவர் அதை நிறைவேற்றினார். அங்கு தான் அவர் முழு விலைக்கிரயத்தையும் செலுத்தினார். இப்போதும் எல்லாமும்... அவர், "நீங்கள் வாஞ்சிப்பது எதுவாக இருந்தாலும், நீங்கள் ஜெபிக்கும் போது அதைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள்" என்று கூறினார். 80. இப்போது, அவர் இங்கு இருந்துகொண்டு, உங்களுடன் பேசிக் கொண்டிருப்பாரானால், இன்றிரவில் அவரால் செய்யமுடிந்த ஒன்றே ஒன்று என்னவென்றால், நல்லது ஒருவேளை நீங்கள், "நான் தேவை உள்ளவனாயிருக்கிறேன், நான் என்னுடைய வீட்டை இழக்கும் நிலையில் இருக்கிறேன், என்னுடைய வீட்டிற் கென்று, சிறிதளவு பணம் பெற்றுக் கொள்ளவேண்டும்" என்று சொல்லக்கூடும். நல்லது, அவர் உங்களிடத்தில், "நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்பார். "ஆம்" பின்பு அவர், "நீங்கள் விசுவாசிக்க கூடுமானால், அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்" என்று கூறுவார். மேலும், நீங்கள், "நல்லது, நான் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டுள்ளேன், என்னுடைய பகைவர்கள் என்னை மேற்கொள்கிறார்கள்" என்றோ, அல்லது அது போன்ற காரியத்தையோ கூறுவீர்களேயானால். அவர், "அவர்களை மன்னியுங்கள், அவர்கள் உங்களிடத்தில் வருவார்கள்" என்று கூறுவார். பாருங்கள்? ஆனால், அது ஒரு வியாதியாக இருக்கும் பட்சத்தில், அல்லது உங்களுடைய ஜீவியத்தில் ஒரு வேளை தவறான காரியங்கள் ஏதேனும் இருக்குமானால், சில ஒழுக்கக் கேடான செயல்கள் அல்லது ஏதாவது இருக்குமானால், அதை அவர் அறிவார். ஆனால் அதற்காக... அது சுகமளிக்கப்படுவதற்காக உண்டா யிருக்குமென்றால், உங்களுக்கு உள்ள தவறு என்ன என்பதை அவர் கூறுவார், ஆனால் அவர் உங்களைச் சுகமாக்க முடியாது, ஏனென்றால், அவர் ஏற்கனவே அதைச் செய்து முடித்துவிட்டார். நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா? அது சரி. நல்லது, அப்படியானால், அவர் - இங்கு அவர் இருப்பார் என்றால், அவர் இங்கு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன், அதே வகையில் நிச்சயமாக அவர் உங்களுக்குப் பதில் அளிப்பார், அவர் அவ்வாறு செய்ய மாட்டாரா? கிறிஸ்தவர்களே, அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர் –ஆசி.) 81. நான், அவசரப்படமாட்டேன் (பாருங்கள்?) பயபக்தியுடன் இருங்கள். இந்த ஸ்திரீ உண்மையாகவே வியாதிப்பட்டுள்ளார், ஏனென்றால் அவருக்கும் எனக்கும் மத்தியில் இருளான நிழல் தொங்கிக் கொண்டிருக்கிறது. (ஒலி நாடாவில் காலியிடம் –ஆசி.) நீங்கள் ஒரு அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக் கிறீர்கள், அவ்வாறு இல்லையா? அது கட்டிகளை அகற்றுவதற்காக, அது உங்கள் கையின் கீழே உள்ளது, மிகவும் ஆபத்தான நிலை. தேவன் மட்டுமே உங்களுக்கு உதவி செய்யமுடியும். அது தான் சத்தியம், அது அப்படித்தானே? அவர் உங்களுக்கு உதவி செய் வதற்காக இப்போது இங்கிருக்கிறார் என்று விசுவாசிக் கிறீர்களா? நாம் தலைகளைத் தாழ்த்துவோம். பிதாவாகிய தேவனே, கர்த்தராகிய இயேசு என்னும் உம்முடைய குமாரனுடைய நாமத்தில், கத்தி வைக்கப்பட வேண்டிய அந்த இடத்தில் என் கையை வைக்கிறேன். இது அந்த சிறிய இடத்தைக் கண்டுபிடிக்க தவறும் நிலையில், அதன் முடிவானது, சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம் போல மறுபடியும் வருவான். ஆனால், அது சரியாக எங்கே இருக்கிறது என்பதை நீர் அறிந் திருக்கிறீர். சரியாக இங்கே இந்த மேடையின் மீது எல்லாம் வெளியரங்கமாக்கப் பட்டுள்ளது. சர்வ வல்லவரே, கிருபை நிறைந்த தேவனே, இந்த ஸ்திரீயின் ஜீவனைக் காப்பாற்றும். பிதாவே, தயவு கூர்ந்து அதை செய்வீரா? தன்னைக் குறித்து அறிந்துள்ள ஏதோ ஒரு பிரசன்னதிற்குள்ளாக, அவள் நின்று கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். தேவனே, அது நீரே. உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்பீராக. "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது" என்று பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் புருஷர், ஸ்திரீகளைக் கவனியும், இந்த மணி வேளையில் இந்த ஸ்திரீயின் சுகத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக் கிறார்கள். ஓ, தேவனே, தயவு கூர்ந்து இயேசுவின் நாமத்தில் இந்த ஸ்திரீயைக் காப்பாற்றும், அவள் ஜீவிப்பாளாக. அதற்காக இயேசுவின் நாமத்தில் உம்மைத் துதிக்கிறோம். ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்கள் பாதையில் சந்தோஷமாய் செல்லுங்கள். 82. சீமாட்டியே எப்படி இருக்கிறீர்கள்? இப்போது, இது சற்று வித்தியாசமாயுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு, முதலாவதாக வந்த அந்த ஸ்திரீயானவள், தான் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட போது, அது தன் மீது ஏற்படுத்தின விளைவைக் குறித்து அவளால் சொல்லக் கூடும். நீங்கள் அதை இப்போது உணரலாம். (பாருங்கள்?), அது உங்களுடைய சகோதரனுக்காக இல்லை, நான் ஒரு சாதாரண மனிதன், என்னுடைய ஜீவியத்தில் உங்களை ஒருபோதும் பார்த்ததில்லை, ஒருவேளை நீங்களும் என்னை ஒரு போதும் பார்த்திருக்காமல் இருக்கலாம். நாம் ஒருவருக் கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். நான் சொல்வது சரியா? தேவன் எனக்கு உதவிச் செய்வாரானால், நீ இங்கு எதற்காக இருக்கிறாய் என்று அவர் சொல்வா ரானால், நீங்கள் அவதிப்படுகிறீர்கள் அல்லது அது எதுவாக இருந்தாலும்... அவர் எனக்கு அதை வெளிப் படுத்துவாரானால், அவர் உங்களை சுகமாக்குகிறவர் என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? தெய்வீக வரத்தை வைத்துக் கொண்டு நான் செய்ய முடிந்தது அது ஒன்றே. மீதமுள்ள அங்கே வெளியில் இருக்கிறவர்கள், "நான் ஏற்றுக் கொள்வேன்..." என்று கூறுங்கள். இந்த ஸ்திரீயைக் குறித்தென்ன, இதுதான் நாங்கள் முதன் முதலில் சந்திக்கும் கூட்டம், சீமாட்டியே அது சரியா? அது உண்மை, அப்படித்தானே? அது சத்தியம், நாங்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்தது இல்லை. ஒருவருக் கொருவர் தொடர்பே கிடையாது, ஒன்றுமே கிடையாது. நாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலுமாக அந்நியர்களா யிருக்கிறோம். இங்கே தான் நாங்கள் சந்திக்கிறோம். 83. இப்போது, நண்பர்களே கவனிக்கமாட்டீர்களா- இது என்ன என்று புரிந்து கொண்டீர்களா - நான் என்ன பொருள் கொள்கிறேன்? இப்போது, இங்கே ஏதோ ஒன்று சம்பவிக்கவேண்டும், ஏதோ ஒரு வழியில் இந்த ஸ்தீரியைக் குறித்து அறியவேண்டும்.. ஏதாவது சொல்லப் படுமானால், நான் ஒன்றும் செய்யமுடியாது; நான் ஒரு சாதாரண மனிதன். அந்த ஸ்திரீ மிகவும் ஆரோக்கிய முள்ளவர் போல இருக்கிறார். நான் அறிந்துள்ளபடி, அது ஒருவேளை அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி யுள்ளது அல்ல. ஆனால் ஒருவேளை அதுவாகக்கூட இருக்கலாம்; நான் அறியேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து அவளிடத்தில் கூறுவாரானால்... அவளுடைய சுகமளித்தலைப் பொருத்தவரை, அது வியாதியாய் இருந்தால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அதைச் செய்வதற்கு நான் எந்த வல்லமை யையும் பெற்றிருக்கவில்லை. அதைப் பெற்றிருப்பவர் ஒருவரும் இல்லை. அது தேவனிடத்திலிருந்து வரவேண்டியதாயிருக்கிறது. இப்போது, இது அவருடைய வார்த்தை என்பதை விசுவாசிக்கிறீர்கள். விசுவாசிக்கிறீர்களா? அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக் கிறீர்கள், நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கவில்லையா? "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்" என்று அவர் கூறினார் என்று நீங்கள் விசுவாசிக் கின்றீர்களா? அவர், "பிதா காண்பிக்கும் வரை நான் எதையும் செய்வதில்லை" என்றார். இன்றிரவில், அவர் இங்கு நின்று கொண்டிருப்பாரானால், இது வியாதியாய் இருக்கும் பட்சத்தில், அவளைச் சுகப்படுத்துவது என்பது அவரால் கூடாது, அவர் செய்து முடித்த முக்கியமான காரியம் என்னவெனில் அவர் ஏற்கனவே சுகப்படுத்தி விட்டார். அவர் செய்யக் கூடியது எல்லாம், ஏதோ ஒரு வழியில் அவளை விசுவாசிக்க செய்வது மட்டுமே. அது சரியா? அது சத்தியம் என்பதை எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள்? அவர் அவளுக்கு என்ன செய்து முடித்தாரோ, அதை ஏதாவதொரு வழியில் அவளை ஏற்றுக்கொள்ளச் செய்வது மட்டுமே. 84. அப்படியானால் நல்லது, இது இந்த ஸ்திரீக்காக இருக்கும் என்றால், அதேபோல வெளியில் அமர்ந் திருக்கிற மற்றவர்களுக்கும் அதே காரியம் தானே? நீங்கள் செய்யவேண்டும் என்று அவர் விரும்புவது, விசுவாசித்தல் மாத்திரமே. நீங்கள் செய்யவேண்டும் என்று நான் முயற்சி செய்கிற அனைத்தும், விசுவாசித்தல் மாத்திரமே. பிரசங்கியார் நீங்கள் விசுவாசிக்கவேண்டும் என்று விரும்புவார், ஏனென்றால் அவர் வார்த்தையைப் பிரசங்கிக்கிறார். நான், இந்த தெய்வீக வரத்தைக் கொண்டு, அது எனக்கு என்னுடைய பிறப்பிலேயே தேவனுடைய இராஜாதிபத்தியத்தின்படி கொடுக்கப் பட்டது. என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்துவந்துள்ளது, எல்லா நேரங்களிலும் பரிபூரண மாகவே இருந்து வந்துள்ளது. ஆகவே, அதை நீங்கள் பார்க்கிறீர்கள் இல்லையா, அது தேவன் உங்களை விசுவாசிக்கச் செய்வதற்காக செய்யும் முயற்சியாகும். என்னுடைய அன்பான பிள்ளைகளே, அதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று நம்புகிறேன். இப்போது, எனக்கும் அந்த ஸ்திரீக்கும் இடையிலே, அவள் சமையல் அறையிலோ அல்லது வேறு ஏதோ ஒரு அறையில் நடமாடிக் கொண்டிருப்பதாகக் காண்கிறேன். அது ஒரு மேஜையின் அருகில். அவளால் புசிக்க முடியவில்லை. அவளுக்கு வயிற்றுப் பிரச்சனை, அது சரியா. இப்போது, அது தவறு என்றால், அவர் என்ன சொன்னார்? இப்போது, அவர் இங்கே இருப்பாரானால், நாம் அந்நியர்களாயிருக்கையில் எல்லா வற்றையும் அறிவார். உங்களுடைய பிரச்சினை என்ன என்பதை அவர் அறிந்திருக்கிறார், நீங்கள் விசுவாசிப் பதற்கு அது போதுமானதாக இல்லையா? உங்கள் அனைவரையும் விசுவாசிக்கச் செய்வதற்கு அது போது மானதாக இல்லையா? ஆனால் இப்போது பாருங்கள், அந்த ஸ்திரீயுடன் நீண்ட நேரம் உரையாடு வேனேயானால், அநேகமாக, அவளுடைய வாலிப வயதில் நடந்த ஏதோ ஒன்றை அல்லது அது போன்ற ஒன்றை அவர் எனக்குக் கூறுவார். அது என்னவென்று பார்ப்போமா? நீங்கள் அனைவரும்... இல்லை... தேவனுடைய சித்தமாய் இருக்குமானால், அது என்னவென்று பார்ப் போம்... இப்போது, அவர் செய்வார் என்று நான் ஒன்றும் கூற முடியாது, ஆனால் அவரே அதை கூறுவா ரானால், அது உங்களை இரண்டு மடங்கு ஊக்கு விக்கும் இல்லையா? அப்படியானால் உங்கள் கைகளை உயர்த்தி, "அது எங்களை இரண்டு மடங்கு ஊக்கு விக்கும்" என்று கூறுங்கள். எல்லாம் சரி. இப்போது, தேவன் அதை அருளிச் செய்வாராக; அவர் நிச்சயம் செய்வார் என்று நான் கூற முடியாது. 85. சற்றே நான் உங்களிடம் நான் பேச விரும்புகிறேன். அது என்ன, உங்களுக்கு என்ன பிரச்சனை, அவர் என்ன செய்துமுடித்தார்... வயிற்றில் உண்டாயிருக்கும் பிரச்சனை, ஆம் ஐயா. வயிற்றில் உள்ள பிரச்சனை. நல்லது அப்படியானால், உங்கள் வயிற்றில் உள்ள வியாதியை அவர் சுகமாக்குவார் எனில், அவர் அதிசயமானவர், அவர் அவ்வாறு இல்லையா? அவர் – அன்பானவர் - அவரை நேசிக் கிறீர்களா? ஏன், அவர் அதிசயமானவர். அவர் அவ்வாறு, அன்பான கர்த்தராகிய இயேசு இல்லையா? இப்போது நாம் அவரை நோக்கி பார்க்கிறோம். அந்த ஸ்திரீ கிணற்றண்டையில் நின்று இயேசுவிடம் பேசும் போது, அவர் படிப்படியாக அதைக் கொண்டு சென்றார். (He carried the course) அவர், "தாகத்துக்கு தண்ணீர் தா" என்றார். அதற்கு அவள், "நல்லது, ஆனால் இது யூதர்களின் வழக்கம் இல்லையே..." என்றாள். உங்களுடைய வம்சாவளி என்ன? ஸ்பானிஷ்? மெக்ஸிகன்? (Spanish? Mexican? ) நான் அவ்வாறு எண்ணினேன். 86. மேலும் அவர்... அதுவும் இதைப் போன்றதான ஒரு உரையாடல் எனில், அப்படித்தானே, அதே வழிமுறைதானே? ஆம். சீமாட்டியே, உங்களுக்கு ஒரு சகோதரன் இருக்கிறார், அவர் வியாதிப்பட்டுள்ளார். அவர் ஒருவித சுயநினைவை இழக்கும் காரியத்தை (kind of spells) கொண்டுள்ளார் அல்லது ஒருவகையான... ஓ, அது மாரடைப்பு ஆகும். தன்னுடைய இருதயத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் கீழே விழுகிறார். நான் அவரைப் பார்க்கிறேன். அது வலிப்பு நோயா யிருக்குமோ என்று நான் எண்ணினேன், ஆனால் அது இருதய வலி; அவருடைய மாரடைப்பினால் அவர் கீழே விழுகிறார். நீங்கள் அவருடன் பேசிக் கொண்டி ருந்தீர்கள். அவரிடத்தில் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்-ஒரு முழுமையான கிறிஸ்தவன் ஆவதற்காக, அவரை ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. பிதாவாகிய தேவனே, இங்கே நின்று கொண்டு அழுது கொண்டிருக்கிற, இந்த எளிய ஸ்திரீக்காக, நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற கர்த்தராகிய இயேசு இங்கு இருக்கிறார் என்பதை அறிந்தவர்களாய், எங்களுடைய அடைக்கலமும், பெலனுமானவர், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர், தேவனே, இரக்கமுள்ளவராயிருந்து, அவளுடைய இருதயத்தின் வாஞ்சையை அருள் செய்வீராக. மற்றக் காரியங்கள் அவைகள் என்னவாக இருந்தாலும், கர்த்தாவே, சரியானதாக தென்படாத காரியங்களை, பிதாவே, அவைகளை சரிபடுத்தும். உம்முடைய தாழ்மை யுள்ள ஊழியக்காரனாக, மேலும் இப்போது என் மேல் இருக்கிற அபிஷேகத்துடன் கூடிய உம்முடைய ஆவியோடு, நான் இந்தக் கரங்களை அவள் மேல் வைக்கிறேன், இயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவனே, அவளுடைய இருதயத்தின் வாஞ்சையை அருளிச் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன். ஆமென். இப்போது சகோதரியே நீங்கள் எதை கேட்டீர்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக் கொள்வீர்களா? இப்போது அந்தக் கம்பியை தொட்டதாக உணர்கிறீர்களா? அதையே பின்பற்றி வீட்டிற்குச் செல்லுங்கள். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. 87. விசுவாசம் கொள்ளுங்கள். "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று இயேசு கூறினார். ஏதோ ஒன்று இவ்விதமாக மேலும் கீழும் அசைவதை பார்க்கிறேன், அது இங்கிருந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அது ஏதோ ஒன்று உயரமாக உள்ளது. யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை பிசைவது போன்று செய்து கொண்டிருக்கின்றார். ஓ, அவர் ஒரு - அவர் ஒரு மருத்துவராவார். அவர் ஒரு ஸ்திரீயைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவள்... அது இங்கே கீழே அமர்ந்துள்ள இந்த கருப்பின சீமாட்டி. அவள் குறைந்த இரத்த அழுத்த நோயினால் அவதியுறுகிறாள், அங்கே கீழே உட்கார்ந்திருக்கிறாள்... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்போது, சுகம் அடைந்தவளாய் வீட்டுக்குப் போகலாம். சற்று நேரத்திற்கு முன்பு நீ தொட்ட அந்தக் கம்பியைப் பிடித்துக்கொண்டு பின்பற்றி செல், அது உன்னை விடுதலைக்கு அழைத்துச் செல்லும். ஆமென். ஆமென். இப்போது நீ விசுவாசிக்கிறாயா? தேவனுடைய குமாரன், கர்த்தராகிய இயேசு, அவருடைய பிரசன்னம் இங்கு இருக்கிறது. அங்கேயிருக்கிற அந்த ஸ்திரீ... பாருங்கள், நீங்கள் பெறவேண்டிய ஒரே ஒரு காரியம், வெறுமனே விசுவாசியுங்கள், அவ்வளவே. பாருங்கள், நான் அல்ல, அந்த ஸ்திரீயை என் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்ததில்லை, அவளைப் பற்றி நான் ஒன்றையும் அறியேன். தேவன் அதை அறிவார். ஆனால் அவளுடைய விசுவாசம் ஆவியோடு தொடர்பு கொண்டது. பாருங்கள்? அது எதைச் செய்தது? பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீயின் விஷயத்தில் நடந்த அதே காரியம்: ஜனக் கூட்டத்தில் சுற்றிலும் திரும்பி, பின்னர், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். பாருங்கள்? அதுதான் இது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. விசுவாசம் கொள். 88. சீமாட்டியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உன்னில் இரக்கமாய் இருப்பாராக, அதுவே என்னுடைய உத்தமமான ஜெபமாகும். நான் நினைக்கிறபடி, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களா யிருக்கிறோம். நாம் அந்நியர்களாயிருக்கிறோம். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் அவர் தேவனுடைய அன்பான குமாரன் என்றும், பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ளபடியே கர்த்தராகிய இயேசுவை பிரதிநிதித்துவப்படுத்தினேன் என்றும் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் இருதயத்தில் அதை விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு உங்களுடைய பிரச்சனை என்ன என்பதை எனக்கு வெளிப்படுத்து வாரானால், பின்பு நீங்கள் அவரை பிரச்சனைகளை சுகமாக்குகிறவர் என்று ஏற்றுக் கொள்வீர்களா? அது அதுவாக இருந்தால்? அதை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். தாயாரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஒரு தாயாராக இருக்கிறீர்கள், நான் அவ்விதம் பார்க்கிறேன். இப்போது, உங்கள் ஜீவியம் மறைத்து வைக்கப்பட முடியாது. பாருங்கள்? நான் உங்கள் ஜீவியத்தோடும், உங்கள் ஆவியோடும் தொடர்பு கொள்கிறேன். நான் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இங்கு இருக்கிறீர்கள், உயர் இரத்த அழுத்த நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள். உயர் இரத்த அழுத்தம் உங்களுக்கு இருந்தது. ஏதோ ஒன்றை பெற்றுள்ளீர்கள், உங்கள் முட்டிகளை நோக்கி பார்த்து கொண்டிருக்கிற அவரை நான் காண்கிறேன். அது–அது மூட்டுக் கிண்ணத்திற்குக் கீழே உள்ள தண்ணீர் வெளியேறி விட்டது. அது சரியே, அது அப்படித்தானா? இப்போது, அவர் அதை வெளிப்படுத்துவாரானால், உங்களை அவரால் சுகமாக்க முடியும், அவரால் முடியாதா? நிச்சயமாக. ஆம் அம்மையாரே நிச்சயமாக அவரால் முடியும். இந்த ஏழை ஸ்திரீக்கு உதவி செய்யும்படி அவர் அன்புள்ளவர் இல்லையா? அவர் என்ன செய்ய முயற்சி செய்கிறார்? அவளை விசு வாசிக்கும்படிச் செய்கிறார் அவர்களின் விசுவாசத்தை விருத்தி செய்து கொடுப்பீராக. தயவு செய்து ஒவ்வொரு வரும் பயபக்தியுடன் இருங்கள். 89. ஒருவேளை நாம் சிறிது நேரம் பேசுவோம், தாயாரே. அது... ஒரு நிமிஷம் நான் உங்களுடன் பேசவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நல்லது. நான் உங்களுடன் பேசுகிறேன். நல்லது. அப்படியானால், இப்பொழுது சிலவற்றை உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களேயானால்... இப்போது, தேவன் என்னுடன் பேச முடியும் என்றும், நீங்கள் யார் என்றும்- என்ன–என்ன–என்ன விரும்புகிறீர்கள் என்றும், என்ன- உங்களுடைய மற்றைய விருப்பம் என்ன என்பதையும் எனக்குச் சொல்லுவார் என்று விசுவாசிக்கிறீர்கள். சரியாக இப்பொழுதே அது என்ன என்பதை நான் காண்கிறேன். ஆம் ஐயா. அது ஒரு குமாரனுக்காக அல்லது ஒரு பேரனுக்காக இருக்கிறது. அது ஒரு பேரன். அந்தப் பையன் மிகவும் நடுக்கமுற்றவனாக இருக்கிறான். அவன் ஒன்றும் செய்யக்கூடாதவனாக இருக்கிறான். அவன்- அவன் ஒரு-அவன் யுத்தத்தில் இருந்திருக்கிறான். அவன் கொரியா தேசத்தில் இருந்தான். அவன் காயமடைந்தான். அவன் வீட்டுக்கு வந்துவிட்டான். அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வருத்தமுற்றவனாக இருக்கிறான். அதுதான் உண்மை. வீட்டுக்குச் செல்லுங்கள்; அவனு டைய வேலையைப் பெற்றுக் கொள்வான், நீங்களும் சுகமடைந்தீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவில் விசுவாசம் கொள்ளுங்கள், விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள், நீங்கள் எதைக் கேட்பீர்களோ அதைப் பெற்றுக்கொள்வீர்கள். உங் களுக்கு விசுவாசம் இல்லையெனில், ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டீர்கள். விசுவாசத்தினாலே... விசுவாசம் இல்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம். 90. இப்போது, அந்த சீமாட்டி எனக்கு அந்நியரா யிருக்கிறார்கள். அது சரியா, சீமாட்டியே? நாம்... உங்க ளால் முடிந்த அளவு பயபக்தியாயிருங்கள். ஒரு சில நிமிடங்களில் முடித்துவிடுவோம். நீண்ட நேர கூட்டத்தின் மூலம் உங்களுக்கு சலிப்பு உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், ஜனக்கூட்டத்தாரிடத்தில் அது விசுவாசத்தைக் கட்டமைக்கிறதா என்று பார்க்கும்படி, இந்த ஜனங்கள் மீது என்னுடைய நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். அங்கும் இங்கும் சுற்றித் திரியாதீர்கள்; தயவு செய்து அவ்வாறு செய்யா தீர்கள். பாருங்கள்? ஆவி அமர்ந்திருக்கிறது, அது ஓரிடத்திலிருந்து, இந்த விதமாக எழும்புகிறது. அப்படியானால் இங்கே அது மாறிக் கொண்டே இருக்கிறது, அசைவாடுகிறது. அது உங்களை நிலை குலைய செய்கிறது. நீங்கள் பாருங்கள்? அது–அது– அது சடுதியில் என்னை பலவீனனாக்குகிறது. இப்போது, இப்பொழுது சற்று நேரம். 91. இப்போது, சகோதரியே, இது உங்களுக்கானது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். நம்முடைய வாழ்நாளில் ஒருபோதும் பார்த்ததே கிடையாது. நமக்கு ஒருவரைப்பற்றி மற்றொருவருக்கு தெரியாது. ஆனால் கர்த்தராகிய இயேசு உங்களுக்கு உதவி செய்வதற்காக இங்கு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வேறு யாரோ ஒருவருக்காக இங்கு இருக்கிறீர்கள். ஊ- ஹூம். அவர்கள் இங்கே குடியிருக்கவில்லை. அவர்கள் டூலூத் [Duluth] என்னுமிடத்திலிருந்து வந்துள்ளனர். பின்னர் நீங்கள் பெற்றிருப்பது... நீங்கள்-நீங்கள்... இந்த நபர் கீல்வாதம் (arthritis) என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளார், அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அது ஒரு இராணுவ வீரர் சம்பந்தப்பட்டது. அவர்– அவர் ஒரு இராணுவ வீரராக இருந்தார்; அது அவ்வாறு இருந்தது. மேலும் அவர் - அவர் ஒரு குதிரையில் சவாரி செய்யும்போது அவருக்கு அடிபட்டது, காயம் உண்டாயிற்று. நல்லது, உங்களுடைய கையில் இருக்கிற அந்தக் கைக்குட்டையை, பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது இருக்கும் போது, அதை எடுத்துச் சென்று அவர் மீது வையுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகலமும் கூடும் என்று விசுவாசிக்கிறீர்களா? சில நிமிடங்களுக்கு முன், அது ஒரு இராணுவ வீரரைப் பற்றியதாக இருந்தது. இங்கே ஒரு இராணுவ வீரர் இருக்கிறார், அது அப்படித்தான் என்று எண்ணினேன்... அது மீண்டும் அவ்விதமே இருக்கிறது, எனவே தான் நான் அது எங்கே இருந்தது என்று கவனித்தேன். ஆனால் இந்த ஒன்று - ஆனால் இது வித்தியாசமான ஒன்று. அங்கே அமர்ந்து கொண்டிருக்கிற சீமாட்டி என்னையே கவனித்துக் கொண்டிருக்கிறார், சரியாக அங்கே இருக்கிறார்கள், உங்களுக்கு கீல்வாத நோய், அவ்வாறு இல்லையா, சீமாட்டியே? அங்கே அமர்ந் துள்ள சீமாட்டி, அங்கே அந்த வரிசையின் கடைசியில் இருக்கிறார்கள், அவரது தொப்பியை சுற்றி சிறிய வட்ட வடிவமான ஏதோ ஒன்று இருக்கிறது. இயேசு உங்களை அதிலிருந்து சுகப்படுத்தவேண்டும் என்று விரும்பு கிறீர்களா? அவர் செய்வார் என்று, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் அந்த சீமாட்டியும் கீல்வாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் ஏதோ ஒன்றைக் குறித்து கவலை கொண்டுள்ளீர்கள், அல்லது உணவு எதுக்களிக்கும் பிரச்சனை (spits up in your mouth)உள்ள மற்றொருவரைக் குறித்து கவலைக் கொண்டுள்ளீர்கள். ஓ, அது பித்தம். நீங்கள்... அது சரியா? நிச்சயமாக, அது சரியே. உங்களுடைய கரங்களையோ அல்லது கைகளையோ ஒருவர் மேல் ஒருவர் போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் உங்கள் கரங்களை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். கர்த்தராகிய இயேசுவே, இவைகளை எல்லாம் நீர் பார்க்கிறீர். நீர் அவளை சுகப்படுத்துவீர், அவர்கள் இருவரையும் முற்றிலுமாக சுகமாக்குவீர் என்பதாக நான் ஜெபிக்கிறேன். பிதாவே, உம்முடைய மகிமைக்காக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 92. பின்னால் அமர்ந்திருக்கிற அந்த சீமாட்டி ஜெபித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு மேலே நின்று கொண்டிருக்கிற ஒளியை நான் பார்க்கிறேன், சீமாட்டியே நீங்கள் ஒரு சிறுநீர்ப்பை கோளாறினால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள். விசுவாசியுங்கள்... நேரே அமர்ந்திருக் கிறீர்கள், பழுப்பு நிறம் போன்ற (brown)உடையை அணிந்திருக்கிறீர்கள், நேராக இங்கே என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்தான். உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு இருக்கிறது, இருந்ததா? நான், "இருந்ததா?" என்றுதான் கேட்டேன். இப்பொழுதோ அது இல்லை. உங்களுக்கு பின்புறமாக சற்று தள்ளி, பழுப்பு நிற மேலாடை அணிந்துள்ள மற்றொரு சீமாட்டி, வயிற்றுப் பிரச்சினையால் அவதிப்படுகிறார். அவரும்கூட சுகமாக வேண்டும் என்று விரும்புகிறார். சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்தப் பண்பாளருக்கு பின்னால் அமர்ந்து கொண்டு என்னையே நோக்கிப் பார்த்து கொண்டிருக்கிற, இங்கே நேராக பின்னால் அமர்ந்துள்ள... கையை உயர்த்தியுள்ள நீங்கள் தான், பச்சை நிற ஸ்வெட்டர் அணிந்துள்ளீர்கள். இல்லை, இவ்விடத்தில், சரியாக இங்கே உள்ள சகோதரி. இல்லை. சீமாட்டியே எழுந்து நில்லுங்கள், இங்கே சரியாக... அங்கே அந்த வரிசையின் கடைசியில் அமர்ந்துள்ள ஒருவர். நீங்கள் தான். கையை உயர்த்தியுள்ள நீங்கள் தான். அங்கேதான் அந்த ஒளி நின்று கொண்டிருக்கிறது, சரியாக அங்கே தான். எழுந்து நின்று இப்பொழுதே அதை ஏற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் போதே இப்பொழுதே ஏற்றுக்கொள்ளுங்கள், அது சரியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வயிற்றில் புண் உண்டாயிருந்தது, இப்போது அது எல்லாமும் போய்விட்டது. உங்கள் விசுவாசம் உங்களை சுகப்படுத்தியது. 93. தேவனே அது இன்னும் நெருக்கமாக வரும்படி அருளிச்செய்யும். நீங்கள் மிகவும் பின்னால் இருந்த போது இவ்விதமாக காணப்பட்டது... நான் எங்கே சுட்டி காண்பிக்கிறேனோ சரியாக அங்கே அமர்ந்திருக்கிற சிறு பெண். அவளுக்கு மேலே அது இருந்தது என்று நான் நினைத்தேன். மீண்டும் அவளுக்கு மேலாக அது இருப்பதை நான் காண்கிறேன். ஆனால் நான் வேறு ஏதோ ஒன்றைப் பார்க்கிறேன்... இது ஒரு சீமாட்டி, கையை உயர்த்தினவராய் இருக்கிறாள். கையை உயர்த்தியுள்ள நீங்கள், எழுந்து நில்லுங்கள். பிரகாச முள்ள சிவப்பு தொப்பியை அணிந்துள்ள அந்த சீமாட்டியே. ஆம். உங்களுக்கு முன்னால் அமர்ந் திருக்கிற அந்த சிறிய சீமாட்டி என்று எண்ணினேன். ஆனால் அது நீங்கள் தான். ஓ, அது பித்தப்பை கோளாறு; அதுதான் காரியம், ஆம், அந்தப் பித்தப்பையை அவர் பரிசோதித்த இடத்தை இப்பொழுது நான் காண்கிறேன், அது இங்கே விலா எலும்புக்கு கீழாக, அங்கே தான் அதனுடைய வலி இருக்கிறது. அது சரியே. இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள்; என் சகோதரியே, இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? "சகலமும் கைகூடும் என்பதை உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றால்." விசுவாசம் கொள்ளுங்கள். சரியாக இங்கே கீழே அமர்ந்திருக்கிற, ஸ்திரீகளுக்கு உண்டாகும் கோளா றினால் அவதிப்படுகிற சிறிய சீமாட்டி. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள் சீமாட்டியே. நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் அதுவே. தேவன் உங்களுக்கு சுகத்தை அருளிச்செய்வார். அதுசரியே, நீங்கள் தான், ஆம், நீங்கள் எழுந்து நில்லுங்கள். இப்போது, நீங்கள் வீட்டிற்கு செல்லலாம், சுகமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 94. இங்கிருக்கிற இந்த சீமாட்டியும் கூட பெண்களுக்கே உரிய தொல்லைகளால் அவதிப் படுகிறாள். அந்த இடத்தில் தான் பிசாசுகள் இருந்து கொண்டு முன்னும் பின்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது (pulling back and forth). உங்களுக்கு ஸ்திரீகளுக்குள்ள கோளாறு இருக்கிறது, அதுசரியே. பாருங்கள், அந்த ஆவி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கிறது. சற்று முன்னர் யாரோ ஒருவர் அங்கே வயிற்று தொல்லையில் இருந்து சுகமாக்கப்பட்டவராக இருந்தார், ஏனென்றால் நீங்களும்கூட வயிற்றில் பிரச்சனை உடைய வர்களாய் இருக்கிறீர்கள். அது சரியே. உங்களுக்கு பெண்பால் சுரப்பியில் தொற்று உள்ளதாக அவர்கள் கூறினார்கள், மருத்துவர் உங்களிடம் தொற்று என்று கூறினார். அது சரியே. அந்தப் பிசாசுகள் ஒருவரிலிருந்து ஒருவருக்கு என்று இழுத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள், எவ்வாறு நீங்கள் அவைகளை அடையாளம் கண்டு கொள்ளப் போகிறீர்கள்? இப்போது, வேறு எதைக் காட்டிலும் மிக அதிகமாக உங்களுக்கு தேவைப்படுகிற காரியம் இங்கே உள்ளது; உங்களுக்கு, உங்களுடைய இரட்சகராக இயேசு தேவைப் படுகிறார், ஏனெனில் நீங்கள் ஒரு கிறிஸ்தவரல்ல, நீங்கள் ஒரு அவிசுவாசி. அவிசுவாசி அல்ல, ஆனால் நீங்கள்- நீங்கள் ஒரு கிறிஸ்தவரும் அல்ல. அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்த வர்களாய், இப்போது அவரை ஏற்றுக் கொள்வீர்களா? இப்போது அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? இங்கே வாருங்கள். தேவனே, அலைந்து திரிகிற இந்த சிறுபிள்ளை இருப்பிடம் வந்து சேர்ந்த நிலையில், அவளை சிலுவையின் அடியில் கொண்டு வருவதற்காக இங்கே வைக்கப்பட்டுள்ள இந்த தொல்லைகள், கர்த்தாவே, இப்பொழுது, அவளுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னியும். அவள் நலமாக ஆகும்படிக்கு, அவளுடைய சரீரத்தில் இருக்கிற வியாதிகள் அனைத்தையும் சுகப்படுத்துவீராக. பிதாவே, இந்த ஆசீர்வாதம் அவள் மேல் வரட்டும். இப்போது எல்லா பாவமும் மன்னிக்கப் பட்டது, எல்லா பழக்கமும் போய்விட்டது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவளை ஆசீர்வதிக் கையில், அவள் முற்றிலுமான சுகத்தை பெற்றுக்கொள் வாளாக. ஆமென். இப்போது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, போய், சந்தோஷப்பட்டு களிகூறு. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, தயவுகூர்ந்து பயபக்தியாய் இருங்கள்,. 95. சகோதரியே, ஒரு நிமிடம் இங்கே பாருங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? நல்லது, உங்களுடைய நரம்புத் தளர்ச்சி நோய் இப்போது உங்களைவிட்டு போய்விட்டது. நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். இப்போது நீங்கள் ஒரு அமைதலான தன்மையை உணர்கிறீர்கள், அவ்வாறு உணரவில்லையா? நீங்கள் சுகமாக்கப்பட்டுவிட்டீர்கள். இயேசு உங்களை முற்றிலுமாகச் சுகப்படுத்தினார். தாயாரே, அந்தப் பழைய சர்க்கரை வியாதி யிலிருந்து விடுபட்டு, நீங்கள் மறுபடியும் நல்ல சுகத்தை உணர்ந்தவர்களாய் ஜீவிக்க விரும்புகிறீர்களா? இயேசு உங்களை சுகப்படுத்த போகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் மேல் என் கரங்களை வைத்து, நான் கேட்டுக் கொள்ளும் போது, அதைப் பெற்றுக்கொள்வீர்களா? உண்மையாகவே இந்த தோல் அரிப்பு அழற்சியைப் பார்க்கிறீர்கள், அல்லது அது வெடிக்கிறது, ஆனால் அந்த - முக்கியமான காரியம், மறைவான பொருள், அது சர்க்கரை வியாதி யாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசுவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களுடைய சகோதரியின் வேண்டுதலை அருளிச் செய்வீராக. ஆமென். இப்போது விசுவாசம் கொள்ளுங்கள். சென்று, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், நீங்கள் கேட்டுக் கொண்டது எதுவோ அதைப் பெற்று கொள்வீர்கள். 96. வாருங்கள், சகோதரனே. நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு மேலாக தொங்கிக் கொண்டிருக்கிற சிலுவை, கர்த்தராகிய இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட அடையாளத்துடன் தொங்கிக் கொண்டிருக்கிற சிலுவை, மிகச் சரியாக பிரச்சினை இருக்கும் இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது உங்கள் வயிற்றுப் பகுதி. இப்போது, சென்று நீங்கள் விரும்புவது எதுவோ அதைப் புசியுங்கள். பெண்களுக்கே உரிய பிரச்சனை, பலவீனம், உங்களுக்கு சர்க்கரை வியாதியும்கூட இருக்கிறது. இயேசு உங்களை சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியானால் புறப்பட்டுச் செல்லுங்கள், கர்த்தராகிய இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக..?... உங்களுடைய பிரச்சனை, உங்கள் தொண்டையில் உள்ளது. ஆஸ்துமா தொல்லையால் உங்களுக்கு இருமல் உண்டாகிறது. உங்களால் படுத்துக்கொள்ள இயலாது. இவ்விதமாக ஒழுங்கு செய்யவேண்டும். உங்களை அவர் சுகப்படுத்திவிட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? சர்வ வல்லமையுள்ள தேவனே, இயேசுவின் நாமத்தில் இந்தப் பெண்ணுக்கு ஆசீர்வாதத்தை அருளிச் செய்யும். ஆமென். நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த போதே சிறுநீரகக் கோளாறு, மற்றும் உள்ள பிரச்சனைகள் உங்களை விட்டு அகன்றுவிட்டன என்று விசுவாசிக் கிறீர்களா?... உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசி யுங்கள். இன்சுலின் (insulin) போட்டுக் கொள்ளும் காரியத்தை நிறுத்துவதை எண்ணிப் பாருங்கள். கர்த்தர் உங்களைச் சுகப்படுத்திவிட்டார் என்பதை எண்ணிப் பாருங்கள். மகிழ்ச்சியாய் உங்கள் பாதையில் செல்லுங்கள். 97. இருதயப் பிரச்சனை. தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை, அப்படித்தானே? அவர் எல்லாவித நோய்களையும் சுகப்படுத்துகிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மகிழ்ச்சியோடு உங்கள் பாதையில் செல்லுங்கள், சந்தோஷத்தை அனுபவியுங்கள். நீங்கள்கூட அதேப் பிரச்சனை உடையவராய் இருக்கிறீர்கள். ஆகவே சென்று கொண்டேயிருங்கள்; தேவன் உங்களைச் சுகப்படுத்திவிட்டார். இக்கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இப்போதே அவர் சுகப்படுத்துவார், நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள் என்றால். அதை விசுவாசிப்பீர்களா? ஒரு நிமிடம் காலூன்றி நில்லுங்கள், "தேவன் நம்முடைய பெலனும், அடைக்கலமும், ஆபத்துக்காலத்தில் அனுகூல மான துணையுமானவர்." நெருக்கடிநிலை நடந்து கொண்டிருக்கிறது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. உங்கள் கரங்களை உயர்த்தி இப்போதே அந்த ஜீவ கம்பியை (lifeline - உயிர் காப்பான்) தொடுங்கள், அதைக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களாக.